Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சந்திராஷ்டமம்..பயமோ பதற்றமோ வேண்டாம்..சிம்பிள் பரிகாரம்..ஈஸியாக பண்ணலாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சந்திராஷ்டமம் வந்தாலே பலருக்கும் பயமும் பதற்றமும் வந்து விடும். சந்திராஷ்டம நாளில் ஏற்படும் பாதிப்புகள் நீங்குவதற்கு நாம் சில எளிமையான பரிகாரத்தை செய்தால் பயமின்றி அந்த நாளினை கடந்து விடலாம் என்பது ஜோதிடர்கள் கருத்தாகும். நம்முடைய வீட்டிலேயே அந்த எளிமையான பரிகாரத்தை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

இன்றைக்கு ஜோதிடத்தில் ராசி பலன் பார்க்கும் பலரும் நமக்கு சந்திராஷ்டமம் என்றைக்கு என்று பார்ப்பது வழக்கமாகி விட்டது. சந்திராஷ்டமம் நாளில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளக்கூடாது என்று சொல்வார்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து போடக்கூடாது என்றும் சொல்வார்கள்.

 What is Chandrashtama and do this simple Parikaram

சந்திராஷ்டமம் என்றால், சந்திரன்+அஷ்டமம் = சந்திராஷ்டமம். சந்திரன் உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கும் இரண்டேகால் நாட்களைத்தான் சந்திராஷ்டம காலம் என்கிறோம். அதிலும் குறிப்பாக நீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு 17வது நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்யும் காலம்தான் சந்திராஷ்டம நாளாகும்.

ஒருவருடைய மனதுக்கு அதிபதி சந்திரன். அவர் ஒரு ராசிக்கு எட்டாவது வீட்டில் மறைவு பெற்றிருக்கும்போது, மனதில் தேவையற்ற சஞ்சலங்கள் ஏற்படக்கூடும். மனம் அமைதியின்றி தவிக்கவும் நேரிடும். தெளிவான முடிவுகளை எடுக்க முடியாமல் போகும். எனவேதான் பெரும்பாலானோர் சந்திராஷ்டம தினங்களில் எந்த ஒரு புது முயற்சியிலும் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டும் என்று முடிவு செய்வர். உண்மையில் சந்திராஷ்டமம் என்பது எல்லோருக்கும் கெடுதல் செய்யுமா என்றால் அதுதான் இல்லை.

சந்திராஷ்டமம் என்றாலே, இன்றைக்கு எல்லோர் மனதிலும் ஒருவித அச்ச உணர்வு ஏற்படுகிறது. ஆனால், அப்படிப் பயப்படத் தேவையில்லை. சந்திராஷ்டமம் எல்லா நட்சத்திரக்காரர்களுக்கும் தொல்லை தராது. மேலும் ரிஷபம் மற்றும் கடக ராசியில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் நல்லது மட்டுமே செய்யும் என்பது ஜோதிடர்கள் கருத்தாகும்.

சந்திராஷ்டமம் என்பது ஒரு ராசியில் இருந்து எட்டாவது ராசியில் சந்திரன் சஞ்சரிக்கக்கூடிய காலமாகும். இதை மிகச் சரியாகக் குறிப்பிட்டுச் சொல்வதென்றால் ஒரு நட்சத்திரத்துக்குப் பதினேழாவது நட்சத்திரத்தின் பாதத்தில் சந்திரன் சஞ்சரிக்கும்போது அந்த நட்சத்திரத்துக்கு சந்திராஷ்டமம் வரும். உதாரணமாக விருச்சிகராசியில் சந்திரன் சஞ்சரிக்கும்போது, அந்த ராசி மேஷ ராசிக்கு எட்டாவது ராசியாக அமைகிறது. எனவே விருச்சிக ராசியில் சந்திரன் இருக்கக்கூடிய இரண்டே கால் நாள்கள் மேஷ ராசிக்கு சந்திராஷ்டம நாள்களாகும். ஆனால், மேஷராசியில் பிறந்தவர்கள் அனைவருக்கும் இரண்டே கால் நாள்கள் சந்திராஷ்டமம் என்று சொல்லிவிட முடியாது.

துல்லியமாகச் சொல்வதென்றால், மேஷ ராசியில் அசுவினி, பரணி, கிருத்திகை முதல் பாதம் என்று இரண்டு நட்சத்திரங்கள் இடம் பெற்றிருக்கின்றன. அதேபோல் விருச்சிக ராசியில் விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை ஆகிய நட்சத்திரங்கள் இடம் பெற்றிருக்கின்றன. அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திரன் விருச்சிக ராசியில் அனுஷ நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும்போது சந்திராஷ்டம நாளாகும். மேஷ ராசி பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திரன் அதே விருச்சிக ராசியில் கேட்டை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் நாள் சந்திராஷ்டம நாளாகும். மேஷ ராசி கிருத்திகை நட்சத்திரம் முதல் பாதத்தில் பிறந்தவர்களுக்கு சந்திரன் விருச்சிக ராசியில் கேட்டை நட்சத்திரம் 4-ம் பாதத்தில் சஞ்சரிக்கும் வேளை சந்திராஷ்டம காலமாகும். கிருத்திகை 2, 3, 4 ஆகிய பாதங்களில் பிறந்தவர்களுக்கு சந்திரன் மூலம் நட்சத்திரம் தனுசு ராசியில் சந்திரன் சஞ்சரிக்கும் வேளை சந்திராஷ்டம நாளாகும்.

சந்திரனைப் பற்றி மற்றுமொரு விஷயத்தையும் குறிப்பிடவேண்டும். சந்திரன் மாத்ருகாரகன். எனவே ஒருவருக்கு சந்திராஷ்டம நாளில் தாயுடன் கருத்துவேறுபாடு, தாய்வழி உறவினர்களுடன் வீண் மனஸ்தாபம் போன்ற பலன்களும் ஏற்படும். ஜோதிட ரீதியாக பொதுவாக ஒரு நாளுக்கு பலன் பார்க்கும் போது சந்திரனை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும்.

அதனால்தான் ஜனன கால சந்திரனுக்கு கோசார சந்திரன் எந்த நிலையில் இருக்கிறாரோ அதை வைத்து முடிவு செய்கிறோம். கடகம் மற்றும் ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டம நாள் கெடுதல் செய்யாது. காரணம் கடகம் சந்திரன் ஆட்சி பெறும் ராசி என்பதாலும், ரிஷபம் சந்திரன் உச்சம் பெறும் ராசி என்பதாலும் அந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு சந்திரன் நன்மையே செய்வார்.

அதேபோல் தன்னுடைய நட்சத்திரங்களான ரோகிணி - அஸ்தம் - திருவோணம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டம தினத்தில் நல்லது மட்டுமே நடக்கும். வளர்பிறையில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டம தினத்தில் நன்மை நடக்கும். அதனால் சந்திராஷ்டமம் என்றால் எல்லோருக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் என்று சொல்லக் கூடாது.

சந்திராஷ்டம நாளில் விநாயகருக்கு பால் அபிஷேகம் செய்வது நல்லது. அம்மன் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்து வரலாம். சந்திராஷ்டம நாளில் எந்த ஒரு செயலையும் ஆரம்பிக்கும் முன் குலதெய்வத்தையும், முன்னோர்களையும், இஷ்டதெய்வத்தையும் வணங்கிவிட்டு ஆரம்பிப்பது நன்மை தரும். இப்படிச் செய்தால் காரியத்துக்கு எந்தத் தடையும் வராது.

சந்திராஷ்டமம் நாளில் காலை எழுந்தவுடன் குளித்து முடித்துவிட்டு சந்திரனை நினைத்து ஓம் ஸ்ரீ சந்திராய நமஹ' என்ற மந்திரத்தை உச்சரித்து விட்டு, அதன் பின்பு அன்றாட வேலைகளை தொடங்கினால் சந்திராஷ்டமத்தால் உங்களுக்கு பெரிய பிரச்சினைகள் எதுவும் வராது. அதே போல வெண்மை நிற பொருட்கள் பாதிப்படைவது. அடுப்பில் வைத்த பால் பொங்குவது. உணவு வீணாவது என இயற்கையாக நடப்பது சந்திராஷ்டம தோஷத்தை போக்கிவிடும்.

 What is Chandrashtama and do this simple Parikaram

சந்திராஷ்டம நாளில் பரிகாரமாக செல்பி எடுத்து பதிவிடுகின்றனர். செல்போன் வந்த பிறகு பலரும் சாதாரணமாகவே செல்பி எடுப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். அரசியல் தலைவர்களும், திரை நட்சத்திர பிரபலங்களும் கூட சந்திராஷ்டம நாளில் செல்பி எடுத்து முகநூல் பக்கத்திலும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தள பக்கத்திலும் பதிவிட்டால் பாதிப்பு குறையும் என்பது ஜோதிடர்களின் கருத்தாகும்.

சந்திராஷ்டம நாள் என்று உங்களால் முடிந்த வரை ஊனமுற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். எந்த உதவியாக இருந்தாலும் சரி, ஒரே ஒரு ஊனமுற்றவர்களுக்கு அந்த உதவியை செய்து விடுங்கள். சந்திராஷ்டம நாளில் ரசகுல்லா சாப்பிட தோஷம் நீங்கிவிடும். அதேபோல சந்திராஷ்டம நாளில் கைகளில் மஞ்சள் கயிறு கட்டிக்கொள்ளலாம் பாதிப்பு குறையும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+