Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அசாதுதின் ஓவைசி

அசாதுதின் ஓவைசி
அசாதுதின் ஓவைசி, அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லிமின் கட்சியின் தலைவர் ஆவார். ஹைதராபாத் தொகுதியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
By Rashmi | Sunday, January 31, 2021, 12:08:36 PM [IST]

அசாதுதின் ஓவைசி சுயசரிதை

அசாதுதின் ஓவைசி, அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லிமின் கட்சியின் தலைவர் ஆவார். ஹைதராபாத் தொகுதியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். உஸ்மானியா பல்கலைக் கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்தபின், உயர் கல்விக்காக லண்டனுக்கு சென்றார். அவர் லண்டனில் உள்ள லிங்கான் இன் பல்கலைக்கழகத்தில் இளங்கலை சட்டம் மற்றும் பாரிஸ்டர் சட்டம் படித்து வழக்கறிஞர் ஆனார். அவரது இயற் பெயர் நாகீப்-இ-மில்லட் கெய்ட் ஆனால் ஆசாத் பாய் என்று அனைவராலும் அழைக்கப்படுகிறார். முஸ்லிம்கள் மற்றும் தலித்துகள் போன்ற சிறுபான்மையினரை மையமாகக் கொண்டு அரசியலில் முக்கியத்துவம் செலுத்தி வருகிறார். அரசியலின் காரணமாகவும், அவரது உரைகளின் காரணமாகவும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருபவர். எப்போதும் செய்திகளில் அடிபடுபவர். இவர் ஹைதராபாத்தில் உள்ள ஓவைசி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் ஆவார். இந்த மருத்துவமனையானது மலிவு கட்டணத்தில் மருத்துவ வசதிகளை வழங்குகிறது. ஓவைசியின் தாத்தாதான் இந்த மருத்துவமனையை உருவாக்கியவர். அரசு வேலைகள் மற்றும் கல்வியில் முஸ்லீ்ம்களுக்கு இட ஒதுக்கீடு கோரி வருபவர். இந்துத்வா கொள்கைகளை கடுமையாக விமர்சிக்கம் ஓவைசி, இந்துக்களுக்கு தான் எதிரி அல்ல என்றும் கூறுகிறார்.

மேலும் படிக்க

அசாதுதின் ஓவைசி தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் அசாதுதின் ஓவைசி
பிறந்த தேதி 13 May 1969 (வயது 56)
பிறந்த இடம் ஹைதராபாத்
கட்சி பெயர் All India Majlis-e-ittehadul Muslimoon
கல்வி Graduate Professional
தொழில் வழக்கறிஞர், அரசியல்வாதி
தந்தை பெயர் சுல்தான் சலாஹுதின் ஓவைசி
தாயார் பெயர் நஜ்முன்னிசா பேகம்
துணைவர் பெயர் பர்ஹீன் ஓவைசி
துணைவர் தொழில் இல்லத்தரசி
குழந்தைகள் 1 மகன்(கள்) 5 மகள்(கள்)
மதம் முஸ்லீம்
இணையதளம் http://www.asadowaisi.com/

அசாதுதின் ஓவைசி நிகர மதிப்பு

நிகர மதிப்பு
₹16.83 CRORE
சொத்துக்கள்
₹23.88 CRORE
கடன்கள்
₹7.05 CRORE

அசாதுதின் ஓவைசி சுவாரசிய தகவல்கள்

அசாதுதின் ஓவைசியின் தாத்தா அப்துல் வஹீத் ஓவைசி, 1957ம் ஆண்டில் மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லிமின் கட்சியை அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லிமின் கட்சியாக மாற்றியமைத்தார். அவருக்கு அடுத்து காசிம் ரிஸ்வி கட்சித் தலைவராக செயல்பட்டார். அசாதுதின் சுல்தான் சலாஹுதீன் தீவிர அரசியல்வாதி ஆவார். ஆந்திர சட்டசபைக்கு 1962ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 1984 முதல் 2004 வரை லோக்சபா உறுப்பினராக இருந்தார். அசாதுதினின் சகோதரர் அக்பருதின் ஓவைசியும் தெலுங்கானா சட்டசபை உறுப்பினர் ஆவார். இவரது தம்பி புர்ஹானுதீன் ஓவைசி, எடிமாத் இதழின் ஆசிரியர் ஆவார்.

அசாதுதின் ஓவைசி அரசியலில் கடந்து வந்த பாதை

  • 2017 : மாட்டுக் கறிக்கு பாஜக எதிர்ப்பு தெரிவிப்பது குறித்து பேசுகையில் உத்திரபிரதேசம் மற்றும் வட இந்திய மாநிலங்களில் பசுவை புனிதமாக கருதும் பாஜக, வட கிழக்கு, கோவா, கேரளாவில் கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன் என்று சாடினார்.
  • 2016 : முஸ்லீம்களுக்கு ஐஎஸ்ஐஎஸ்ஸால் பெரும் தொல்லை ஏற்படுகிறது. அந்த அமை்பபானது நரகத்தின் நாய்கள் என்று கடுமையாகத் தாக்கிப் பேசி பலரது பாராட்டைப் பெற்றார்.
  • 2014 : தனது கட்சிக்கு முஸ்லீம்களின் ஆதரவைக் கோரி பேசியபோது பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்துப் பேசினார். 16வது லோக்சபாவுக்கு ஹைதராபாத் தொகுதியிலிருந்து வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளர் டாக்டர் பகவந்த் ராவை தேர்தலில் தோற்கடித்தார்.
  • 2013 : கர்நாடக மாநிலத்தின் பீதர் பகுதியில் அனுமதி இல்லாமல் பேரணி நடத்தியதற்காகவும், உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்ததாகவும் கைது செய்யப்பட்டார்.
  • 2009 : மீண்டும் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தெலுங்கு தேசம் கட்சியின் ஜாஹித் அலி கானை தோற்கடித்தார். இந்திய தேர்தல் ஆணையம் மொகால்புரா பகுதியில் தெலுங்கு தேசம் கட்சியின் தேர்தல் முகவரான சையத் சலீம்தீன் என்பவரை துரத்தி அடித்தது தொடர்பாக வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது. பாராளுமன்றத்தில் அவர் பாதுகாப்பு நிலைக் குழு உறுப்பினர் மற்றும் அறிவியல் குழுவில் உறுப்பினரராக நியாக்கப்பட்டார்.அனைத்து இந்தியா மஜ்லிஸ்-ஈ-இடிஹதுல் முஸ்லிமின் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 2008 : மும்பை பயங்கரவாத தாக்குதலுக்குப் பின் ஜாகிர் ரஹ்மான் லக்வி மற்றும் ஹபிஸ் சயீத் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினார். நாட்டின் எதிரிகள் முஸ்லீம்களின் எதிரிகள் என்றும் அவர் கூறினார்.
  • 2006 : பாதுகாப்பு துறை நிலைக் குழுவில் உறுப்பினராக ஒரு வருடம் செயலாற்றினார்.
  • 2005 : மேடக் மாவட்ட கலெக்டரிடம் முறைகேடாக நடந்ததாக கூறி 2005ம் ஆண்டு ஓவைசி மற்றும் அவரது தம்பி அக்பருதீன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
  • 2004 : ஹைதராபாத் தொகுதியில் இருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜி சுபாஷ் சந்தர்ஜியை அவர் தோற்கடித்தார். பாராளுமன்ற உள்ளூர் அபிவிருத்தி திட்ட கமிட்டி உறுப்பினராகவும் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் குழுவின் உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 2006 வரை இரண்டு குழுக்களிலும் செயல்பட்டார்.
  • 1999 : தெலுங்கு தேசம் கட்சியின் சையத் ஷா நூருல் ஹக்கத்ரியை தோற்கடித்து மீண்டும் ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1994 : ஓவைசி சார்மினார் தொகுதியில் இருந்து ஆந்திரப் பிரதேச சட்ட மன்றத்திற்க்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் மஜ்லிஸ் பச்சோ தெஹ்ரிக் கட்சியின் ஹுசைன் ஷாஹீத்தை தோற்கடித்தார்.

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+