Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பினராயி விஜயன்

பினராயி விஜயன்
பினராயி விஜயன் கேரளத்தின் தற்போதைய முதலமைச்சர் ஆவார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினராகவும் இருக்கிறார்.
By Rashmi | Saturday, October 7, 2023, 02:53:42 PM [IST]

பினராயி விஜயன் சுயசரிதை

பினராயி விஜயன் கேரளத்தின் தற்போதைய முதலமைச்சர் ஆவார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினராகவும் இருக்கிறார். கண்ணூர் மாவட்டத்தில் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தார். பேரலசேரியில் உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்தார். பியூசியை பிரென்னன் அரசு கல்லூரியில் முடித்தார். 1964 ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் (மார்க்சிஸ்ட்) இணைவதற்கு முன்பு மாணவர் சங்கங்களின் மூலம் அரசியலின் பால பாடம் கற்றார். 1986ம் ஆண்டு கட்சியில் கன்னூர் மாவட்ட மார்க்சிஸ்ட் செயலாளராக இருந்தார். அதற்கு முன்பு மாவட்ட கமிட்டி உறுப்பினர், மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளார். 1998ம் ஆண்டு கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல்வர் பதவிக்கு வருவதற்கு முன்பு, மின்சாரத்துறை, கூட்டுறவுத்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார்.

2021 சட்டசபை தேர்தலில் தர்மடம் தொகுதியில் போட்டியிட்ட பினராயி விஜயன் அங்கு வெற்றிபெற்று, மீண்டும் சட்டசபைக்கு தேர்வானார்.

மேலும் படிக்க

பினராயி விஜயன் தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் பினராயி விஜயன்
பிறந்த தேதி 21 Mar 1944 (வயது 82)
பிறந்த இடம் கண்ணூர்
கட்சி பெயர் Communist Party Of India (marxist)
கல்வி 12th Pass
தொழில் அரசியல்வாதி
தந்தை பெயர் மாரொலி கோரன்
தாயார் பெயர் கல்யாணி
துணைவர் பெயர் கமலா விஜயன்
துணைவர் தொழில் ஆசிரியர் (ஓய்வு)
குழந்தைகள் 1 மகன்(கள்) 1 மகள்(கள்)
மதம் Atheist
இணையதளம் http://www.keralacm.gov.in/

பினராயி விஜயன் நிகர மதிப்பு

நிகர மதிப்பு
₹99.22 LAKHS
சொத்துக்கள்
₹1.07 CRORE
கடன்கள்
₹7.95 LAKHS

பினராயி விஜயன் சுவாரசிய தகவல்கள்

பினராயி விஜயன் பள்ளிப் படிப்பை முடித்த பின்னர் ஒரு வருட காலம் கைத்தறி நெசவாளியாக பணியாற்றினார்.1998 ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக பொறுப்பேற்று பணியாற்றினார்.அவசரகால கட்டத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார். விடுதலையான பின்னர் தனது ரத்தக்கறை படிந்த சட்டையைக் காட்டியபடி நீண்டதொரு உரை நிகழ்த்தினார். இது பெரும் பிரளயத்தை அப்போது ஏற்படுத்தியது.

பினராயி விஜயன் அரசியலில் கடந்து வந்த பாதை

  • 2021: 2021 சட்டசபை தேர்தலில் தர்மடம் தொகுதியில் போட்டியிட்ட பினராயி விஜயன் அங்கு வெற்றிபெற்று, மீண்டும் சட்டசபைக்கு தேர்வானார்.
  • 2016 : தர்மதம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மம்பரம் திவாகரனை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல்வராகவும் உயர்ந்தார் பினராயி விஜயன்.
  • 2002 : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1998 : கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1996 : கேரள அரசில் மின்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சராகப் பணியாற்றினார்.
  • 1996 : பைய்யனூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கன்னொத்தை வீழ்த்தி வெற்றி பெற்றார் பினராயி விஜயன்.
  • 1991 : மூன்றாவது முறையாக கூத்துபரம்பா தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பி. ராமகிருஷ்ணனை தோற்கடித்தார்.
  • 1988 : இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் மாநில உறுப்பினராக ஆனார்.
  • 1986 : இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் கண்ணூர் மாவட்ட செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1978 : இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் கேரள மாநிலக் கமிட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1977 : கூத்துப்பரம்பா தொகுதியில் 2வது முறையாக போட்டியிட்டு வற்றி பெற்றார். ஆர்எஸ்பி கட்சியின் அப்துல் காதரை இம்முறை வீழ்த்தினார்.
  • 1972 : இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் கண்ணூர் மாவட்ட பிரிவில் உறுப்பினரானார்.
  • 1970 : கூத்துப்பரம்பா சட்டசபைத் தொகுதியில் வென்று முதல் முறையாக சட்டசபைக்குள் நுழைந்தார். அத்தேர்தலில் பிஎஸ்பி கட்சியின் தயத் ராகவனை வீழ்த்தினார்.
  • 1968 : இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் கண்ணூர் மாவட்டக் குழுவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1964 : இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியில் சேர்ந்தார்

முந்தைய வரலாறு

  • 1962: தலசேரியில் உள்ள அரசு பிரென்னன் கல்லூரியில் பியூசி படிப்பை முடித்தார்.

பினராயி விஜயன் சாதனைகள்

கேரள சட்டசபை தேர்தலில் பினராயி விஜயன் 1970, 1977, 1991, 1996 மற்றும் 2016 என ஐந்து முறை வெற்றி பெற்றார். அதில் தொடர்ந்து மூன்று முறை தொடர்ச்சியாக வெற்றி பெற்றார். 1971 தலசேரி கலவரத்தில் இனவாத பதட்டத்தைத் தடுத்ததற்காக அவர் பாராட்டப்பட்டார். இதுதொடர்பாக விசாரிக்கப்பட்ட கமிஷனின் தலைவரான நீதிபதி ஜோசப் விதயத்தில் தனது விசாரணை அறிக்கையில் பினராயி விஜயனைப் பாராட்டி அறிக்கையின் 220வது பாராவில் குறிப்பிட்டிருந்தார். 1996 மற்றும் 1998 ஆம் ஆண்டுகளில் மின்துறை அமைச்சராக இருந்த போது மாநிலத்தின் மின்சார உற்பத்தியை பெருக்கினார். ரப்கோ உருவாவதற்கு வழிகாட்டியாக செயல்பட்டார்.

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+