கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம்: பக்தர்கள் வைகை ஆற்றில் எங்கே இறங்கலாம்?

Subscribe to Oneindia Tamil

மதுரை: கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வை காண பக்தர்கள் எந்த பகுதிகளில் ஆற்றில் இறங்கலாம் என்பது குறித்து பார்க்கலாம்.

மதுரையில் ஆண்டுதோறும் ஒவ்வொரு மாதமும் திருவிழாக்கள் நடைபெறும். இதன் முக்கிய நிகழ்வாக மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழாவும் அதன் தொடர்ச்சியாக அழகர் ஆற்றில் இங்கும் வைபவம் நடைபெறுகிறது.

What are the areas that People should enter into Vaigai Dam ahead of Chiththirai Thiruvizha


மீனாட்சி திருக்கல்யாணம் சைவ விழாவாகவும் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் வைணவ விழாவாகவும் கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால் சைவ வைணவ விழாக்களை ஒன்றுபடுத்தும் விதமாக திருமலை நாயக்கர் மன்னர் இந்த இரு விழாக்களையும் ஒன்றாக நடத்தி இரண்டையும் சித்திரை மாதத்திற்கு மாற்றினார்.

அது முதல் இரு நிகழ்வுகளும் ஒன்றாக நடந்து வருகிறது. இந்த மதுரை சித்திரை திருவிழா, அப்பகுதி மக்களுக்கு பெருவிழாவாக கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டு சித்திரை மாதம் மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் கொடுப்பதற்காக கள்ளழகர் மதுரைக்கு வருகிறார். அழகர் கோவிலில் உள்ள பதினெட்டாம்படி கருப்பன்சாமியிடம் உத்தரவு வாங்கிய பின்னரே கள்ளழகர் வேடம் தரித்து எதிர் சேவையாக அழகர் மதுரைக்கு கிளம்பி வருவார்.

வழி நெடுகிலும் பக்தர்கள் வைத்திருக்கும் மண்டப படிகளில் எழுந்தருளுவார். கள்ளழகர் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்குகிறார். இதனால் மழை பொழிந்து விவசாயம் செழிக்கும் என்பது ஐதீகம். நாளை தேனூர் மண்டபத்தில் மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் கொடுக்கிறார்.

இந்த சித்திரை திருவிழா அன்று மக்கள் கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் இந்த விழாக்களை காண்பர். ஆங்காங்கே நீர் மோர், ரோஸ்மில்க், உணவு ஆகியவற்றை தன்னார்வலர்களும் தொண்டு நிறுவனர்களும் வழங்குவர். கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் கொரோனா தாக்கம் இருந்ததால் சித்திரை திருவிழாவில் மக்கள் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்படவில்லை.

இதையடுத்து 2022 ஆம் ஆண்டு மீண்டும் சித்திரை திருவிழா கோலாகலமாக நடந்தது. இரு ஆண்டுகளுக்கு பிறகு நடந்த திருவிழா என்பதால் கட்டுக்கடங்காத மக்கள் கூடினர். இந்த கூட்டத்தில் சிக்கி இருவர் உயிரிழந்தனர். இதையடுத்து கடந்த ஆண்டு சித்திரை திருவிழா நேரத்தில் வைகை ஆற்றில் பக்தர்கள் இறங்க தடை என மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார். இதனால் குழப்பம் ஏற்பட்டது.

கள்ளழகர் வந்த நேரத்தில் பக்தர்கள் ஆற்றில் இறங்கினர். இதனால் ஏற்பட்ட கூட்டநெரிசலில் ஆற்றில் மூழ்கி 3 பேர் பலியாகிவிட்டனர். மேலும் கூட்டநெரிசலில் சிக்கி ஒருவர் பலியாகவிட்டார். ஆக மொத்தம் 4 பேர் பலியாகவிட்டனர். இந்த ஆண்டு அழகர் ஆற்றில் இறங்குவதை முன்னிட்டு வைகை அணையிலிருந்து 216 மில்லியன் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

இதனால் வைகை ஆற்றில் தற்போது நீர் பாய்ந்து ஓடி கொண்டிருக்கிறது. இந்த முறை அசம்பாவிதங்களை தடுக்க வைகை ஆற்றின் கரையோரங்களில் தீயணைப்புத் துறையினர் மூலம் நீச்சல் தடுப்பு குழுக்கள் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அது போல் சித்திரை திருவிழாவில் அழகர் ஆற்றில் இறங்கும் பகுதிகளை சுற்றிலும் 400-க்கும் மேற்பட்ட தற்காலிக மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

மக்கள் ஆற்றில் இறங்குவதற்கு தேவையான இறங்கு தளம் ஆற்றின் இரு புறமும் அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர அவசர மருத்துவ உதவிக்காக வைகை ஆற்றில் உள்ளேயே நான்கு மருத்துவ குழுக்கள், ஆற்றை சுற்றி மற்ற பகுதிகளில் 35 குழுக்கள் என 39 மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கடந்த முறை போல் எந்த அசம்பாவிதங்களும் நடைபெறக் கூடாது என்பதற்காக அனைத்து பாதுகாப்புகளையும் மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. மக்கள் கூடும் இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+