Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மனோகர் லால் கட்டர்

மனோகர் லால் கட்டர்
2014 ஆம் ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதி ஹரியானா முதலமைச்சராக பதவியேற்றாக் கட்டர். ஹரியானா முதல்வராக பதவியேற்ற முதலாவது பாரதிய ஜனதா கட்சி தலைவர் மனோகர் லால் கட்டர் ஆவார்.
By Zainab Ashraf | Tuesday, February 19, 2019, 01:40:30 PM [IST]

மனோகர் லால் கட்டர் சுயசரிதை

2014 ஆம் ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதி ஹரியானா முதலமைச்சராக பதவியேற்றாக் கட்டர். ஹரியானா முதல்வராக பதவியேற்ற முதலாவது பாரதிய ஜனதா கட்சி தலைவர் மனோகர் லால் கட்டர் ஆவார். இவர் முன்னாள் ஆர்எஸ்எஸ் பிரசாரக் ஆவார். 2014 சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பூபிந்தர் சிங் ஹூடாவை வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்றினார்.

1977ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியின் மூல அமைப்பான ஆர்எஸ்எஸ்ஸில் இணைந்தார். பின்னர் 14 வருட ஆர்எஸ்எஸ் சேவைக்குப் பின்னர் பஜாகவில் 1994ம் ஆண்டு இணைந்தார். இவர் ஒரு பிரம்மச்சாரி. கர்னால் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

காத்ரி சமூகத்தைச் சேர்ந்த கட்டர், 2014 சட்டசபைத் தேர்தலில் 63,736 வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சுரேந்தர் சிங் நர்வாலை வீழ்த்தி வெற்றி பெற்றார். இது அவருக்கு முதல் தேர்தல் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது. சாதாரண தொண்டராக இருந்து தனது நிர்வாகத் திறமையால் பல்வேறு பொறுப்புகளுக்கு உயர்ந்து கடைசியில் முதல்வராகி வரலாறு படைத்தவர் கட்டர்.

மேலும் படிக்க

மனோகர் லால் கட்டர் தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் மனோகர் லால் கட்டர்
பிறந்த தேதி 05 May 1954 (வயது 71)
பிறந்த இடம் மஹம்
கட்சி பெயர் Bharatiya Janta Party
கல்வி Graduate
தொழில் டியூஷன், விவசாயம்
தந்தை பெயர் ஹர்பன்ஸ் லால் கட்டர்
தாயார் பெயர் N.A.
துணைவர் பெயர் தகவல் இல்லை
துணைவர் தொழில் தகவல் இல்லை
மதம் இந்து
இணையதளம் www.manoharlalkhattar.in

மனோகர் லால் கட்டர் நிகர மதிப்பு

நிகர மதிப்பு
₹2.54 CRORE
சொத்துக்கள்
₹2.54 CRORE
கடன்கள்
N/A

மனோகர் லால் கட்டர் சுவாரசிய தகவல்கள்

தில்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டத்தை முடித்தார் கட்டர். படித்த காலத்திலேயே தில்லி சதுர் பஜார் அருகே ஒரு கடையும் நடத்தி வந்தார். தனது ஆரம்ப காலத்தில் வாழ்வாதாரத்திற்காக அவர் டியூஷனும் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மனோகர் லால் கட்டர் அரசியலில் கடந்து வந்த பாதை

  • 2014: 2014 சட்டமன்ற தேர்தலில் கர்னால் தொகுதியில் போட்டியிட்டார். தேர்தலில் வெற்றி பெற்று அக்டோபர் 26 ஆம் தேதி ஹரியானா முதலமைச்சராக பதவி ஏற்றார்.
  • 2014: பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழுக் குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 2014: மக்களவைத் தேர்தலில் ஹரியானா மாநி பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பிரச்சாரக் குழு தலைவராக நியமிக்கப்பட்டார்.
  • 2000: ஹரியானா மாநில பாஜக பொது செயலாளராக நியமிக்கப்பட்டார். 2014ம் ஆண்டு வரை அப்பதவியில் இருந்தார்.
  • 1994: மனோகர் லால் 1994 ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். ஹரியானாவில் சங்கதன் மஹாமந்திரியாக நியமிக்கப்பட்டார்.
  • 1977: மனோகர் லால் கட்டர் தனது 24ம் வயதில் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தில் (ஆர்எஸ்எஸ்) சேர்ந்தார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அவர் ஆர்.எஸ்.எஸ்-ன் முழுநேர பிரச்சார ஊழியராக செயல்பட்டார். பாரதிய ஜனதா கட்சியில் இணைவதற்கு முன்பு ஆர்எஸ்எஸ்ஸில் பதினான்கு ஆண்டுகள் முழுநேர ஊழியராக பணியாற்றினார்.

முந்தைய வரலாறு

  • 1954: தேசப் பிரிவினையின்போது, கட்டரின் குடும்பம் பாகிஸ்தானிலிருந்து 1947ம் ஆண்டு இடம் பெயர்ந்து வந்து ஹரியானாவின் ரோத்தக் மாவட்டத்தில் குடியேறியது. அவர்கள் இந்தியாவில் வாழ்க்கையை ஆரம்பித்தார்கள். ரோத்தக் மாவட்டத்தில் உள்ள பண்டிட் நெகி ராம் ஷர்மா அரசு கல்லூரியில் தனது உயர்நிலைப் பள்ளி முடித்தார். பின் தில்லி பல்கலைக் கழகத்தில் இளங்கலை படிப்பை படிக்க தில்லிக்கு வந்தார். கல்லூரி நாட்களில் தில்லி சதர் பஜார் அருகே ஒரு கடையும் நடத்தினார்.

மனோகர் லால் கட்டர் சாதனைகள்

ஹரியானா மாநில முதல்வராக பதவியேற்ற முதல் பாரதிய ஜனதா கட்சி தலைவர் என்ற பெருமை படைத்தவர்.

காங்கிரஸ் வேட்பாளரை 63,736 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இது அவரது முதல் தேர்தல் வெற்றி.

மத்திய அரசின் சார்பில் 'பேட்டி பச்சோ, பேட்டி பதோ என்ற முழக்கத்துடன் கூடிய பெண் குழந்தைகள் காப்புத் திட்டத்திற்கு ஆதரவாக தீவிரமாக செயல்பட்டவர். இதனால்தான் ஹரியானாவில் பெண் குழந்தைகள் இறப்பு விகிதம் வெகுவாகக் குறைந்தது.

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+