Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நரேந்திரமோடி

நரேந்திரமோடி
இந்தியாவின் 14வது பிரதமராக பதவிவகிக்கும் நரேந்திர தாமோதரதாஸ் மோடி, 2014 தேர்தலில் பாஜகவை ஆச்சர்யமளிக்கும் வெற்றியை நோக்கி அழைத்துச்சென்றவர். மோடியை பற்றிய மற்றொரு ஆச்சர்யமான தகவல் என்னவெனில், அவர் முதல்முறையாக எம்எல்ஏ ஆன போதே குஜராத் முதல்வரானவர்.
By Rashmi | Tuesday, February 19, 2019, 01:36:47 PM [IST]

நரேந்திரமோடி சுயசரிதை

இந்தியாவின் 14வது பிரதமராக பதவிவகிக்கும் நரேந்திர தாமோதரதாஸ் மோடி, 2014 தேர்தலில் பாஜகவை ஆச்சர்யமளிக்கும் வெற்றியை நோக்கி அழைத்துச்சென்றவர். மோடியை பற்றிய மற்றொரு ஆச்சர்யமான தகவல் என்னவெனில், அவர் முதல்முறையாக எம்எல்ஏ ஆன போதே குஜராத் முதல்வரானவர். அதேபோலவே முதல்முறையாக நாடாளுமன்ற உறுப்பினரான போதே பிரதமர் ஆனார். 1984லிருந்து முதல்முறையாக மக்களவையில் பெரும்பான்மை அரசாக 2014ல் பாஜக அரசு அமைத்த பெருமை இவரையே சாரும். வாத்நகரில் உள்ள குஜராத்தி குடும்பத்தில் பிறந்த இவர், தந்தையின் தேநீர் கடையில் உதவி செய்து பின்னர் சொந்தமாக தேநீர் கடை வைத்து எளிமையாக வாழ்வை துவங்கியவர். 8 வயதில் ஆர்எஸ்எஸ் அமைப்புடன் துவங்கிய இவரது பந்தம் இன்னும் தொடர்கிறது. இவர் 1985ல் பாஜகவில் இணைக்கப்பட்டார்.

மேலும் படிக்க

நரேந்திரமோடி தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் நரேந்திரமோடி
பிறந்த தேதி 17 Sep 1950 (வயது 75)
பிறந்த இடம் வாத்நகர், மெக்சானா, குஜராத்
கட்சி பெயர் Bharatiya Janta Party
கல்வி Post Graduate
தொழில் சமூகசேவகர்
தந்தை பெயர் தாமோதரதாஸ் முல்சாந்தாஸ் மோடி
தாயார் பெயர் திருமதி. ஹீராபென் தாமோதரதாஸ் மோடி
துணைவர் பெயர் திருமதி. யசோதாபென் மோடி
துணைவர் தொழில் இல்லத்தரசி
மதம் இந்து
இணையதளம் http://www.narendramodi.in

நரேந்திரமோடி நிகர மதிப்பு

நிகர மதிப்பு
₹3.02 CRORE
சொத்துக்கள்
₹3.02 CRORE
கடன்கள்
N/A

நரேந்திரமோடி சுவாரசிய தகவல்கள்

மோடி 8 வயதாக இருக்கும் போது ஆர்எஸ்எஸ் எனப்படும் இராஷ்ட்ரிய ஸ்வயம்சேவாக் சங்கத்தில் தொடர்ப்பு ஏற்பட்டது. அவருடைய 20வது வயதில், 1970ஆம் ஆண்டு அந்த அமைப்பால் மிகவும் ஈர்க்கப்பட்டு முழு நேர பிரச்சாரரானார். பின்னர் 1971ல் முறையாக அந்த அமைப்பில் இணைந்தார்.

நரேந்திரமோடி அரசியலில் கடந்து வந்த பாதை

  • 2014: தற்போது இந்தியாவின் 14வது பிரதமராக உள்ள நரேந்திரமோடி, 26மே 2014ல் அப்பதவியை ஏற்றார். பிரிட்டிஷிடம் இருந்து இந்தியா விடுதலை பெற்ற பின் பிறந்த முதல் பிரதமர் என பெயர் பெற்றார்.
  • 2012: மீண்டும் மணிநகர் தொகுதியில் வெற்றிபெற்று 4வது முறையாக முதலமைச்சரானார். இம்முறை பாத் ஸ்வேதா சஞ்சீவை 34097 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். 2014ல் தனது பதவியை இராஜினாமா செய்தார்.
  • 2007: 23 டிசம்பர் 2007 முதல்20 டிசம்பர் 2012 வரை மூன்றாவது முறையாக முதல்வராக இருந்த மோடி, இம்முறை மணிநகர் தொகுதியில் காங்கிரஸின் தின்ஷா படேலை தோற்கடித்தார்.
  • 2002: மணிநகர் தொகுதியில் காங்கிரஸின் ஒஷா யதின்பாய் நரேந்திரகுமாரை 38,256 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து, இரண்டாவது முறையாக முதலமைச்சரானார்.
  • 2001: கேசுபாய்பட்டேல் உடல்நிலை குன்றியதால், சட்டமன்ற இடைத்தேர்தல்களில் பாஜக தோற்றது. அதன்காரணமாக பாஜக தேசிய தலைமை பட்டேலுக்கு பதில் மோடியை குஜராத் முதல்வராக நியமித்தது. 7 அக்டோபர் 2001ல் குஜராத் முதல்வராக பதவியேற்ற மோடி, 24 பிப்ரவரி 2002ல் நடந்த இடைத்தேர்தலில் ராஜ்கோட் தொகுதியில், காங்கிரஸின் அஸ்வின் மேத்தாவை 14,728 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றிபெற்றார்.
  • 1995: பாஜக தேசிய செயலாளராக தேர்வான மோடி புதுடெல்லிக்கு அனுப்பப்பட்டு, ஹிரியானா மற்றும் இமாச்சல்பிரதேச தேர்தல் பிரச்சாரங்களுக்கு தலைமை வகித்தார். 1996ல் பாஜகவின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார்.
  • 1990: 1990ல் அத்வானியின் ராம ரத யாத்திரையையும், 1991-92ல் முரளி மனோகர் ஜோஷியின் எக்தா யாத்திரையும் ஒருங்கிணைக்க உதவினார்.
  • 1987: பாஜகவின் குஜராத் பிரிவிற்கு ஒருங்கிணைப்பு செயலாளராக தேர்வானார் மோடி.
  • 1986: எல்.கே. அத்வானிக்கு பிறகு மோடி பாஜக தலைவரானார். அந்த சமயத்தில் ஆர்எஸ்எஸ் தனது உறுப்பினர்களை பாஜகவின் முக்கிய பொறுப்புகளில் நியமிக்க முடிவுசெய்திருந்தது.
  • 1985: ஆர்எஸ்எஸ் மூலம் பாஜகவிற்கு அனுப்பப்பட்ட மோடி, 1987களில் அகமதாபாத்தில் பாஜக பிரச்சாரங்களை ஒருங்கிணைக்க உதவியாக இருந்தார். அத்தேர்தலில் பாஜக வெற்றிபெற்றது.
  • 1979: ஆர்எஸ்எஸ் பணிக்காக டெல்லி சென்ற இவருக்கு, நெருக்கடி நிலை வரலாற்றில் ஆர்எஸ்எஸ் பற்றி ஆராய்ந்து எழுதும் பணி வழங்கப்பட்டது.
  • 1978: ஆர்எஸ்எஸ் சம்பங் பிரச்சாரரான மோடி, சூரத் மற்றும் வதோதரா பகுதிகளின் ஆர்எஸ்எஸ் செயல்பாடுகளில் ஈடுபட்டார்.
  • 1975: "குஜராத் லோக் சங்கார்ஸ் சமதி"யின் பொதுச்செயலாளராக ஆர்எஸ்எஸ்-ஆல் நியாமிக்கப்பட்டார் மோடி . நெருக்கடிநிலையின் போது கைதிலிருந்து தப்பிக்க வலுக்கட்டாயமாக நிலவறைக்கு அனுப்பப்பட்ட மோடி, அங்கு அரசுக்கு எதிரான துண்டுபிரசுரங்கள் அச்சடிக்கும் பணியில் எடுபட்டார்.

முந்தைய வரலாறு

  • 1967: வாத்நகரில் மேல்நிலை கல்வியை முடித்த மோடி, குடும்ப பிரச்சனை காரணமாக வீட்டை விட்டு வெளியேறி சுமார் 2 வருடங்கள் வடக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் பயணம் மேற்கொண்டார்.
  • 1960: குழந்தையாக இருக்கும் போது தனது தந்தைக்கு உதவியாக இரயில் நிலையத்தில் தேநீர் விற்ற மோடி, பின்னர் தனது சகோதரருடன் இணைந்து பேருந்து நிலையம் அருகில் தேநீர் கடை நடத்தினார்.

நரேந்திரமோடி சாதனைகள்

2007ஆம் ஆண்டு இந்தியா டுடே நடத்திய தேசிய அளவிலான கருத்துகணிப்பில் சிறந்த முதலமைச்சர்.
டைம் இதழின் ஆசிய பதிப்பு முகப்பு பக்கத்தில் இடம்பெற்றார்.
சிஎன்என்-ஐபிஎன் நியூஸ் நெட்வொர்க்கின் 2014ஆம் ஆண்டிற்கான இந்தியன் விருது.
2014,2015, 2017ஆம் ஆண்டுகளில் டைம்இதழ் வெளியிட்ட உலகின் 100 ஆதிக்கம்மிக்க மனிதர்களில் ஒருவர்.
2014 மற்றும் 2016ஆம் ஆண்டுகளின் டைம் இதழ் வாசகர்கள் கருத்துகணிப்பில் வெற்றியாளர்.
உலகின் 15வது சத்தவாய்ந்த மனிதராக போர்ப்ஸ் இதழ் 2014ல் வரிசைபடுத்தியது.
2015,2016 மற்றும் 2018ல் உலகின் 9வது சக்திவாய்ந்த மனிதர்.
பார்ட்யூன் இதழின் 2015ஆம் ஆண்டின் "உலகின் சிறந்த தலைவர்கள்" பட்டியலில் 5வது இடம்.
இவரது ஆட்சியில் உலக வங்கி வெளியிட்ட தரவரிசையில் எளிதாக தொழில் துவங்கும் நாடுகள் பட்டியலில் 100வது இடம்.

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+