Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிவ்ராஜ் சிங் சவுகான்

சிவ்ராஜ் சிங் சவுகான்
பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மத்தியபிரதேச முன்னாள் முதல்வரான சிவ்ராஜ்சிங் சவுகான், அரசியலில் நுழைவதற்கு முன்பாக ஆர்எஸ்எஸ் தன்னார்வலராக இருந்தார். 1972ஆம் ஆண்டில் தனது 13 வயதிலேயே ஆர்எஸ்எஸ்-ல் இணைந்தார்.
By Zainab Ashraf | Thursday, May 30, 2019, 03:56:19 PM [IST]

சிவ்ராஜ் சிங் சவுகான் சுயசரிதை

பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மத்தியபிரதேச முன்னாள் முதல்வரான சிவ்ராஜ்சிங் சவுகான், அரசியலில் நுழைவதற்கு முன்பாக ஆர்எஸ்எஸ் தன்னார்வலராக இருந்தார். 1972ஆம் ஆண்டில் தனது 13 வயதிலேயே ஆர்எஸ்எஸ்-ல் இணைந்தார்.விதிஷா தொகுதியில் இருந்து 5 முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சிவ்ராஜ், தற்போது ஷிகோர் மாவட்டத்தின் புத்னி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.ஏபிவிபி அமைப்பிலும் பல்வேறு பொறுப்புகள் வகித்த இவர், தனது அரசியல் வாழ்வின் துவக்கத்தில் அகில பாரதிய கேசரியா வாகினியின் அமைப்பாளராகவும் இருந்துள்ளார். பெண்கள் நலம் மற்றும் அதிகாரமளிக்கும் திட்டங்களுக்கு பெயர்பெற்ற இவர், முதலமைச்சராக இருந்தபோது கான் கி பேட்டி யோஜனா, ஜனனி சுரக்ஸா ஏனம் ஜனனி பிரசாவ் யோஜனா, ஸ்வகதம் லக்ஷ்மி யோஜனா, உஷா கிரன் யோஜனா, தேஜஸ்வினி, ஒன் ஸ்டாப் கிரிசிஸ் சென்டர், லாடோ அபிவான், போன்ற முக்கிய திட்டங்களை செயல்படுத்தி செயல்படுத்தினார். குழந்தைபருவத்தில் நர்மதை ஆற்றில் விளையாடுவதிலும் நீச்சல் அடிப்பதிலும் அதிக நேரத்தை செலவளித்த இவருக்கு நர்மதை ஆற்றின் மீதான அலாதி பிரியம் காரணமாக அதன் சூழலை காப்பாற்ற பல முயற்சிகளை எடுத்துள்ளார்.

மேலும் படிக்க

சிவ்ராஜ் சிங் சவுகான் தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் சிவ்ராஜ் சிங் சவுகான்
பிறந்த தேதி 05 Mar 1959 (வயது 67)
பிறந்த இடம் ஷிஹோர், மத்தியபிரதேசம்
கட்சி பெயர் Bharatiya Janta Party
கல்வி Post Graduate
தொழில் விவசாயி
தந்தை பெயர் ப்ரேம்சிங் சவுகான்
தாயார் பெயர் சுந்தர்பாய் சவுகான்
துணைவர் பெயர் சத்னாசிங் சவுகான்
குழந்தைகள் 2 மகன்(கள்)
மதம் இந்து
இணையதளம் http://www.shivrajsinghchouhan.org/

சிவ்ராஜ் சிங் சவுகான் நிகர மதிப்பு

நிகர மதிப்பு
₹8.34 CRORE
சொத்துக்கள்
₹8.99 CRORE
கடன்கள்
₹64.12 LAKHS

சிவ்ராஜ் சிங் சவுகான் சுவாரசிய தகவல்கள்

இளம் ஆர்.எஸ்.எஸ். தன்னார்வலராக இருந்த சிவ்ராஜ்,1975 ஆம் ஆண்டு அவசரநிலையின் போது சிறையில் அடைக்கப்பட்டார்.

1988 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ம் தேதி அரசுக்கு எதிராக போபாலில் நடைபெறும் பேரணியில் தன்னுடன் குறைந்தபட்சம் 40ஆயிரம் பேர் வருவார்கள் என அன்றைய காங்கிரஸ் அரசிடம் சவால்விட்டார். மாவட்ட நிர்வாகம் அதற்கேற்றவாறு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்த நிலையில் அவருக்கு ஆதரவாக சுமார் 1லட்சம் பேர் திரண்டனர்.

கபாடி, கிரிக்கெட் மற்றும் கைப்பந்து அவருக்கு பிடித்த விளையாட்டுகள் ஆகும். கிராமப்புறங்களில் உள்ள பல்வேறு விளையாட்டு நிறுவனங்களுடன் அவருக்கு தொடர்புள்ளது.

சிவ்ராஜ் சிங் சவுகான் அரசியலில் கடந்து வந்த பாதை

  • 2013: மத்தியபிரதேசத்தில் மூன்றாவது முறையாக தொடர்ச்சியான வெற்றியை பதிவு செய்த சிவ்ராஜ், மூன்றாவது முறையாக முதலமைச்சரானார். மேலும் அம்மாநிலத்தில் நீண்டகாலம் முதல்வராக பணியாற்றியவர் என பெயர்பெற்றார்.
  • 2008: அடுத்த சட்டசபை தேர்தலில் இரண்டாவது முறையாக பாஜகாவை வெற்றி பாதைக்கு அழைத்துசென்ற சிவ்ராஜ், டிசம்பர் 12 2008 அன்று மீண்டும் முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
  • 2006: 1990 ல் தனது அரசியல் பயணம் தொடங்கிய புத்னி தொகுதியில் சட்டசபை இடைத்தேர்தல் மூலம் வெற்றி பெற்றார்.
  • 2005: 2005 ஆம் ஆண்டு மத்தியப் பிரதேச பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார். நவம்பர் 29, 2005 அன்று அம்மாநிலத்தின் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 2004: ஷிவ்ராஜ் சிங் 5வது முறையாக வெற்றிபெற்று 14 வது மக்களவைக்கு தேர்வானார். அக்காலகட்டத்தில் விவசாயத்தில் குழு உறுப்பினராகவும், லாப அலுவலகக் கூட்டு குழுவின் உறுப்பினராவும் இருந்தார்.மேலும் லோக் சபாவின் ஹவுஸ் குழுவிற்கும் தலைமை தாங்கினார்.
  • 1999: விதிஷா லோக்சபா தொகுதியில் இருந்து தொடர்ந்து நான்காவது முறையாக வெற்றி பெற்று, ஹவுஸ் கமிட்டி (லோக் சபா) தலைவரானார். மேலும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளரானார்.
  • 1998: 12 வது மக்களவைக்கு (மூன்றாவது முறையாக) மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட சிவராஜ், 1998-99-ல் நகர்ப்புற மற்றும் கிராமப்புற மேம்பாடு, கிராமப்புற பகுதிகள் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் துணை குழு போன்றவற்றில் உறுப்பினராக இருந்தார்.
  • 1996: விதிஷா தொகுதியில் இருந்து 11 வது மக்களவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த காலகட்டத்தில் அவர் நகர்ப்புற மற்றும் கிராமப்புற மேம்பாடு, மனித வள மேம்பாடு, ஹிந்தி சதுரார் சமிடி மற்றும் தொழிலாளர் நலனில் உள்ளிட்ட பல்வேறு நாடாளுமன்ற குழுக்களின் உறுப்பினராக இருந்தார்.
  • 1992: பாரதீய ஜனதா யுவா மோர்சாவின் பொதுச்செயலாளர் ஆனார்.
  • 1991: விதிஷா பாராளுமன்ற தொகுதியில் இருந்து அடல் பஹாரி வாஜ்பாய் ராஜினாமா செய்த போது, அத்தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட சிவ்ராஜ் சிங் சவுஹான் வெற்றி பெற்று இளம் பாராளுமன்ற உறுப்பினரானார்.
  • 1990: 31 வயதில், புத்னி தொகுதியில் இருந்து மாநில சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சிவராஜ், சுமார் 22,000 வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்தார்.
  • 1988: மத்தியப் பிரதேச பாரதீய ஜனதா யுவா மோர்சாவின் தலைவரானார்
  • 1984: மத்தியப் பிரதேச பாரதீய ஜனதா யுவா மோர்சாவில் இணைந்த சிவராஜ் சிங் , ஒரு வருடத்திற்குள் இணை செயலாளர் ஆனார்.

முந்தைய வரலாறு

  • 1978: மத்தியபிரதேச ஏபிவிபி-ன் இணை செயலாளாரான சிவ்ராஜ்,1980ல் பொதுச்செயலாளாரானார். 1982ல் தேசிய செயற்குழு உறுப்பினரானார்.
  • 1977: ஸ்வயம்ஸேவாக்,ஆர்எஸ்எஸ் ஆகியவற்றில் இளைய தொண்டராக இருந்தார். பின்னர் போபால் அகில பாரதியா வித்யாரதி பரிஷத் (A.B.V.P). ஒருங்கிணைப்பு செயலாளரானார்.
  • 1975: அவரது 16 வயதில், மாடல் மேல்நிலைப்பள்ளி மாணவர் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சிவ்ராஜ் சிங் சவுகான் சாதனைகள்

2006 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி சூர்யோதை மானவ்டா சேவா சன்மன் வழங்கினார்.

2003ஆண்டிற்கு முன்னர் மத்தியப் பிரதேசம் பலவீனமான மாநிலமாக கருதப்பட்டது. சிவராஜ் சிங் தலைமையின் கீழ், மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அபரிமிதமாக வளர்ச்சி அடைந்தது. இது 2014-15 ல் 10.19% வளர்ச்சி மற்ற அனைத்து மாநிலங்களை காட்டிலும் அதிகம்.

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+