இறந்தவர்களின் போட்டோவை வீட்டில் 2 இடத்தில் வைக்க கூடாது? தூங்கும்போது இந்த திசையில் கால் நீட்டாதீங்க
சென்னை: நம்முடைய வீட்டில் வாஸ்துவில் ஏதாவது குறைபாடுகள் வந்துவிட்டால், அது ஒட்டுமொத்த குடும்பத்தின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தையும் வெகுவாக குலைத்துவிடும். எனவே, நாம் பயன்படுத்தும் வீட்டு பொருட்களைகூட, சரியான திசையில், சரியான இடத்தில் வைக்க வேண்டும். அந்தவகையில், ஒருசில பொருட்களை பற்றி பார்ப்போம்.
வடக்கு திசையானது, இறை வழிபாட்டுக்குரிய திசையாகும். இந்த வடக்கு திசையில்தான், குரு உபதேசம் பெற முடியும் என்பார்கள்.. ஈசனின் திருக்கயிலாயமும் வடக்கு புறத்தில்தான் அமைந்துள்ளது. எனவேதான், வடக்கு திசையில் தலை வைத்து படுக்க கூடாது என்று அறிவுறுத்துகிறார்கள்.

வடக்கு திசை: அதுமட்டுமல்ல, வடக்கில் தலை வைத்து படுத்தால், கால்கள் தெற்கு நோக்கி இருக்கும்.. இந்த தெற்கு திசை, யமனுக்குரிய திசையாகும். வடக்கு திசை குபேரனுக்கு உரிய திசையாகவும் உள்ளது. குபேரனின் திசையிலேயே நாமும் தலைவைத்து படுத்தால், வறுமைக்குள் சிக்கிவிடலாம். பிணங்களின் தலையை வடக்கு திசையை நோக்கிதான் வைப்பார்கள். எனவேதான, தாழ்ந்தாலும் வாழ்ந்தாலும் வடக்கே தலை வைத்து படுக்கக்கூடாது என்று சொல்வார்கள்.
இதற்கு அறிவியல் காரணங்களும் உள்ளன. பூமியின் வடக்கு திசையில் நேர் மின்னோட்டமும், தெற்கு திசையில் எதிர் மின்னோட்டமும் உள்ளதைபோலவே, மனித உடலின் தலையில் நேர் மின்னோட்டமும், கால் எதிர் மின்னோட்டமும் கொண்டது. எப்போதுமே எதிரெதிர் துருவங்கள் தான் ஈர்க்கப்படும்.. ஒரே துருவங்களில் தலைவைத்து படுத்தால், மின்னோட்டங்களுக்கு இடையே இடையூறு ஏற்பட்டு, உடலின் ஆற்றல் பாதிக்கப்படும். இது ஆரோக்கிய தொந்தரவுகளை தந்துவிடும்.
மூளை பாதிப்பு: இந்த வடக்கு திசையில்தான் மின்னணு காந்த கதிர்களின் தாக்கம் அதிகமாக இருக்கும். எனவே வடக்கு தலை வைத்து படுத்தால், ரத்தம், மூளைக்கு அதிகமாக இழுக்கப்பட்டு மூளை பாதிக்கப்படும் என்று ஆய்வுகள் சொலகின்றன. மன ரீதியான குழப்பம், கோபம், எரிச்சல், விரக்தி போன்றவை பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் வடக்கில் தலை வைக்கக்கூடாது என்கிறார்கள்.
அதேபோல, வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டிலுள்ள பொருட்களையும் சரியான திசையில் வைத்து புழங்க வேண்டும். நாம் தெரியாமல் செய்யும் தவறுகளால்கூட, நமக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் கிடைக்காமல் போகலாம்.
கடிகாரங்கள்: உதாரணத்துக்கு நாம் வீட்டில் சுவற்றில் மாட்டி வைக்கும் கடிகாரங்களை கூட சரியான முறையில் தேர்ந்தெடுக்க வேண்டும். கடிகாரத்தின் நிறமும், வடிவமும் மிகவும் அவசியமாகும். அதேபோல, சரியான திசையில், சரியான இடத்தில் வைப்பதிலும் கவனமாக செயல்பட வேண்டும். அதன்படி, கிழக்கு திசையில் வைக்கப்படும் கடிகாரம் மங்களகரமானது என்பார்கள்.. வடக்கு திசையில் வைக்கப்படும் கடிகாரமும் நல்ல பலனை தரும் என்பதால், இந்த 2 திசைகளையும் கடிகாரங்கள் வைக்க பயன்படுத்தலாம்.
ஆனால் எக்காரணம், கடிகாரத்தை தெற்கு திசையில் வைக்கக்கூடாது. அதேபோல, கடிகாரத்தை கதவுக்கு மேல் வைக்கக்கூடாது. . உடைந்த கடிகாரம் அல்லது இருண்ட கடிகாரம் வீட்டில் வைத்திருப்பது துரதிர்ஷ்டம் ஆகும். வாஸ்து சாஸ்திரத்தின்படி வீட்டின் வடக்கு திசையில் கண்ணாடி வைப்பது மிகவும் நல்லது என்பார்கள். இதனால், எதிர்மறை ஆற்றல் வீட்டிற்குள் நுழையாது.
முன்னோர்கள் படம்: பூஜை அறையில் எப்போதும் முன்னோர்களின் படங்களை வைக்கக் கூடாது... இறந்தவர்களின் படங்களை தெய்வங்களுடன் சேர்த்து வைக்கக்கூடாது. வீட்டிலுள்ள படுக்கையறையில் இறந்தவர்களின் படங்களை வைக்கக் கூடாது. இதனால் தம்பதிக்குள் தகராறு வெடிக்கும், குடும்ப வாழ்க்கையே சிக்கலாகிவிடும். பூஜை அறை, படுக்கை அறையை தவிர்த்து விட்டு மற்ற எந்த இடத்தில் வேண்டுமானாலும் நமது முன்னோர்களின் படங்களை வைத்து வழிபடலாம்.
அதேபோல, வீட்டின் வடமேற்கு திசையில் கனமான அலமாரியையோ, பெட்டகத்தையோ வைக்கக்கூடாது. ஏனென்றால், வடமேற்கு திசையை நிலையற்ற திசை என்பார்கள்.. அதனால், வீட்டின் வடமேற்கு திசையில் பாதுகாப்பு பெட்டகம், அலமாரி போன்றவற்றை வைத்தால், பணத்தட்டுப்பாடு குடும்பத்தில் ஏற்படுமாம்.
முள் மரங்கள்: அதேபோல, வீட்டின் நுழைவாயிலுக்கு நேராக, முள் மரங்களை நடக்கூடாது என்பார்கள்.. முள் செடிகள் எந்த வீட்டில் உள்ளதோ, அந்த வீட்டில் மகிழ்ச்சி தங்குவதில்லையாம்... அதேபோல, வீட்டுக்கு வெளியே செங்கற்களை வைத்திருக்கக்கூடாது. இது ஒருவரை முன்னேற செய்யவிடாமல் தடைக்கற்களாகவே தங்கிவிடுமாம். துளசி செடியை வீட்டின் வடக்கு திசையில் வைக்க வேண்டும். இதனால் வீட்டில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவுவதுடன், முன்னேற்றத்தில் இருக்கும் தடைகளும் விலகிவிடும்.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம












Click it and Unblock the Notifications