Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குலாம் நபி ஆசாத்

குலாம் நபி ஆசாத்
1973 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் பாலெசா பகுதி செயலாளராக குலாம் நபி ஆசாத் அரசியல் அரங்கில் நுழைந்தார். படிப்படியாக பல்வேறு பதவிகளை பெற்று முன்னேறிய அவர் இளைஞர் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார்.
By Zainab Ashraf | Thursday, May 30, 2019, 03:56:19 PM [IST]

குலாம் நபி ஆசாத் சுயசரிதை

1973 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் பாலெசா பகுதி செயலாளராக குலாம் நபி ஆசாத் அரசியல் அரங்கில் நுழைந்தார். படிப்படியாக பல்வேறு பதவிகளை பெற்று முன்னேறிய அவர் இளைஞர் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். மகாராஷ்டிராவின் வாஷிம் தொகுதியில் இருந்து 1980 தேர்தலில் தனது முதல் பாராளுமன்ற வெற்றியை பதிவுசெய்தார் . 1982 ஆம் ஆண்டு மத்திய சட்டம், நீதி மற்றும் கம்பெனி விவகார துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு அரசியலில் பல்வேறு உயரங்களை அடைந்த குலாம்நபி ஆசாத், மத்திய அரசாங்கத்தில் பல துறைகளின் அமைச்சராக பதவி வகித்ததுடன், 2005 ல் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சராகவும் பதவியேற்றார். 2008ல் முஸ்லீம்கள் வெகுஜன மக்களின் எழுச்சியைத் தொடர்ந்து இந்து ஆலயம் கட்டுவதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டது ரத்துசெய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து இந்துக்கள் நடத்திய போராட்டம் ஏழு உயிர்களை பலிகொண்டது. இந்த நிகழ்வுகள் அவரை ராஜினாமா செய்யும் அளவிற்கு தள்ளியது. தற்போது இவர் ஐந்தாவது முறையாக ராஜ்யசபா உறுப்பினராக பணியாற்றிவருகிறார்.

மேலும் படிக்க

குலாம் நபி ஆசாத் தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் குலாம் நபி ஆசாத்
பிறந்த தேதி 07 Mar 1949 (வயது 77)
பிறந்த இடம் சோட்டி கிராமம், பதார்வா , தோடா மாவட்டம் (ஜம்மு & காஷ்மீர்)
கட்சி பெயர் Indian National Congress
கல்வி
தொழில் அரசியல்வாதி மற்றும் சமூகசேவகர்
தந்தை பெயர் திரு. ரஹமத்துல்லா
தாயார் பெயர் திருமதி. பாஷா பேகம்
துணைவர் பெயர் திருமதி. ஷமீம் தேவ் ஆசாத்
துணைவர் தொழில் சமூகசேவகர்
குழந்தைகள் 1 மகன்(கள்) 1 மகள்(கள்)
மதம் முஸ்லீம்
இணையதளம் NA

குலாம் நபி ஆசாத் நிகர மதிப்பு

நிகர மதிப்பு
₹4.14 CRORE
சொத்துக்கள்
₹4.14 CRORE
கடன்கள்
N/A

குலாம் நபி ஆசாத் சுவாரசிய தகவல்கள்

ஜம்மு காஷ்மீரின் மூன்றாவது காங்கிரஸ் முதலமைச்சராக குலாம் நபி ஆசாத் இருந்தார்.

குலாம் நபி ஆசாத் அரசியலில் கடந்து வந்த பாதை

  • 2015 : ஐந்தாவது முறையாக இராஜ்யசபாவிற்கு தேர்வானார்.
  • 2014 : இராஜ்யசபாவில் எதிர்கட்சி தலைவரானார் குலாம்நபி ஆசாத்.
  • 2014 : கூடுதல் பொறுப்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சரானார்.
  • 2009 : நான்காவது முறையாக ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசாத், பின்னர் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை மத்திய அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
  • 2008 : 29436 வாக்குகள் வித்தியாசத்தில் தயா கிருஷ்ணனை தோற்கடித்து, படெர்வாவில் இருந்து ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்திற்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 2006 : இடைத்தேர்தல் மூலம் ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், மாநிலத்தின் வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
  • 2005 : ஜம்மு காஷ்மீர் முதல்வராக பதவியேற்றார்
  • 2004 : மத்திய பாராளுமன்ற விவகாரத்துறை மற்றும் ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர்
  • 2002 : மூன்றாவது முறையாக இராஜ்யசபாவிற்கு தேர்வானார்
  • 2000 : வக்ஃப் வாரிய பாராளுமன்ற கூட்டுக்குழு உறுப்பினர்
  • 1999 : போக்குவரத்து, சுற்றுலா , கலாச்சார குழு உறுப்பினர்
  • 1998 : ஆற்றல் குழு உறுப்பினர் மற்றும் ராஜ்காட் சமதி குழு உறுப்பினர்
  • 1996 : இரண்டாவது முறையாக இராஜ்யசபாவிற்கு தேர்வானார்
  • 1993 : மத்திய பாராளுமன்ற விவகாரத்துறை, விமானத்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர்
  • 1991 : மத்திய பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ஆனார்.
  • 1990 : இராஜ்யசபா உறுப்பினரானார்
  • 1986 : மத்திய உள்துறை அமைச்சர் , மத்திய உணவு மற்றும் பொதுவிநியோகத்துறை இணை அமைச்சர்
  • 1985 : இரண்டாவது முறையாக எட்டாவது லோக்சபாவிற்கு உறுப்பினரானார். .
  • 1983 : மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சராக பணியாற்றினார்.
  • 1982 : சட்டம், நீதித்துறை மற்றும் கம்பெனி விவகாரத்துறை மத்திய இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
  • 1980 : பொதுத்துறை செயற்பாடுகள் குழுவின் உறுப்பினர், பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினர்.
  • 1980 : மகாராஷ்டிராவின் வாஷிம் தொகுதியில் இருந்து 7வது மக்களவைக்கு தேர்வான ஆசாத், ஜேஎன்பி-ன் பிரதாப்சிங் ராம்சிங்-ஐ தோற்கடித்தார்.

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+