முகப்பு
 » 
மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

மு. க.

மு.க.ஸ்டாலின் சுயசரிதை

மு.க.ஸ்டாலின் என பரவலாக அறியப்படும் முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வர் ஆவார். 2021 சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியின் தலைவராக போட்டியிட்டு, வெற்றிபெற்று தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றார். இவர் திராவிட இயக்கத்தின் முக்கிய தலைவரும், தமிழகத்தின் முதல்வராக 5 முறை பதவி வகித்தவருமான கலைஞர்.மு.கருணாநிதி மற்றும் அவரது இரண்டாவது மனைவியான தயாளு அம்மாளுக்கும் 1 மார்ச் 1953ல் மூன்றாவது மகனாக பிறந்தார். கருணாநிதியின் அரசியல் வாரிசாக அவரால் அறிவிக்கப்பட்டார் ஸ்டாலின். தற்போது திமுகவின் தலைவராக உள்ளார்.

மேலும் படிக்க
By Zainab Ashraf Updated: Thursday, September 23, 2021, 10:53:23 AM [IST]

மு.க.ஸ்டாலின் தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் மு.க.ஸ்டாலின்
பிறந்த தேதி 01 Mar 1953 (வயது 71)
பிறந்த இடம் சென்னை
கட்சி பெயர் Dravida Munetra Kazhagam
கல்வி Graduate
தொழில் சமூகசேவை, அரசியல்
தந்தை பெயர் மு. கருணாநிதி
தாயார் பெயர் தயாளு அம்மாள்
மதம் இந்து
இணையதளம் http://www.mkstalin.in/
சமூக வலைதளங்கள் சமூக வலைதளங்கள்:

மு.க.ஸ்டாலின் நிகர மதிப்பு

நிகர மதிப்பு: ₹8.89 CRORE
சொத்துக்கள்:₹8.89 CRORE
கடன்கள்: N/A

மு.க.ஸ்டாலின் சுவாரசிய தகவல்கள்

விளையாட்டு மற்றும் கலாச்சார செயல்பாடுகளில் அதிக ஆர்வம் கொண்டவர் மு.க.ஸ்டாலின். இவரின் விருப்பத்திற்குரிய விளையாட்டுகள் கிரிக்கெட், பாட்மிட்டன் மற்றும் செஸ்.

மு.க.ஸ்டாலின் அரசியலில் கடந்து வந்த பாதை

2021
  • 2021 சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியின் தலைவராக போட்டியிட்டு, வெற்றிபெற்று தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றார்.
2021
  • 2021 சட்டசபை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்வானார்.
2018
  • திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு பிறகு, அக்கட்சியின் தலைவராக ஸ்டாலின் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2017
  • திமுகவின் செயல்தலைவராக அக்கட்சியின் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2016
  • சென்னை கொளத்தூர் தொகுதியில் இருந்து மீண்டும் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டாலின், இதுவரை தமிழக சட்டமன்ற வரலாற்றிலேயே இல்லாத வகையில் வலுவான எதிர்கட்சியின் சார்பில் எதிர்கட்சி தலைவரானார்.
2011
  • தொடர்ந்து நான்கு முறை வெற்றி பெற்ற ஆயிரம்விளக்கு தொகுதியை தவிர்த்து, கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
2009
  • தமிழகத்தின் துணைமுதல்வராக பொறுப்பேற்றார் ஸ்டாலின். தமிழகத்தின் முதல் துணைமுதல்வர் என பெயர்பெற்றார்.
2008
  • திமுகவின் பொருளாளராக தேர்வானார் ஸ்டாலின்.
2006
  • ஆயிரம் விளக்கு தொகுதியில் இருந்து நான்காவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டு, உள்ளாட்சி மற்றும் ஊரகவளர்ச்சி துறை அமைச்சரானார்.
2003
  • திமுக பொதுக்குழுவால் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2001
  • தொடர்ந்து இரண்டாவது முறையாக சென்னை மாநகர மேயராக தேர்வானார்.
2001
  • சென்னை ஆயிரம்விளக்கு தொகுதியில் இருந்து மூன்றாவது முறையாக சட்டமன்றத்திற்கு தேர்வானார்.
1996
  • சென்னை மாநகர மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என பெயர் பெற்றார்.
1996
  • ஆயிரம்விளக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்றார்.
1991
  • ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
1989
  • ஆயிரம்விளக்கு தொகுதியில் அதிமுகவின் தம்பிதுரையை எதிர்த்து போட்டியிட்டு, மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்து முதல்முறையாக தமிழக சட்டசபைக்கு தேர்வானார்.
1984
  • திமுகவின் மாநில இளைஞரணி செயலாளாராக நியமிக்கப்பட்டார். மேலும் சென்னை ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
1976
  • எமர்ஜென்சி காலத்தில் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஸ்டாலின் போலீசரால் கடுமையாக தாக்கப்பட்டார்.
1973
  • திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுக்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1967
  • தனது 14வயதில் அரசியல் வாழ்க்கையை துவங்கிய ஸ்டாலின், 1967தேரதலில் திமுகவிற்காக பிரச்சாரம் செய்தார்.

மு.க.ஸ்டாலின் சாதனைகள்

சென்னை மாநகர மேயராக ஸ்டாலின் இருந்த போது, பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற எடுக்க வேண்டிய மதிப்பெண்ணை 55லிருந்து 72ஆக உயர்த்தினார் மற்றும் மாநகராட்சி பள்ளிகளின் தரத்தின் மீது நிலவிய பொதுவான கருத்தை மாற்றினார்.

சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், ரூ94.5 கோடி மதிப்பில் 9 பாலங்களையும், ரூ4.92 கோடி செலவில் 49 சிறு பாலங்களையும் கட்டினார்.

ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் ஒகேனேக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தினார்.

Disclaimer: The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X