தமிழ்நாடு சட்டசபை தேர்தல்
முகப்பு தமிழக சட்டமன்றத் தேர்தல் கருத்துக்கணிப்பு & எக்ஸிட் போல் முடிவுகள்

2021 தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல் கருத்துக்கணிப்பு & எக்ஸிட் போல் முடிவுகள்

அரசியல் அனல் பறக்கும் மாநிலம் தமிழகம். ஏப்ரல் 6ஆம் தேதி இங்கு சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவு முடிந்ததும் எக்ஸிட் போல் முடிவுகள் உடனே வெளியாகும். ஆனால் இதில்தான் ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் முடிந்ததும் கிட்டத்தட்ட எல்லா எக்ஸிட் போல் முடிவுகளும் திமுக ஆட்சியை பிடிக்கும் என்றுதான் கூறின. ஆனால் நடந்தது என்ன? அதிமுக 135 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. திமுக 88 தொகுதிகளை வென்றது. இப்போது நடைபெறும் சட்டசபை தேர்தல் முடிவுகள் மே 2-ஆம் தேதி வெளியாக உள்ளன. ஆனால், வாக்காளர்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதை எக்ஸிட் போல் முடிவுகள் நமக்கு காட்டும் என்று நம்பலாம். கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகிய இரு பெரும் தலைவர்கள் இல்லாமல் திமுக மற்றும் அதிமுக மோதிக்கொள்ளும் இந்த தேர்தல் களம் எப்படி இருக்கப்போகிறது என்பதை அறிந்துகொள்ள ஒட்டுமொத்த இந்தியாவும் காத்திருக்கிறது. மக்கள் மூன்றாவது ஒரு கட்சியை தேர்ந்தெடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பும் பரவலாக எழுந்துள்ளது. இது அத்தனைக்கும் எக்ஸிட் போல் முடிவுகள் ஒரு பதிலை தரப் போகின்றன. எனவே தமிழ்நாடு சட்டசபை தேர்தல் முடிவுகளை அறிந்துகொள்ள ஒன் இந்தியாவுடன் எப்போதும் இணைப்பில் இருங்கள்.

தமிழ் நாடு தமிழக சட்டமன்றத் தேர்தல் எக்ஸிட் போல் முடிவுகள்

Channels
திமுக+
அதிமுக +
அமமுக +
மநீம+
மற்றவர்கள்
புதிய தலைமுறை
151 - 158
76 - 83
0
0
0
ஸ்பைக் மீடியா -எம்சிவி
158
74
2
0
0
டைம்ஸ் நவ் - சி வோட்டர்
177
49
3
3
2
ஏபிபி நியூஸ் - சி வோட்டர்
161 - 169
53 - 61
1-5
2-6
3-7

2021 புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் கருத்துக்கணிப்பு & எக்ஸிட் போல் முடிவுகள்

புதுச்சேரி யூனியன் பிரதேசம் கடந்த சில மாதங்களாக ரொம்பவே பல அரசியல் உரசல்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறது. ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இத்தனை களேபரங்களுக்கு பிறகு நடைபெறும் சட்டசபை தேர்தலில் மக்கள் யாருக்கு ஆதரவு அளிப்பார்கள் என்ற கருத்து ஓட்டத்தை அறிவதற்கு எக்ஸிட் போல் முடிவுகள் நமக்கு உதவக்கூடும். 2016 ஆம் ஆண்டு கிட்டத்தட்ட தேர்தல் முடிவுகளை சரியாகக் கணித்தது எக்ஸிட் போல்கள். காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி 16 தொகுதிகளில் வெல்லும் என்றும், என்ஆர் காங்கிரஸ் 10 தொகுதிகளை வெல்லும் என்றும் எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவித்தன. அதிமுகவுக்கு 3 தொகுதிகள், பிற கட்சிகளுக்கு ஒரு தொகுதி என்று எக்ஸிட் போல் சொல்லியது. இந்த தேர்தலில் காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சியை பிடித்தது என்பது வரலாறு. இந்த வருடமும் தேர்தல் முடிவுகளை எக்ஸிட் போல்கள் சரியாக கணிக்குமா. புதுச்சேரி ரிசல்ட் என்னவாகும் என்பதைப் பற்றி தெரிந்துகொள்ள ஒன் இந்தியா தளத்துடன் எப்போதும் இணைப்பில் இருங்கள்.

புதுச்சேரி தமிழக சட்டமன்றத் தேர்தல் எக்ஸிட் போல் முடிவுகள்

Channels
என்டிஏ
யுபிஏ
மற்றவர்கள்
டைம்ஸ் நவ் - சி வோட்டர்
18
12
0
ஏபிபி நியூஸ் - சி வோட்டர்
16-20
14-10
0

2021 கேரளா சட்டமன்றத் தேர்தல் கருத்துக்கணிப்பு & எக்ஸிட் போல் முடிவுகள்

140 உறுப்பினர்களை கொண்டது கேரள சட்டமன்றம். ஏப்ரல் 6ஆம் தேதி இங்கு தேர்தல் நடக்கப் போகிறது. கடவுளின் பூமி என்று வர்ணிக்கப்படும் இந்த மாநிலத்தின் தேர்தல் முடிவுகளை அறிந்துகொள்ள ஒட்டுமொத்த நாடும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது. 2016ஆம் ஆண்டு எக்ஸிட் போல் முடிவுகள் கிட்டத்தட்ட சரியாக கணித்தன. 74 முதல் 82 தொகுதிகள் வரை இடதுசாரிகள் கூட்டணி வெல்ல கூடும். 54 முதல் 62 வரை காங்கிரஸ் கூட்டணி வரக்கூடும் என்று தெரிவித்தன. அதேபோல, அங்கு இடதுசாரிகள் கூட்டணி ஆட்சியை பிடித்தது. இந்த முறை பாஜக மும்முரமாக இறங்கியுள்ளது. முதல் முறையாக பல தொகுதிகளை அங்கு அதிகமாக பாஜக பெற முயல்கிறது. அப்படி பெற முடியுமா அல்லது இருப்பதையும் இழக்க போகிறதா? என்னவெல்லாம் சர்ப்ரைஸ் கொடுக்க காத்திருக்கிறது கேரளா என்பதை அறிய எக்ஸிட் போல் முடிவுகளை பார்க்க தயாராகுங்கள். இதற்காக ஒன் இந்தியா இணைய தளத்துடன் இணைந்திருங்கள்.

கேரளா தமிழக சட்டமன்றத் தேர்தல் எக்ஸிட் போல் முடிவுகள்

Channels
எல்டிஎப்
யுடிஎப்
என்டிஏ
மாத்ருபூமி - சி வோட்டர்
73–83
56–66
0–1
மனோரமா - விஎம்ஆர்
77–82
54–59
0–3
டைம்ஸ் நவ் - சி வோட்டர்
77
62
1
மாத்ருபூமி - சி வோட்டர்
75–83
56–64
0–2
ஏபிபி நியூஸ் - சி வோட்டர்
77–85
54–62
0–2
மீடியா ஒன் -பொலிடிக் மார்க்கர்
74–80
58–64
0–2
24 நியூஸ்
72–78
63–69
1–2
லோக் போல்
75–80
60–65
0–1
ஸ்பைக் மீடியா சர்வே
85
53
2
ஏசியாநெட் நியூஸ் - சி போர்
72–78
59–65
3–7

2021 மேற்கு வங்கம் சட்டமன்றத் தேர்தல் கருத்துக்கணிப்பு & எக்ஸிட் போல் முடிவுகள்

தினம் தினம் ஒரு பரபரப்புடன் இருக்கக்கூடிய தேர்தல் களம் என்றால் அது மேற்குவங்கம்தான். ஆட்சியில் இருக்க கூடியவர்களுக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்புகளை வழங்கக்கூடிய மாநிலமாக அறியப்படுவது மேற்குவங்கம் . மூன்றாவது முறையாக மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை பிடித்துவிடலாம் என்று ஆசைப்படுகிறது. ஆனால் முன்னெப்போதும் இல்லாத வகையில் பாஜக பெரும் போட்டியை உருவாக்கி மம்தா பானர்ஜிக்கு முட்டுக்கட்டையாக மாறியுள்ளது. இடதுசாரிகளுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 211 தொகுதிகளை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. அந்த தேர்தலில் மம்தா பானர்ஜி கட்சி 178 தொகுதிகள் வரை வெல்லக் கூடுமென்று எக்ஸிட் போல் முடிவுகள் வந்தன. கிட்டத்தட்ட யாருக்கு வெற்றி என்பதை எக்ஸிட் போல் சரியாகக் கணித்தது. 2021 ஆம் ஆண்டு மேற்கு வங்க சட்டசபை தேர்தல் முடிவுகளை அறிந்துகொள்ள ஒன் இந்தியா இணையதளத்துடன் இணைந்து இருங்கள்.

மேற்கு வங்கம் தமிழக சட்டமன்றத் தேர்தல் எக்ஸிட் போல் முடிவுகள்

Channels
ஏஐடிசி +
பாஜக +
சஞ்சுக்கதோ மோர்ச்சா
மற்றவர்கள்
டைம்ஸ் நவ் - சி வோட்டர்
146-162
99-112
29-37
0
இந்தியா நியூஸ் - ஜான் கி பாத்
118-134
150-162
14-Oct
0
ஏபிபி நியூஸ் - சி வோட்டர்
158
102
30
4
ஏபிபி நியூஸ் - சிஎன்எக்ஸ்
154-164
102-112
22-30
1-3
ஏபிபி நியூஸ் - சி வோட்டர்
150-166
98-114
23-31
3-5
ப்ரியோ பந்து மீடியா
82
185
24
3
டைம்ஸ் டெமாக்ரசி
151
131
12
0

2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் கருத்துக்கணிப்பு & எக்ஸிட் போல் முடிவுகள்

மூன்று கட்டங்களாக தேர்தலை சந்திக்கிறது வடகிழக்கு மாநிலமான அஸாம். ஏப்ரல் 6-ஆம் தேதி இறுதி கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. எக்ஸிட் போல் முடிவுகள் என்னவாக இருக்கும் என்பதை அறிய அனைத்து தரப்பினர் கவனமும் போயுள்ளது . ஏனென்றால் 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது பாஜக ஆட்சி அமைக்கும் என்று சரியாக கணித்தன எக்ஸிட் போல்கள். இந்த முறையும் சரியான கணிப்பு இருக்குமா, காங்கிரஸ் அங்கு மீண்டும் எழுச்சி பெறுமா என்பதை அறிந்துகொள்ள, எக்ஸிட் போல் சார்ந்த செய்திகளுக்கு ஒன் இந்தியா இணைய தளத்துடன் இணைந்திருங்கள்.

அசாம் தமிழக சட்டமன்றத் தேர்தல் எக்ஸிட் போல் முடிவுகள்

Channels
என்டிஏ
யுபிஏ
மற்றவர்கள்
டிவி 9 பரத்வர்ஷ்
73
50
3
டைம்ஸ் நவ் - சி வோட்டர்
65-73
52-60
0-4
ஏபிபி நியூஸ் - சி வோட்டர்
65-73
52-60
0-4
இந்தியா நியூஸ் - ஜான் கி பாத்
68-78
48-58
0

2021 தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல் கருத்துக்கணிப்பு & எக்ஸிட் போல் முடிவுகள்

தமிழகத்தில் அரசியல் பீவர் அதிகரித்து வருகிறது. ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழகம் முழுக்க ஒரே கட்டத்தில் தேர்தல் நடக்கிறது. 30 வருடங்களுக்கு பிறகு பிறகு ஜெயலலிதா மற்றும் கருணாநிதி இல்லாத நிலையில் ஒரு வரலாற்றுத் தேர்தல் தற்போது நடக்கிறது. திமுக மற்றும் ஆளும் அதிமுகவின் கூட்டணிக்கு இடையில் தான் தமிழ்நாட்டில் பலப்பரீச்சை நடக்கிறது. மீண்டும் முதல்வர் பழனிசாமியை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்கிறார்களா அல்லது ஸ்டாலினை முதல்வராக தேர்வு செய்வார்களா? அல்லது இரண்டும் பேரும் இல்லாமல் கமல்ஹாசன் வாக்காளர்களை கவர்ந்திழுப்பாரா? வாக்குகள் எப்படி செல்லும், யார் பக்கம் செல்லும் என்று கேள்விகள் எழுந்துள்ளன. பல நிறுவனங்கள் நடத்திய கருத்துக்கணிப்பு நிலவரம் இங்கே உள்ளது. மக்களின் இறுதி முடிவு மே 2 ஆம் தேதியே தெரிய வரும்.

தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள்

Channels
திமுக+
அதிமுக +
அமமுக +
மநீம+
மற்றவர்கள்
புதிய தலைமுறை
151 - 158
76 - 83
0
0
0
ஸ்பைக் மீடியா -எம்சிவி
158
74
2
0
0
டைம்ஸ் நவ் - சி வோட்டர்
177
49
3
3
2
ஏபிபி நியூஸ் - சி வோட்டர்
161 - 169
53 - 61
1-5
2-6
3-7

2021 புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் கருத்துக்கணிப்பு & எக்ஸிட் போல் முடிவுகள்

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தேர்தலுக்கு முன் பல குழப்பங்கள் ஏற்பட்டது. வி நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு மெஜாரிட்டியை இழந்து கவிழ்ந்தது.புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி நடக்கிறது. கருத்து கணிப்பில் இதுவரை பாஜக கூட்டணி வெற்றிபெறும் என்று கூறப்பட்டுள்ளது. ஒன் இந்தியாவில் புதுச்சேரி தேர்தல் குறித்த உங்களின் கணிப்புகளை பகிரங்குங்கள்!

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள்

Channels
என்டிஏ
யுபிஏ
மற்றவர்கள்
டைம்ஸ் நவ் - சி வோட்டர்
18
12
0
ஏபிபி நியூஸ் - சி வோட்டர்
16-20
14-10
0

2021 கேரளா சட்டமன்றத் தேர்தல் கருத்துக்கணிப்பு & எக்ஸிட் போல் முடிவுகள்

கேரளாவில், யுடிஎஃப் மற்றும் ஆளும் எல்.டி.எஃப் இடையே நேராக போட்டி நிலவுகிறது. பாஜகவும் நன்றாக போட்டியிட வேண்டும் என்ற நம்பிக்கையில் உள்ளது. கேரள தேர்தல் களம் தகித்துக்கொண்டு இருக்கிறது . ஏப்ரல் 6 ம் தேதி ஒரே கட்டத்தில் கேரளாவில் தேர்தல் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை மே 2 ம் தேதி நடக்கும், ஆனால் மக்களின் மனதில் என்ன இருக்கிறது? பினராயி விஜயன் தலைமையிலான இடது ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா அல்லது யுடிஎஃப்-க்கு வாக்களித்து அரியணையில் ஏற்றுவார்களா? ஒன் இந்தியாவில் கேரள தேர்தல் குறித்த உங்களின் கணிப்புகளை பகிரங்குங்கள்!

கேரளா சட்டமன்றத் தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள்

Channels
எல்டிஎப்
யுடிஎப்
என்டிஏ
மாத்ருபூமி - சி வோட்டர்
73–83
56–66
0–1
மனோரமா - விஎம்ஆர்
77–82
54–59
0–3
டைம்ஸ் நவ் - சி வோட்டர்
77
62
1
மாத்ருபூமி - சி வோட்டர்
75–83
56–64
0–2
ஏபிபி நியூஸ் - சி வோட்டர்
77–85
54–62
0–2
மீடியா ஒன் -பொலிடிக் மார்க்கர்
74–80
58–64
0–2
24 நியூஸ்
72–78
63–69
1–2
லோக் போல்
75–80
60–65
0–1
ஸ்பைக் மீடியா சர்வே
85
53
2
ஏசியாநெட் நியூஸ் - சி போர்
72–78
59–65
3–7

2021 மேற்கு வங்கம் சட்டமன்றத் தேர்தல் கருத்துக்கணிப்பு & எக்ஸிட் போல் முடிவுகள்

இந்த ஆண்டு மேற்கு வங்க தேர்தல் ஒரு கடினமான தேர்தல் ஆகும், மக்களவைத் தேர்தலின் போது பாஜக மேற்கு வங்கத்தில் எழுச்சி பெற்றது. ஆளும் திரிணாமுல் காங்கிரசுக்கு சவாலாக பாஜக மாறி வருகிறது. மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் முனைப்பில் மம்தா இருக்கிறார். மார்ச் 1 ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் தொடங்கி கடைசி கட்டம் ஏப்ரல் 29 ஆம் தேதி நடக்கிறது. மொத்தம் 8 கட்டங்களாக வங்கத்தில் தேர்தல் நடக்கிறது. தேர்தல் முடிவு மே 2 ஆம் தேதி வரும், ஆனால் மக்களின் மனதில் என்ன இருக்கிறது? மம்தா அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வாரா, அல்லது மோடி மந்திரம் தேர்தல் முடிவை மாற்றுமா? வங்காளத்தில் வெல்ல போவது யார்? ஒன் இந்தியாவில் மேற்கு வங்க தேர்தல் குறித்த உங்களின் கணிப்புகளை பகிரங்குங்கள்!

மேற்கு வங்கம் சட்டமன்றத் தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள்

Channels
ஏஐடிசி +
பாஜக +
சஞ்சுக்கதோ மோர்ச்சா
மற்றவர்கள்
டைம்ஸ் நவ் - சி வோட்டர்
146-162
99-112
29-37
0
இந்தியா நியூஸ் - ஜான் கி பாத்
118-134
150-162
14-Oct
0
ஏபிபி நியூஸ் - சி வோட்டர்
158
102
30
4
ஏபிபி நியூஸ் - சிஎன்எக்ஸ்
154-164
102-112
22-30
1-3
ஏபிபி நியூஸ் - சி வோட்டர்
150-166
98-114
23-31
3-5
ப்ரியோ பந்து மீடியா
82
185
24
3
டைம்ஸ் டெமாக்ரசி
151
131
12
0

2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் கருத்துக்கணிப்பு & எக்ஸிட் போல் முடிவுகள்

வடகிழக்கு இந்தியாவின் நுழைவாயில் அசாம். தற்போது அரசியல் வெப்பம் அசாமில் தகித்துக்கொண்டு இருக்கிறது.அசாம் தேர்தல்கள் மார்ச் 27 முதல் மூன்று கட்டங்களாக நடைபெறும். இரண்டாம் மற்றும் இறுதி கட்ட தேர்தல்கள் ஏப்ரல் 1 மற்றும் ஏப்ரல் 6 ஆகிய தேதிகளிலும், வாக்குகளின் எண்ணிக்கை மே 2 ம் தேதியிலும் நடைபெறும். அசாமுக்கான கருத்துக் கணிப்புகள் எல்லாம் இழுபறி என்றே கூறுகிறது. 126 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில், பாஜக தலைமையிலான என்டிஏ பெரும்பான்மை எண்ணிக்கையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், கூட்டணி, வேட்பாளர் தேர்வு ஆகியவையும் முடிவை மற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சோனோவால், சைக்யா அல்லது புதிய நபரா? யார் வெல்ல போவது? ஒன் இந்தியாவில் அசாம் தேர்தல் குறித்த உங்களின் கணிப்புகளை பகிரங்குங்கள்!

அசாம் சட்டமன்றத் தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள்

Channels
என்டிஏ
யுபிஏ
மற்றவர்கள்
டிவி 9 பரத்வர்ஷ்
73
50
3
டைம்ஸ் நவ் - சி வோட்டர்
65-73
52-60
0-4
ஏபிபி நியூஸ் - சி வோட்டர்
65-73
52-60
0-4
இந்தியா நியூஸ் - ஜான் கி பாத்
68-78
48-58
0
The "ONEINDIA" word mark and logo are owned by One.in Digitech Media Pvt. Ltd.