பீரோவை இந்த திசையில் வையுங்க.. உங்க பீரோவுக்குள் இதை மட்டும் போட்டு வைங்க.. பணம் நிற்காமல் வருமாம்
சென்னை: வீட்டில் செல்வம் பெருக வேண்டுமா? பணம் தங்கியிருக்க வேண்டுமா? இதுகுறித்து வாஸ்துவில் சொல்லப்படும் குறிப்புகள் என்னென்ன?
நம்முடைய வீட்டில் பணம் மற்றும் நகைகளை சேமித்து பாதுகாப்பாக வைக்கும் பழக்கம் பல வருட காலமாகவே உண்டு.. ஆனால், ஒரு சிலர் வாஸ்துவை சரியாக பார்க்காமல், விருப்பமான இடங்களில் தங்க நகைகளையோ, பணத்தையோ பாதுகாப்பாக வைப்பார்கள்.

ஆனால், பணம், நகை உள்ளிட்ட வாஸ்து படி வைப்பதால், அவை இன்னும் அதிகமாக பெருகும் என்பது குறித்துதான் வாஸ்துவில் குறிப்பிடப்பட்டுள்ளன.
வடமேற்கு திசை: அந்தவகையில், வடமேற்கில் பீரோ இருந்தால், சேமிக்கவே முடியாமல் கடன்தொல்லை வந்துவிடுமாம். தென்கிழக்கில் பீரோ இருந்தால், வீண் செலவுகள் வருவதுடன், கொடுத்த பணமும் திரும்பக் கிடைக்காமல் போய்விடும். கிழக்கில் பீரோ வைத்தால், எவ்வளவு பணம் வந்தாலும் தங்காது. வீண் செலவுகளும், கவலைகளும் வீட்டில் குடியேறிவிடும்.
தெற்குப் பார்த்த வீட்டின் வடக்கு சுவர் ஓரமாக, தெற்கு பார்த்து பீரோ வைத்திருப்பவர்கள் வீட்டில், பெண்களுக்கு மருத்துவ செலவை அதிகமாகிவிடும். மேற்குப் பார்த்த வீட்டுக்குக் கிழக்குச் சுவர் சார்ந்து, மேற்கு பார்த்து பீரோ இருக்குமேயானால், ஆண்களுக்கான வைத்திய செலவுகள் அதிகரிக்கும்.
குபேர பார்வை: எனவே, பணம் தட்டுப்பாடின்றி கிடைக்கவேண்டுமானால், நடு வடக்கு திசை நன்றாக இருக்க வேண்டும். இந்த திசையானது குபேரன் பார்வை தெளிவாக விழும் பகுதி இதுவென்பதால், கிச்சன், படிக்கட்டு என்று எதுவுமே இங்கு இருக்கக்கூடாது.
அந்தவகையில், வடக்கு திசை அல்லது கிழக்கு திசை பார்த்து பீரோ வைக்கலாம். கிழக்குப் பார்த்து பீரோவை வைத்தால், நிம்மதியும், லாபமும் கிடைக்கும்.. பீரோ வடக்கு நோக்கி திறக்கப்பட வேண்டும் என்பது மிகவும் முக்கியம். பீரோவைத் திறக்கும்போது நம் முதுகு வடக்கு நோக்கி இருக்க வேண்டுமாம்.
வடக்கு திசை: தென்மேற்கு திசையை பார்த்தவாறு பீரோ வைத்திருந்தால் நாம் வைக்கும் பணம் பெருக ஆரம்பிக்கும். பீரோவின் பின்புறம் தெற்கு திசை நோக்கியும் முன்புறம் வடக்கு திசை நோக்கியும் அமைய வேண்டும்.
ஒருவேளை பீரோவைத் தெற்கு மூலையில் வைக்க இடம் இல்லாதவர்கள் பீரோவின் பின்புறம் மேற்கு திசை நோக்கியும், முன்புறம் கிழக்கு திசை நோக்கியும் இருக்குமாறு வைத்துக் கொள்ளலாம். இதனால் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்கள் விலகி, நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.
வாயு பகவான்: ஆனால், 4 மூலைகளிலும் கொஞ்சம் இடைவெளி விட்டு பீரோவை வைக்க வேண்டும். காரணம், இந்த இடைவெளியில் வாயு பகவான் ஊடுருவி செல்வாராம்.. இடைவெளி இல்லாமல் பீரோவை சுவற்றையொட்டி வைத்தால், பணத்தடை ஏற்படும் என்கிறார்கள்.
எக்காரணம் கொண்டும் வடமேற்கு பகுதியில் பீரோவை வைக்கக்கூடாது. தெற்கு நோக்கியும் வைக்கக்கூடாது.. பணம் எவ்வளவு வந்தாலும் வீட்டில் தங்காது. அதேபோல அக்னி மூலையில் அதாவது சமையல் செய்யும் இடத்திலும் பீரோவை வைக்கவே கூடாது. இதனால் பணக்கஷ்டம் இன்னும் அதிகமாகிவிடும்.
தங்க நாணயங்கள்: பீரோவுக்குள் மகாலட்சுமி படம் பொறித்த தங்க நாணயங்களை வைத்தால் பணவரவு அதிகரிக்கும்... அதேபோல தங்கத்தகடு கலந்த பிரமிடு, வெள்ளி பிரமிடு போன்றவற்றையும் புதன், வியாழன் வெள்ளி போன்ற கிழமைகளில் வைத்தால், அதிர்ஷ்டம் கூடும்.. குபேரனின் சிலையையும் வாங்கி வைத்தால் வீட்டில் பணவரவு தட்டுப்பாடில்லாமல் வரும். பீரோவிலிருந்து பணம் எடுக்கும்போது செருப்பு அணியக்கூடாது என்பார்கள்.












Click it and Unblock the Notifications