முகப்பு
 » 
மாயாவதி

மாயாவதி

மாயாவதி

அசாதாரணமான அரசியல் பகுதியில் இருந்து இந்தியா வழங்கிய மிகவும் உன்னதமான மற்றும் பலம்வாய்ந்த தலைவர்களில் ஒருவரான மாயாவதி, உத்திரப்பிரதேச முதலமைச்சராக பணியாற்றிய இந்தியாவில் முதல் தலித் பெண் என்ற வரலாற்றைப் படைத்தார். 4 முறை முதலமைச்சராக பதவிவகித்த இவர் 2012ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் படுதோல்வியடைந்ததால் ராஜினாமா செய்தார்.

மாயாவதி சுயசரிதை

அசாதாரணமான அரசியல் பகுதியில் இருந்து இந்தியா வழங்கிய மிகவும் உன்னதமான மற்றும் பலம்வாய்ந்த தலைவர்களில் ஒருவரான மாயாவதி, உத்திரப்பிரதேச முதலமைச்சராக பணியாற்றிய இந்தியாவில் முதல் தலித் பெண் என்ற வரலாற்றைப் படைத்தார். 4 முறை முதலமைச்சராக பதவிவகித்த இவர் 2012ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் படுதோல்வியடைந்ததால் ராஜினாமா செய்தார். இவர் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவராகவும் உள்ளார்.தொழில்முறையில் முன்னாள் ஆசிரியரான மாயாவதி, பி.எஸ்.பி நிறுவனர் கன்ஷிராம் அணுகியபோது அரசியலுக்குள் நுழைந்தார்.1995 இல் மாயாவதிக்கு தனது தலைமையைக் கொடுத்தார் கன்ஷிராம். சிறந்த முதலமைச்சராக பதவி வகித்த மாயாவதி, திறமையான நிர்வாகம் மற்றும் சட்டம் ஒழுங்கை ஊக்குவித்தல் போன்றவற்றின் மூலம் பாராட்டுக்களை பெற்றார். இவரது முதல் மற்றும் இரண்டாவது முதலமைச்சர் பதவிகாலமானது கட்டாயப்படுத்தி இராஜினாமா கடிதம் பெறப்பட்டதால் ஒரு சிலமாதங்களிலேயே திடீரென முடிவுக்கு வந்தது. அவரது மூன்றாவது முதலமைச்சர் பதவிகாலம் ஒரு ஆண்டு நீடித்தது மற்றும் அவர் தனது நான்காவது முதலமைச்சர் பதவிகாலத்தை முழுமையாக அனுபவித்தார். அந்த காலக்கட்டத்தில் முலாயம் சிங் அரசாங்கத்தின்போது முறைகேடாக பணியமர்த்தப்பட்ட போலிஸ் அதிகாரிகளின் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர் 1989 ஆம் ஆண்டு முதல்முறையாக பிஜ்னோர் தொகுதியிலிருந்து லோக்சபா தேர்தலில் வெற்றிபெற்றார். அவர் 1994 ல் ராஜ்ய சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1998-2004 ல் அக்பர்பூர் தொகுதியில் இருந்து தொடர்ந்து மூன்றுமுறை லோக்சபாவிற்கு தேர்வானார். 2014 ல் பொதுத்தேர்தலில் மாயாவதியின் கட்சி பா.ஜ.கவால் அழிக்கப்பட்டு, மாநிலத்தில் ஒரு தொகுதியை கூட தக்கவைத்துக் கொள்ள முடியாமல்போனது. இருப்பினும் சமீபத்திய மேம்பாடுகள் அவரை மெதுவாக அரசியல் கல்லறையிலிருந்து தனது வழியைத் தோண்டி எடுப்பதை சுட்டிக்காட்டுகின்றன. சமாஜ்வாதியுடன் கூட்டணி அமைத்து அலிகார் மற்றும் மீரட் ஆகியவற்றில் இருந்து மேயர் இடங்களை வென்றது அலைகள் அவரை நோக்கி வீசுவதற்கான அறிகுறிகளாக தெரிகிறது.

மேலும் படிக்க
By Zainab Ashraf Updated: Thursday, May 30, 2019, 03:56:19 PM [IST]

மாயாவதி தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் மாயாவதி
பிறந்த தேதி 15 Jan 1956 (வயது 68)
பிறந்த இடம் டெல்லி
கட்சி பெயர் Bahujan Samaj Party
கல்வி NULL
தொழில் சமூகசேவகர், வழக்கறிஞர்
தந்தை பெயர் திரு. பிரபு தாஸ்
தாயார் பெயர் திருமதி. ராம் ரதி
மதம் இந்து
சமூக வலைதளங்கள் சமூக வலைதளங்கள்:

மாயாவதி நிகர மதிப்பு

நிகர மதிப்பு: ₹75.92 CRORE
சொத்துக்கள்:₹87.27 CRORE
கடன்கள்: ₹11.35 CRORE

மாயாவதி சுவாரசிய தகவல்கள்

2007 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்ற மாயாவதியின் பி.எஸ்.பி. கட்சி, 2009ல் உத்தரபிரதேச மாநிலத்தில் 20 மக்களவை இடங்களை கைப்பற்றியது. மாநிலத்தில் எந்தவொரு கட்சியும் பெறாதவகையில் 27.42% என்ற அதிக ஓட்டு சதவீதத்தை பெற்றது.


தலித் சமூகத்திற்கான பிரதிநிதியாக மாறிய மாயாவதியை மில்லியன்கணக்கான தலித் ஆதரவாளர்கள் தங்களின் அடையாளமாக கருதினர் மற்றும் அவரை "பீஹென்-ஜி" (சகோதரி) எனக் அழைத்தனர்.

15 டிசம்பர் 2001 அன்று நடைபெற்ற பேரணியில் தலித் தலைவர் கன்ஷி ராம், மாயாவதியை தனக்கும் தனது பகுஜன் இயக்கத்திற்கும் அரசியல் வாரிசாகவும் அறிவித்தார்.

மாயாவதி அரசியலில் கடந்து வந்த பாதை

2018
  • மாயாவதி 2018 ஏப்ரல் 2 ஆம் தேதி, ராஜ்ய சபாவில் இருந்து ராஜினாமா செய்தார்.
2017
  • மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி மீண்டும் சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்தது. இம்முறை அக்கட்சி 403 இடங்களில் 19ல் மட்டுமே வெற்றி பெற்றது.
2014
  • உத்தரப்பிரதேசத்தில் மக்களவை தேர்தலில் அதிக எண்ணிக்கையிலான இடங்களில் வெல்ல தீவிரமாக முயன்ற மாயாவதி, மிகப்பெரிய பூஜ்யத்தையே பெற்றார்.
2012
  • உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியை இழந்த உடனேயே, 2012 ஏப்ரல் 3 ம் தேதி ராஜ்யாசபாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2012
  • 2012 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. மேலும், அவரது கட்சி சமாஜ்வாடி கட்சியிடம் தோற்று ஆட்சியை பறிகொடுத்தது. உத்தரபிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் பதவியில இருந்து விலகினார்.
2007
  • 2007 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாடி கட்சியின் ஆர்ஏ உஸ்மானியிடம் தோல்வியடைந்தார் மாயாவதி. ஆனால் பி.எஸ்.பி கட்சி பெரும்பான்மை இடங்களில் வெற்றிபெற்றதால் மாயாவதி உத்தரப்பிரதேசத்தின் முதலமைச்சராக பதவியேற்றார். மார்ச் 15, 2012 வரை முதல்வராக பணியாற்றினார்.
2004
  • ஜூலை 2004 ல் இரண்டாவது முறையாக ராஜ்ய சபாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, 5 ஜூலை 2007 வரை பணியாற்றினார்.
2004
  • நான்காவது முறையாக அக்பர்பூரில் எம்.பி.யாக 58269 வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற மாயாவதி, 5 ஜூலை 2004ல் ராஜினாமா செய்தார்.
2002
  • 3 மே 2002 முதல் 29 ஆகஸ்ட் 2003 வரை மூன்றாவது முறையாக குறுகிய காலம் முதல்வராக இருந்தார்.
1999
  • ராம் பியாரே சுமனை 53,386 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து அக்பர்பூரை தக்கவைத்துக்கொண்டார்.
1998
  • அக்பர்பூர் தொகுதியில் இருந்து இரண்டாவது முறையாக வென்ற மாயாவதி, அங்கு டாக்டர். லால்டா பிரசாத் கன்னூஜியாவை 25179 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
1997
  • உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல்அமைச்சராக தனது இரண்டாவது முறையாக (21 மார்ச் முதல் 20செப்டம்பர் வரை) குறுகியகாலம் பணியாற்றினார்.
1996
  • 1996-1998 ல் ஹரோரா தொகுதியில் இருந்து உத்திரபிரதேச சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு 2515 வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
1995
  • கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்ட மாயாவதி, உத்தரபிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக 3 ஜூன் முதல் 18 அக்டோபர் 1995 வரை பணியாற்றினார்.
1994
  • அவர் ராஜ்யசபாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1989
  • முதல்முறையாக லோக் சபா தேர்தலில் போட்டியிட்ட மாயாவதி, பீஜ்னோர் தொகுதியில் ஜனதாதளத்தின் மங்கள் ராம் பிரேமியை 8879 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
1984
  • பகுஜன்சமாஜ் கட்சியில் இணைந்த மாயாவதி கன்ஷிராமை பின்பற்றுபவர் ஆனார்.

முந்தைய வரலாறு

1977
  • 1976 ஆம் ஆண்டு மீரட் பல்கலைக்கழகத்தின் கஜியாபாத் விஎம்எல்ஜி கல்லூரியில் இருந்து பிஎட் நிறைவு செய்ய மாயாவதி, 1977-1984 காலகட்டத்தில் டெல்லி நிர்வாகத்தில் ஆசிரியராக பணியாற்றினார்.

மாயாவதி சாதனைகள்

முன்னாள் பிரதம மந்திரி பி.வி. நரசிம்ம ராவ் மாயாவதியை "ஜனநாயகத்தின் அதிசயம்" என வர்ணித்தார். வறுமை நிறைந்த பின்புலத்தில் இருந்த வந்த அவர், தனது குறிப்பிடத்தக்க வாழ்க்கையில் அரசியலின் ஆதிக்கசக்தியாகவும்,இந்த நாட்டில் அதிக செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகளில் ஒருவராகவும் மாறியுள்ளார். 2008 ஆம் ஆண்டில் ஃபோர்ப்ஸ் பத்திரிகை மாயாவதியை உலகின் சக்தி வாய்ந்த 100 பெண்களின் பட்டியலில் 59 வது இடத்தில் சேர்ந்தது.

Disclaimer: The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X