Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராகுல்காந்தி

ராகுல்காந்தி
காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல்காந்தி, இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால்நேருவின் கொள்ளுப்பேரன். முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி இவரின் பாட்டி.
By Rashmi | Tuesday, February 19, 2019, 01:36:47 PM [IST]

ராகுல்காந்தி சுயசரிதை

காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல்காந்தி, இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால்நேருவின் கொள்ளுப்பேரன். முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி இவரின் பாட்டி. படுகொலைசெய்யப்பட்ட முன்னாள் பிரதமர் இராஜீவ்காந்தி, ஐமுகூ தலைவர் சோனியாகாந்தியின் மகனான இவருக்கு, பிரியங்கா காந்தி என்ற தங்கையும் உள்ளார். 2004ல் தனது அரசியல் வாழ்வை துவங்கிய ராகுல், தனது தந்தையின் தொகுதியான உத்திரபிரதேசத்தின் அமேதியில் முதல்முதலாக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார். 24 செப்டம்பர்2007 அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். இவர் தனது தொடக்ககல்வியை டெல்லி செயிண்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியிலும் பின்னர் டேராடூனிலும் பயின்றார். ஹார்வர்டு பல்கலைக்கழகம் மற்றும் ப்ளோரிடாவின் லோரின்ஸ் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ட்ரைனிடி கல்லூரியில் டெவலப்மென்ட் ஸ்டடீஸ் எம்.பில் பட்டம் முடித்தார். அரசியலில் நுழைவதற்கு முன்பாக தனியார் நிறுவனங்களில் பணியாற்றிய ராகுல், தற்போது அமேதி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.

மேலும் படிக்க

ராகுல்காந்தி தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் ராகுல்காந்தி
பிறந்த தேதி 19 Jun 1970 (வயது 55)
பிறந்த இடம் டெல்லி
கட்சி பெயர் Indian National Congress
கல்வி Post Graduate
தொழில் அரசியல்வாதி
தந்தை பெயர் ராஜீவ்காந்தி
தாயார் பெயர் சோனியாகாந்தி
துணைவர் பெயர் திருமணமாகவில்லை
மதம் இந்து
இணையதளம் rahulgandhi.in

ராகுல்காந்தி நிகர மதிப்பு

நிகர மதிப்பு
₹19.9 CRORE
சொத்துக்கள்
₹20.4 CRORE
கடன்கள்
₹49.79 LAKHS

ராகுல்காந்தி சுவாரசிய தகவல்கள்

1991ல் ராஜீவ்காந்தி படுகொலைக்கு பின்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக ப்ளோரிடாவின் ரோலின்ஸ் கல்லூரியில் ரவுல் வின்சி எனும் புனைப்பெயரில் இளங்கலை பட்டம் பயின்றார். ராஜீவ் காந்தி அறக்கட்டளை, ஜவஹர்லால் நேரு மெமோரியல் ஃபண்ட், சஞ்சய் காந்தி மெமோரியல் டிரஸ்ட் மற்றும் ராஜீவ் காந்தி அறக்கட்டளை அறக்கட்டளை மற்றும் இந்திரா காந்தி மெமோரியல் டிரஸ்ட் ஆகியவற்றுடன் இணைந்து சமூகசேவைகளில் ஈடுபட்டுவருகிறார். மேலும் உத்திரபிரதேசத்தில் லாபநோக்கில்லா கண் சிகிச்சை வழங்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
2009 நாடாளுமன்ற தேர்தலின் போது, வெறும் ஆறே வாரங்களில் நாடுமுழுவதும் 125 பேரணிகளை நடத்தினார்.

ராகுல்காந்தி அரசியலில் கடந்து வந்த பாதை

  • 2018: கர்நாடக சட்டமன்ற தேர்தலில் 30 மாவட்டங்களுக்கும் ராகுல் பயணம் செய்து பிரச்சாரம் செய்த நிலையில், 224ல் 80 தொகுதிகளில் வென்று மதச்சார்பற்ற ஜனதாதளத்துடன் இணைந்து கூட்டணி அரசை அமைத்தது.
  • 2014: மீண்டும் 16வது மக்களவைக்கு தேர்வான ராகுல், வெளிவிவகாரங்களுக்கான நிலைக்குழு, நிதி மற்றும் பெருநிறுவன விவகாரத்துறை அமைச்சகத்தின் ஆலோசனை குழு போன்றவற்றின் உறுப்பினரானார்.
  • 2013: உத்திரபிரதேச தோல்விக்கு பிறகு, ராகுலின் தலைமையில் பிரச்சாரங்கள் நடைபெறவில்லை.
  • 2013: ஜனவரி 2013ல் காங்கிரஸ் கட்சியின்துணைத்தலைவரானார்.
  • 2012: ராகுல் தலைமையில் 2012 உத்திரபிரதேச சட்டமன்ற தேர்தலில் பிரச்சாரம் செய்தது காங்கிரஸ். 2 மாதங்களில் 200 பேரணிகள் நடத்திய நிலையில், 28 தொகுதிகளில் வென்றது.
  • 2011: புத்த பார்சால் கிராமத்தில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்றார் ராகுல். நெடுஞ்சாலை திட்டத்திற்காக கையகப்படுத்தும் நிலத்திற்கு அதிக இழப்பீடு கோரி நடைபெற்ற அந்த போராட்டத்தில் ராகுல் கைது செய்யப்பட்டார். போராட்ட களத்தில் இருந்து அவரை வெளியேற்ற காவல்துறை பின்னர் ஜாமீன் வழங்கி டெல்லி-உத்திரபிரதேச எல்லையில் விடுவித்தது.
  • 2009: மனிதவள மேம்பாட்டு துறையின் நிலைக்குழு உறுப்பினராக 31 ஆகஸ்ட் 2009ல் நியமிக்கப்பட்டார்.
  • 2009: அதேதொகுதியில் மீண்டும் போட்டியிட்டு 15வது மக்களவைக்கு தேர்வான ராகுல், இம்முறை சுமார் 3,70,000 வாக்கு வித்தியாசத்தில் வென்றார். 2009 தேர்தலில் காங்கிரஸ் 21 தொகுதிகளில் வெற்றி பெற்றது ராகுலையை சாரும்.
  • 2007: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளராக 24 செப்டம்பர் 2007ல் நியமிக்கப்பட்டார். மேலும் இளைஞர் காங்கிரஸ் மற்றும் என்எஸ்யூஐ-ன் பொறுப்பு பொதுச்செயலாளராகவும் நியமிக்கப்பட்டார்.
  • 2007: 2007 உத்திரபிரதேச சட்டமன்ற தேர்தலில் ராகுல்.தலைமையில் காங்கிரஸ் பிரச்சாரம் செய்தது.ஆனால் காங்கிரஸ் 403தொகுதிகளில் 22ல் மட்டுமே வெற்றிபெற்றது.
  • 2007 - 2009: மனிதவள மேம்பாட்டு நிலைக்குழுவின் உறுப்பினராக பணியாற்றினார்.
  • 2004 - 2006: உள்விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
  • 2004: முதல்முறையாக நாடாளுமன்ற தேர்தலில் அமேதி தொகுதியில் போட்டியிட்ட ராகுல், சுமார் 1லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று 14வது மக்களவைக்கு தேர்வானார்.

முந்தைய வரலாறு

  • 2002: மும்பையைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான பேக்ஆப்ஸ் சர்வீசஸ் பிரைவேட் லிமிடேட்-ல் இயக்குனராக நியமிக்கப்பட்டார்.
  • 1996: அரசியலுக்கு வருவதற்கு முன்பாக, லண்டனில் உள்ள மேனேஜ்மென்ட் கன்சல்டிங் நிறுவனமான மானிட்டர் க்ரூப்பில் பணியாற்றினார் ராகுல்.

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+