தென்னாடுடைய சிவனே போற்றி! ஏன் வடநாட்டு சிவன் என சொல்வதில்லை தெரியுமா?
சென்னை: தென்னாடுடைய சிவனே போற்றி என்கிறோமே, ஏன் வடநாட்டு சிவன் என சொல்வதில்லை என்பதற்கான காரணம் தெரியுமா?
தென் நாட்டை போல் வடமாநிலங்களிலும் சிவனை மக்கள் வழிபடுகிறார்கள். சிவராத்திரி அன்று அவர்கள் தங்கள் கைகளாலேயே சிவனுக்கு பூஜை செய்கிறார்கள். இதை அவர்கள் வடநாட்டில் மட்டுமில்லை, பிழைப்பதற்காக சென்னை வந்திருந்தாலும் கூட அங்கும் அதே பழக்கத்தை செய்கிறார்கள். மேலும் விரதமிருக்கிறார்கள். சிலர் பிரதோஷங்களை கூட வழிபடுகிறார்கள்.

திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்கிறார்கள். பொதுவாக வடஇந்தியர்கள் துர்கா, சிவன், பெருமாள், விநாயகர் உள்ளிட்ட தெய்வங்களை வழிபடுகிறார்கள். அப்படியிருக்கும் போது வடநாடுடைய சிவனே என ஏன் அழைப்பதில்லை என்பதற்கான பதிலை தெரிந்து கொள்ளலாம்.
இதுகுறித்து நானறிந்த ஆன்மீகம் எனும் சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: தென்னாடுடைய சிவனே போற்றி! அப்படின்னா வடநாட்டு சிவன்? ஏன் அப்படிச் சொல்கிறார்கள். தென்னாட்டு சிவன்தான் அசல்.
வடநாட்டு சிவன் அப்படியல்ல. ஏனெனில் வடநாட்டு சிவன் ருத்திரனாக மட்டுமே பாவிக்கப்படுகிறார். இது இங்குள்ள சைவமரபு.
தென்னாட்டின் முக்கிய சிவன் கோவில்கள் அனைத்தும் ஆகம விதிப்படி கட்டப்பட்டவை. வடநாட்டில் அப்படி அல்ல. இங்கு கோவில் கருவறையில் லிங்கத்தை தொட்டு வழிபட உரிமையில்லை.
வடநாட்டில் தொட்டு வழிபடலாம். காசியில் உள்ள சிவன் கோவில் உட்பட.
அதற்காக அங்கு தீண்டாமை இல்லை என்பது அர்த்தமல்ல. படைப்புத் தொழிலை பிரம்மாவும், காக்கும் தொழிலை விஷ்ணுவும், அழிக்கும் தொழிலை சிவனும் செய்வதாக கூறுவது வடநாட்டு மரபு.
தென்னாட்டில் எல்லாத்தொழிலையும் (முத்தொழில்) சிவனே செய்கிறார் என்று நம்புவது தென்னாட்டு சைவ சித்தாந்த மரபு. இங்கு படைத்தல், காத்தல், அழித்தல் போக மேலும் இரண்டு தொழிலை சிவன் செய்கிறார்.
அது மறைத்தல், அருளல். எனவே தென்னாட்டு சிவன் ஐந்தொழில் செய்பவராக இங்கு நிலைநிறுத்தப் பட்டுள்ளார். இந்த ஐந்தொழிலை ஆற்றுவதை விளக்குவதுதான் சிதம்பரம் கோவில் நடராஜர் வடிவம். நடனத்தின் அரசனாக சிவனை பார்ப்பது தென்னாட்டில் மட்டுமே. எனவே தென்னாடுடைய சிவனே போற்றி! இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்பார்கள். இதற்கு அர்த்தம் என்னவெனில் எந்த நாட்டில் உள்ளோரும் உன்னை (இறைவனாக) இறையாகக் கண்டு போற்றுகிறார்கள்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications