Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அகிலேஷ் யாதவ்

அகிலேஷ் யாதவ்
அகிலேஷ் யாதவ், சமாஜ்வாடி கட்சியின் தீவிர தலைவர். உ.
By Rashmi | Tuesday, February 19, 2019, 01:51:58 PM [IST]

அகிலேஷ் யாதவ் சுயசரிதை

அகிலேஷ் யாதவ், சமாஜ்வாடி கட்சியின் தீவிர தலைவர். உ.பி. மாநிலத்தின் 20வது முதல்வராக இருந்தவர். எட்டாவாவில் உள்ள செயின்ட் மேரீஸ் பள்ளியில் பள்ளிப் படிப்பை படித்தார். ராஜஸ்தான் மாநிலம் தோல்பூரில் உள்ள ராணுவப் பள்ளியில் சேர்ந்தார். சுற்றுச்சூழல் பொறியியல் படிப்பில் முதுநிலை பட்டத்திற்காக ஆஸ்திரேலியா சென்றார். 1999ம் ஆண்டு நவம்பர் 24ம் தேதி இவருக்கும் டிம்பிள் யாதவுக்கும் திருமணம் நடைபெற்றது. உத்தரப் பிரதேசத்தின் முதல் இளம் முதல்வர் அகிலேஷ் யாதவ் ஆவார். 2012ம் ஆண்டு தனது 38வது வயதில் அவர் முதல்வராகப் பொறுப்பேற்றார். 2017ம் ஆண்டு மார்ச் 11ம்தேதி அவர் ராஜினாமா செய்தார்.

மேலும் படிக்க

அகிலேஷ் யாதவ் தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் அகிலேஷ் யாதவ்
பிறந்த தேதி 01 Jul 1973 (வயது 52)
பிறந்த இடம் 1-07-1973
கட்சி பெயர் Samajwadi Party
கல்வி 12th Pass
தொழில் முதுகலை படிப்பு
தந்தை பெயர் முலாயம் சிங் யாதவ்
தாயார் பெயர் மால்தி தேவி
துணைவர் பெயர் டிம்பிள் யாதவ்
துணைவர் தொழில் லோக்சபா எம்.பி.
குழந்தைகள் 1 மகன்(கள்) 2 மகள்(கள்)
மதம் இந்து
இணையதளம் www.akhileshyadav.com

அகிலேஷ் யாதவ் நிகர மதிப்பு

நிகர மதிப்பு
₹41.03 CRORE
சொத்துக்கள்
₹42.03 CRORE
கடன்கள்
₹99.86 LAKHS

அகிலேஷ் யாதவ் சுவாரசிய தகவல்கள்

உத்தரப் பிரதேசத்தின் இளம் முதல்வராக பதவி வகித்தவர். லோக்சபா தேர்தலில் 3 முறை வெற்றி பெற்றுள்ளார். 2017ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலின்போது உ.பி. முழுவதும் 10,000 கிலோமீட்டர் பயணம் செய்து 800 கூட்டங்களில் பேசி சாதனை படைத்தார்.கிராமப்புற மக்களின் வாழ்க்கையை மாற்றியமைப்பதில் அக்கறை காட்டுபவர். விவசாயிகள் நலனுக்காக பாடுபடக் கூடியவர். இந்திய அரசியளின் முக்கியமான இளம் முகம் அகிலேஷ் யாதவ். இளைஞர் நலனுக்காக பல நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.

அகிலேஷ் யாதவ் அரசியலில் கடந்து வந்த பாதை

  • 2017: உ.பி சட்டசபைத் தேர்தலில் சமாஜ்வாடி - காங்கிரஸ் கூட்டணிக்குத் தலைமை வகித்தார். பாஜகவிடம் இந்தக் கூட்டணி படு தோல்வியைச் சந்தித்தது.
  • 2012: 15வது லோக்சபாவிலிருந்து ராஜினாமா செய்தார். உ.பி. சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 2012: உபி மாநிலத்தின் இளம் முதல்வராக 2012ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது அகிலேஷுக்கு வயது 38 மட்டுமே.
  • 2012: 2012ம் ஆண்டு மார்ச் 10ம் தேதி உ.பி. சமாஜ்வாடி கட்சி தலைவராக நியமிக்கப்பட்டார்.
  • 2009: 3வது முறையாக 15வது லோக்சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 2007: அறிவியல் தொழில்நுட்பக் கமிட்டி, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கமிட்டி உறுப்பினராக மீண்டும் நியமிக்கப்பட்டார்.
  • 2004: 14வது லோக்சபாவுக்கு 2வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் நகர்ப்புற வளர்ச்சித்துறை கமிட்டி, எம்.பிக்களுக்கு கம்ப்யூட்டர் வழங்குவது தொடர்பான கமிட்டி, லோக்சபா செயலக அதிகாரிகளுக்கான கமிட்டி ஆகியவற்றில் உறுப்பினராக இருந்தார்.
  • 2002: அறிவியல் தொழில்நுட்பக் கமிட்டி, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கமிட்டி உறுப்பினராக நியமிக்கப்பட்டார். லோக்சபா உரிமைக் குழு உறுப்பினராக 2 வருடம் இருந்தார்.
  • 2000: 2000மாவது ஆண்டு 13வது லோக்சபாவுக்கு கண்ணாஜ் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அகிலேஷ் யாதவ் சாதனைகள்

உத்தரப் பிரதேச மாநிலத்தின் இளம் முதல்வராக உயர்ந்ததே இவரது முதல் சாதனையாகும். சமாஜ்வாடி கட்சியின் முகத்தை மாற்றியமைத்தவர். தேர்தல் பிரசாரங்களில் புதிய உத்திகளை அமல்படுத்தியவர். கிராமப்புற மக்களின் வாழ்க்கையை மாற்றியமைப்பதில் அக்கறை காட்டுபவர். விவசாயிகள் நலனுக்காக பாடுபடக் கூடியவர். இவர் மேற்கொண்ட சைக்கிள் பேரணிகள் அங்கு பிரபலமானவை. பல்வேறு சமூக வாக்காளர்களை இதன் மூலம் இவர் கவர்ந்தார். இளைஞர்களிடையே வெகுவாக சென்று சேர்ந்தவர்.

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+