முகப்பு
 » 
தேர்தல்கள்

இந்திய தேர்தல்கள் 2022

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் 2022இல் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளன. இந்த மாநிலங்களில் உள்ள சட்டசபை உறுப்பினர்களின் பதவி 2022 மார்ச் 15 - மார்ச் 27களில் முடிவடைகிறது.

இந்த மாநிலங்களில் தேர்தலை நடத்தி, முடிவுகளை அறிவிக்கும் பொறுப்பு இந்திய தேர்தல் ஆணையத்திடம் உள்ளது. இங்கு தேர்தல் குறித்த அறிவிப்பு ஜனவரி மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெறும்.

உத்தரப் பிரதேசத்தில் 2017 சட்டசபைத் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்ற யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்குமா என்பதிலேயே அனைவரது எதிர்பார்ப்பும் உள்ளது.

பஞ்சாபில் கேப்டன் அமரீந்தர் சிங் ராஜினாமாவுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியில் அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் அங்கு தேர்தலைச் சுவாரஸ்யமாக்குகிறது. பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மியும் முக்கிய கட்சியாக உள்ளது.

கோவாவில் மனோகர் பாரிக்கர் இல்லாமல் தேர்தலை சந்திக்கிறது பாஜக. அவர் இல்லாமல் கோவாவில் பாஜகவால் ஆட்சியை பிடிக்க முடியுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மணிப்பூரில் அதற்கு முன்பு வரை சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெறாமல் இருந்த பாஜக, 2017 தேர்தலில் 21 இடங்களைப் பெற்று வலுவான கட்சியாக உருவெடுத்தது. 2013இல் 47 இடங்களைப் பெற்ற காங்கிரஸ் கட்சியால் 2017இல் வெறும் 28 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. 2017இல் மணிப்பூரில் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து பாஜக ஆட்சியை அமைத்தது.

2017 உத்தரகண்ட் தேர்தலில் பாஜக வென்று ஆட்சியை அமைத்த போதிலும், அங்கு 2 முறை முதல்வர்களை மாற்றியுள்ளது பாஜக தலைமை. இது அக்கட்சிக்குப் பின்னடைவை ஏற்படுத்துமா? இல்லை காங்கிரஸ் கட்சியால் அங்கு வெல்ல முடியுமா? இதனால் உத்தரகண்ட் தேர்தலில் இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.


5 மாநிலச் சட்டசபை தேர்தல்கள் குறித்த அனைத்து தகவல்களையும் ஒன் இந்தியா தளம் உங்களுக்கு துல்லியமாக வழங்குகிறது. செய்திகள், நேரலை அப்டேட்கள், தேர்தல் முடிவுகள், உள்ளிட்ட அனைத்திற்கும் ஒன் இந்தியா தளத்துடன் இணைந்திருங்கள்.

குஜராத் தேர்தல்கள் 2022
இமாச்சல பிரதேசம் தேர்தல்கள் 2022
இமாச்சல பிரதேசம் முக்கிய தேர்தல் தேதிகள் 2022 - 68 தொகுதிகள்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X