முகப்பு
 » 
மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜி மேற்கு வங்கத்தின் தற்போதைய முதலமைச்சராக உள்ளார். மேலும் அனைத்து இந்திய திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் உள்ளார்.

மம்தா பானர்ஜி சுயசரிதை

மம்தா பானர்ஜி மேற்கு வங்கத்தின் தற்போதைய முதலமைச்சராக உள்ளார். மேலும் அனைத்து இந்திய திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் உள்ளார். கொல்கத்தாவில் ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்த அவர் கல்லூரி காலத்தில் இருந்தே தீவிர அரசியலில் நுழைந்தார். 1984ம் ஆண்டு மக்களவை தேர்தலில் தெற்கு கொல்கத்தாவில் தனது முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்றார். 1989ம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்தார். 1991ம் ஆண்டு நடந்த தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார். 2009ம் ஆண்டு வரை நடந்த பொதுத் தேர்தல்கள் வரை அப்பதவியில் இருந்து வந்தார். 1997 ல் அவர் ஆல் இந்தியா திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினை நிறுவினார். ரயில்வே அமைச்சராக இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என மாறி மாறி கூட்டணி வைத்த மமதா, நந்திகிராம் மற்றும் சிங்கூர் போராட்டங்களின் போது இன்னும் முக்கியத்துவம் அடைந்தார். இறுதியாக அவர் 2011ம் ஆண்டு மேற்கு வங்க மாநிலத்தின் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின் 2016ம் ஆண்டில் மேலும் பெரிய வெற்றியுடன் ஆட்சியமைத்தார்.

2021 மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் திரிணாமுல் சார்பாக நந்திகிராமில் போட்டியிட்டு பாஜக வேட்பாளர் சுவேண்டு அதிகாரியிடம் மம்தா பானர்ஜி அடைந்தார். இருப்பினும் மேற்கு வங்க முதல்வராக மீண்டும் மமதா பானர்ஜி 2021 மே 5ம் தேதி தனிப்பெரும்பான்மையோடு ஆட்சி அமைத்தார்.

மேலும் படிக்க
By Zainab Ashraf Updated: Saturday, October 7, 2023, 02:51:02 PM [IST]

மம்தா பானர்ஜி தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் மம்தா பானர்ஜி
பிறந்த தேதி 05 Jan 1955 (வயது 69)
பிறந்த இடம் கொல்கத்தா
கட்சி பெயர் All India Trinamool Congress
கல்வி Post Graduate
தொழில் அரசியல் & சமூக பணி
தந்தை பெயர் ப்ரோமிலேஸ்வர் பானர்ஜி
தாயார் பெயர் காயத்ரி பானர்ஜி
மதம் இந்து
இணையதளம் https://wb.gov.in/portal/web/guest/meet-the-chief-minister
சமூக வலைதளங்கள் சமூக வலைதளங்கள்:

மம்தா பானர்ஜி நிகர மதிப்பு

நிகர மதிப்பு: ₹16.72 LAKHS
சொத்துக்கள்:₹16.72 LAKHS
கடன்கள்: N/A

மம்தா பானர்ஜி சுவாரசிய தகவல்கள்

மம்தா பானர்ஜி மேற்கு வங்கத்தின் முதல் பெண் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். மூத்த சகோதரி என அதாவது 'திதி ' என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படுகிறார். வரலாற்றில் ஒரு கௌரவ பட்டமும் இஸ்லாமிய வரலாற்றில் முதுகலை பட்டமும் கல்வி மற்றும் சட்டம் ஆகியவற்றில் பட்டமும் பெற்றுள்ளார். அவர் கவிதைகளையும் எழுதுகிறார். கிட்டத்தட்ட 300 ஓவிய ஓவியங்கள் வரைந்து விற்றுள்ளார். பிரதமர் வேட்பாளராக பலராலும் கருதப்படுகிறார்.

மம்தா பானர்ஜி அரசியலில் கடந்து வந்த பாதை

2021
  • 2021 மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் திரிணாமுல் சார்பாக நந்திகிராமில் போட்டியிட்டு பாஜக வேட்பாளர் சுவேண்டு அதிகாரியிடம் மம்தா பானர்ஜி அடைந்தார். இருப்பினும் மேற்கு வங்க முதல்வராக மீண்டும் மமதா பானர்ஜி 2021 மே 5ம் தேதி பதவி ஏற்றார்.
2016
  • மேற்கு வங்க முதல்வராக 2வது முறையாக பதவியேற்றார் மமதா பானர்ஜி. காங்கிரஸுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டதில், மமதா கட்சி மட்டும் 211 சீட்டுகளை வென்று அதிரடி காட்டியது.
2012
  • ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெற்றார் மமதா பானர்ஜி.
2011
  • மேற்கு வங்கத்தில் எட்டாவது முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரஸ்-கூட்டணி கட்சிகள் 294 இடங்களில் 227 இடங்களை வென்றது. மாநிலத்தில் 34 ஆண்டு காலமாக நீடித்து வந்த இடது முன்னணி ஆட்சி பறிபோனது.
2009
  • மக்களவை தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இணைந்தார். மம்தா தனது ஐந்தாவது வெற்றியை கொல்கத்தா தக்ஷினில் இருந்து பதிவு செய்தார். மேலும் மன்மோகன் சிங் அரசில் ரயில்வே துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். ரயில்வே துறை அமைச்சர் பதவிக்கு இவர் 2வது முறையாக நியமிக்கப்பட்டார்.
2006
  • டாடா மோட்டார்ஸ் கார் திட்டத்திற்கு எதிராக மம்தா பானர்ஜி மிகப் பெரிய வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்தார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டசபைக்கு உள்ளே இருக்கைகள் மற்றும் மைக்குகளை உடைத்து பெரும் போராட்டத்தில் குதித்தனர்.
2006
  • 2006ம் ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி லோக்சபாவில் நடந்த கடுமையான விவாதத்தின்போது தனது ராஜினா கடிதத்தை துணை சபாநாயகர் சரஞ்சித் சிங் அத்வாலை நோக்கி வீசி பரபரப்பை ஏற்படுத்தினார்.
2006
  • கொல்கத்தா மாநகராட்சி தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் மம்தா தனது கட்சியின் வளர்ச்சி குறித்து அதிக கவனம் செலுத்தத் தொடங்கினார்.
2005
  • மம்தா மேற்கு வங்க அரசின் கட்டாய நிலம் கையகப்படுத்துதல் திட்டத்திற்கு எதிராக பெரும் போராட்டத்தில் குதித்தார். லட்சக்கணக்கான விவசாயிகள் மமதாவுடன் களத்தில் குதித்ததால் மேற்கு வங்க அரசுக்கு பெரும் நெருக்குதல் ஏற்பட்டது.
2004
  • மம்தா ராபின் தேப்பை தோற்கடித்து, தனது பதவியை மீண்டும் தக்க வைத்துக் கொண்டார்.
1999
  • தேசிய ஜனநாயக கூட்டணி (தேசிய ஜனநாயகக் கூட்டணி) அரசாங்கத்தில் மம்தாவின் அனைத்து இந்திய திரிணாமுல் கட்சி சேர்ந்தது. அவர் மத்திய ரயில்வே துறை அமைச்சராக பதவி ஏற்றார். தனது முதல் ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 2000-2001 ஆம் ஆண்டில் 19 புதிய ரயில்களை அறிமுகப்படுத்தினார்.
1999
  • மம்தா மீண்டும் கொல்கத்தா தக்ஷின் தொகுதியில் இருந்து வென்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சுபாங்கர் சக்ரவர்த்தியை தோற்கடித்தார்.
1998
  • 1998ம் ஆண்டு பொதுத் தேர்தலில் மம்தாவுக்கு கிடைத்த வாக்குகளின் சதவீதம் 59% ஆக அதிகரித்தது. அதே தொகுதியில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பிரசாந்த குமார் சுருக்கு எதிராக 224,081 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்தார்.
1997
  • மம்தா காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறி திரிணாமுல் காங்கிரஸ் (திரிணாமுல் காங்கிரஸ்) என்று பொதுவாக அழைக்கப்படும் அனைத்து இந்திய திரிணாமுல் காங்கிரஸ் என்ற பெயரில் புது கட்சியை நிறுவினார்.குறுகிய காலத்திலேயே கிழக்கு இந்தியாவின் மிகப் பெரிய எதிர்க்கட்சியாக திரிணாமுல் உருவெடுத்தது.
1996
  • மம்தா தனது கொல்கத்தா தக்ஷின் தொகுதியை தக்க வைத்துக் கொண்டார். இந்த முறை அவர் 103,261 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பார்தி முகர்ஜியை தோற்கடித்தார்.
1991
  • பிவி நரசிம்மராவ் அரசில் மனித வள மேம்பாட்டு துறை, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். பின்னர் அவர் 1993ம் ஆண்டில் தனது அமைச்சர் பதவியிலிருந்து வெளியேறினார்.
1991
  • மீண்டும் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த முறை அவர் கொல்கத்தா தக்ஷின் தொகுதியில் இருந்து வென்றார். அவர் 3,67,896 வாக்குகளைப் பெற்றார். இது மொத்த வாக்குகளில் 52 சதவிகித வாக்குகள் ஆகும்.
1989
  • 1989 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் காங்கிரசிற்கு எதிரான அலை காரணமாக ஜோத்பூர் தொகுதியில் தோல்வியுற்றார்.
1984
  • 1984 ஆம் ஆண்டின் மத்தியில் இந்திய இளைஞர் காங்கிரஸ் கட்சியில் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
1984
  • ஜோத்பூர் மக்களவை தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சோம்நாத் சாட்டர்ஜியை தோற்கடித்ததன் மூலம் மக்களவை தேர்தலில் தன் முதல் வெற்றியை அடைந்தார். பாராளுமன்ற உறுப்பினர்களில் சிறு வயது உடையவர்களில் ஒருவராக மம்தா இருந்தார்.
1976
  • மேற்கு வங்க மகிளா காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நான்கு வருடங்கள் இந்த பதவியில் பணிபுரிந்தார்.
1974
  • காங்கிரஸ் கட்சியின் மாவட்ட அளவில் மம்தா தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார்.

முந்தைய வரலாறு

1970
  • ஜோகமயா தேவி கல்லூரியில் படிக்கும்போது சத்ர பரிஷத் அமைப்பை உருவாக்கினார் மமதா. இது காங்கிரஸின் கட்சியின் மாணவர் பிரிவு ஆகும். மாணவர் சங்க தேர்தலில் மமதா பானர்ஜி போட்டியிட்டு, இந்திய சோசலிச ஒற்றுமை மையத்தின், ஜனநாயக மாணவர் சங்க வேட்பாளரை வீழ்த்தினார்.

மம்தா பானர்ஜி சாதனைகள்

ஜோத்பூர் தொகுதியில் மூத்த கம்யூனிஸ்ட் தலைவரான சோமநாத் சாட்டர்ஜியை தோற்கடித்து 1984ம் ஆண்டில் மம்தா பானர்ஜி தனது முதல் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றார். காங்கிரசில் இருக்கும் போது மனித வள அபிவிருத்தி துறை, இளைஞர் விவகாரத் துறை மற்றும் விளையாட்டுத் துறை பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாட்டுத் துறை அமைச்சகங்களில் இணை அமைச்சராக பணியாற்றி வந்தார். மேற்கு வங்கத்தின் முதல்வராக தேந்தெடுக்கப்பட்ட பின்பு மம்தா மாநிலத்தில் மாவோயிஸ்ட் அச்சுறுத்தலை திறம்பட சமாளித்துள்ளார்.

Disclaimer: The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X