Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உம்மன் சாண்டி

உம்மன் சாண்டி
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர், கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி. கேரள சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவராக தற்போது திகழ்கிறார்.
By Moumi Majumdar | Tuesday, February 19, 2019, 01:51:58 PM [IST]

உம்மன் சாண்டி சுயசரிதை

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர், கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி. கேரள சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவராக தற்போது திகழ்கிறார். பள்ளிப் படிப்பை புதுப்பள்ளி செயின்ட் ஜார்ஜ் உயர் நிலைப் பள்ளியில் முடித்தார். பின்னர் கோட்டயத்தில் உள்ள சிஎம்எஸ் கல்லூரியில் கல்லூரிப் படிப்பை முடித்தாதர். சங்கணச்சேரியில் உள்ள செயின்ட் பெர்க்மான்ஸ் கல்லூரியிலும் படித்தார். எர்ணாகுளம் அரசு சட்டக் கல்லூரியில் எல்எல்பி படிப்பை முடித்தார். அரசியல் வாழ்க்கையை கேரள மாணவர் சங்கத்திலிருந்து தொடங்கினார். கடைசியாக முதல்வர் பதவி வரை உயர்ந்தார். முதல்வராக தேர்வு செய்யப்படுவதற்கு முன்பு, நிதித்துறை, உள்துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்துள்ளார்.

மேலும் படிக்க

உம்மன் சாண்டி தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் உம்மன் சாண்டி
பிறந்த தேதி 31 Oct 1943
இறந்த தேதி 18 Jul 2023 (வயது 79)
பிறந்த இடம் குமரோகம்
கட்சி பெயர் Indian National Congress
கல்வி Graduate Professional
தொழில் அரசியல்வாதி
தந்தை பெயர் கேஓ சாண்டி
தாயார் பெயர் பேபி சாண்டி
துணைவர் பெயர் மரியம்மா உம்மன் சாண்டி
துணைவர் தொழில் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி
குழந்தைகள் 1 மகன்(கள்) 2 மகள்(கள்)
மதம் கிறிஸ்தவம்
இணையதளம் oommenchandy.net

உம்மன் சாண்டி நிகர மதிப்பு

நிகர மதிப்பு
₹60.92 LAKHS
சொத்துக்கள்
₹91.22 LAKHS
கடன்கள்
₹30.3 LAKHS

உம்மன் சாண்டி சுவாரசிய தகவல்கள்

புதுப்பள்ளி சட்டசபைத் தொகுதியிலிருந்து 1970ம் ஆண்டு முதல் முறையாக வெற்றி பெற்றார் உம்மன் சாண்டி. இப்போது வரை அதன் உறுப்பினராக இருக்கிறார். 11 முறை இந்தத் தொகுதியில் அவர் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 2004ம் ஆண்டு, கேரளாவில் ஒரு லோக்சபா தொகுதியில் கூட காங்கிரஸ் வெல்லவில்லை. இதனால் முதல்வராக இருந்த ஏ.கே.அந்தோணி பதவி விலகினார். இதையடுத்து உம்மன் சாண்டி முதல்வராக நியமிக்கப்பட்டார். 2006 சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்தது. இருப்பினும் 40 சதவீத தொகுதிகளை அது தக்க வைத்துக் கொண்டது. மேலும் வாக்கு சதவீதமும் 10 சதவீதம் அதிகமாகவே பெற்றது. 2013ல் உம்மன் சாண்டிக்கு, ஐ.நா. சபையின் பொது சேவை விருது வழங்கப்பட்டது. பொது வாழ்க்கையில் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் ஊழலை தடுக்க பாடுபட்டமைக்காக இந்த விருது அவருக்குக் கிடைத்தது.

உம்மன் சாண்டி அரசியலில் கடந்து வந்த பாதை

  • 2016: கேரள சட்டசபைக்கு புதுப்பள்ளி தொகுதியிலிருந்து வெற்றி பெற்றார். இவர் வீழ்த்திய வேட்பாளர் ஜெய்க் சி. தாமஸ்.
  • 2011: புதுப்பள்ளி தொகுதியில் வென்று 10வது முறையாக சட்டசபைக்குள் நுழைந்த உம்மன் சாண்டி முதல்வராக பொறுப்பேற்றார். இத்தேர்தலில் அவர் சுஜா சூசன் ஜார்ஜை வீழ்த்தினார்.
  • 2006: கேரள சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவரானார்.
  • 2006: வேட்பாளர் சிந்து ஜாயை வீழ்த்தி கேரள சட்டசபைக்கு 9வது முறையாக தேர்வு பெற்றார் உம்மன் சாண்டி.
  • 2004: நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கேரளாவில் மோசமான தோல்வியைச் சந்தித்ததைத் தொடர்ந்து கேரள மாநில முதல்வர் பதவியிலிருந்து ஏ.கே.அந்தோணி விலகினார். இதையடுத்து முதல் முறையாக முதல்வர் பதவியில் அமர்ந்தார் சாண்டி.
  • 2001: செரியன் பிலிப்பை தோற்கடித்து கேரள சட்டசபைக்கு 8வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார் சாண்டி.
  • 1996: ரெஜி ஜக்காரியாவை வீழ்த்தி கேரள மாநில சட்டசபைக்கு 7வது முறையாக நுழைந்தார் உம்மன் சாண்டி.
  • 1991: கேரள மாநில அமைச்சரவையில் நிதித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
  • 1991: வி.என். வாசவனை தோற்கடித்து 6வது முறையாக சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1987: கேரள மாநில சட்டசபைக்கு 5வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த முறை வி.என். வாசவனை அவர் தோற்கடித்தார்.
  • 1982: கேரள மாநில அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.
  • 1982: தாமஸ் ராஜனை தோற்கடித்து கேரள மாநில சட்டசபைக்கு 4வது முறையாக தேர்வானார் உம்மன் சாண்டி.
  • 1980: கேரள மாநில சட்டசபைத் தேர்தலில் எம்.ஆர்.ஜி. பணிக்கரை வீழ்த்தி 3வது முறையாக எம்எல்ஏ ஆனார்.
  • 1977: கேரள தொழிலாளர் நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.
  • 1977: கேரள மாநில சட்டசபைக்கு 2வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த முறை அவர் வீழ்த்தியது பி.சி. செரியனை.
  • 1970: கேரள மாநில சட்டசபைக்கு புதுப்பள்ளி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்தலில் ஈஎம் ஜார்ஜை அவர் வீழ்த்தினார்.
  • 1970: கேரள இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1967: கேரள மாணவர் சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

உம்மன் சாண்டி சாதனைகள்

புதுப்பள்ளி சட்டசபைத் தொகுதியிலிருந்து 1970ம் ஆண்டு முதல் முறையாக வெற்றி பெற்றார் உம்மன் சாண்டி. இப்போது வரை அதன் உறுப்பினராக இருக்கிறார். 11 முறை இந்தத் தொகுதியில் அவர் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 2004ம் ஆண்டு, கேரளாவில் ஒரு லோக்சபா தொகுதியில் கூட காங்கிரஸ் வெல்லவில்லை. இதனால் முதல்வராக இருந்த ஏ.கே.அந்தோணி பதவி விலகினார். இதையடுத்து உம்மன் சாண்டி முதல்வராக நியமிக்கப்பட்டார். 2006 சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்தது. இருப்பினும் 40 சதவீத தொகுதிகளை அது தக்க வைத்துக் கொண்டது. மேலும் வாக்கு சதவீதமும் 10 சதவீதம் அதிகமாகவே பெற்றது. 2013ல் உம்மன் சாண்டிக்கு, ஐ.நா. சபையின் பொது சேவை விருது வழங்கப்பட்டது. பொது வாழ்க்கையில் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் ஊழலை தடுக்க பாடுபட்டமைக்காக இந்த விருது அவருக்குக் கிடைத்தது.

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+