Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பூபேஷ் பாகல்

பூபேஷ் பாகல்
பூபேஷ் பாகல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அரசியல்வாதி மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தின் மூன்றாவது முதலமைச்சர் ஆவார். டிசம்பர் 17 ம் தேதி அவர் முதல்வராக பதவி ஏற்றார்.
By Rashmi | Tuesday, February 19, 2019, 01:40:30 PM [IST]

பூபேஷ் பாகல் சுயசரிதை

பூபேஷ் பாகல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அரசியல்வாதி மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தின் மூன்றாவது முதலமைச்சர் ஆவார். டிசம்பர் 17 ம் தேதி அவர் முதல்வராக பதவி ஏற்றார். சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருக்கிறார். சத்தீஸ்கர் சட்டசபையில், துர்க் மாவட்டம் பதான் சட்டமன்ற தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஆரம்பத்தில் இருந்தே பாகல் சமூக சேவையில் மிகுந்த அக்கறை கொண்டவர். அவரது மாணவ வாழ்க்கையிலிருந்து அரசியல் தொடங்கியது. சமூக மறுமலர்ச்சிக்காக பாடுபட்டவர். ஆடம்பரங்களைத் தவிர்த்து எளிமையான முறையில் திருமணங்களை செய்வதை ஊக்குவிப்பவர். செய்ய ஊக்குவித்தார். இதன் பொருட்டு ஆண்டுதோறும் இலவச திருமண நிகழ்ச்சிகளையும் இவர் நடத்தி வருகிறார்.

மேலும் படிக்க

பூபேஷ் பாகல் தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் பூபேஷ் பாகல்
பிறந்த தேதி 23 Aug 1961 (வயது 64)
பிறந்த இடம் பதான்
கட்சி பெயர் Indian National Congress
கல்வி Post Graduate
தொழில் விவசாயம்
தந்தை பெயர் நந்த் குமார் பாகல்
தாயார் பெயர் பிந்தேஸ்வரி பாகல்
துணைவர் பெயர் முக்தேஸ்வரி பாகல்
துணைவர் தொழில் விவசாயம் மற்றும் வர்த்தகம்
குழந்தைகள் 1 மகன்(கள்) 3 மகள்(கள்)
மதம் இந்து

பூபேஷ் பாகல் நிகர மதிப்பு

நிகர மதிப்பு
₹22.47 CRORE
சொத்துக்கள்
₹23.05 CRORE
கடன்கள்
₹58.33 LAKHS

பூபேஷ் பாகல் சுவாரசிய தகவல்கள்

பூபேஷ் பாகல் 2018ஆம் ஆண்டு நடந்த சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வெற்றிக்கு இட்டுச் சென்றார். காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட 90 இடங்களில் 68 இடங்களில் வெற்றி பெற்றது.

பூபேஷ் பாகல் அரசியலில் கடந்து வந்த பாதை

  • 2018: மீண்டும் பதான் சட்டமன்ற தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 27477 வாக்குகள் வித்தியாசத்தில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த மோதிலால் சாஹுவை தோற்கடித்தார். மேலும் சத்தீஸ்கர் மாநில முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 2014: மத்தியப் பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
  • 2013: பதான் சட்டமன்ற தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்றார்.
  • 2009: மக்களவை தேர்தலில் மீண்டும் துர்க் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் மீண்டும் தோல்வியடைந்தார்.
  • 2008: 2008ம் ஆண்டு பதான் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார்.
  • 2004: 2004 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் துர்க் மக்களவை தொகுதியில் இருந்து போட்டியிட்ட அவர் தோல்வியடைந்தார்.
  • 2003: 2003 ஆம் ஆண்டில் மீண்டும் சட்டசபை தேர்தலில் பதான் தொகுதியில் போட்டியிட்டார்.சத்தீஸ்கர் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 2000: மத்திய பிரதேச மாநில சாலை போக்குவரத்துக் கழக தலைவராக நியமிக்கப்பட்டார். மத்திய பிரதேசத்திலிருந்து சத்தீஸ்கர் தனியாக பிரிந்த போது சத்தீஸ்கர் சட்டசபை உறுப்பினராக அவர் திகழ்ந்தார். சத்தீஸ்கர் மாநிலத்தின் முதல் வருவாய், பொது சுகாதார நிர்மாணம் மற்றும் சீரமைப்புத் துரை அமைச்சராக பதவியேற்றார்.
  • 1999: டிசம்பர் மாதம் போக்குவரத்துத் துறை அமைச்சராக உயர்வு பெற்றார்.
  • 1998: மீண்டும் பதான் தொகுதியில் இருந்து சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பகுஜன் சமாஜ் கட்சியின் நிருபமா சந்திராகரை தோற்கடித்தார். திக்விஜய் சிங்கின் அமைச்சரவையில், பொது குறை தீர்ப்புத்துறை அமைச்சராக டிசம்பர் மாதம் நியமிக்கப்பட்டார்.
  • 1994: மத்திய பிரதேச இளைஞர் காங்கிரஸ் கட்சி துணைத் தலைவராக ஒரு வருடம் செயலாற்றினார்.
  • 1993: பதான் தொகுதியில் இருந்து மத்தியப் பிரதேச சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த கேஜுராம் வர்மாவை 3400 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
  • 1990: துர்க் மாவட்ட இந்திய இளைஞர் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்டு அப்பதவியில் 1994 வரை நீடித்தார்.
  • 1985: இளைஞர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.
  • 1980: தனது அரசியல் குருவான மறைந்த சந்துலால் சந்திராகரிடமிருந்து அரசியல் கற்றுக் கொண்டு தனது பயணத்தைத் தொடங்கினார் பாகல்.

பூபேஷ் பாகல் சாதனைகள்

தகவல் இல்லை

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+