Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நிதிஷ் குமார்

நிதிஷ் குமார்
நிதீஷ் குமார் பீகார் மாநில முதல்வராக 5 முறை பதவி வகித்துள்ளார். அரசியலில் தவிர்க்க முடியாத தலைவர்.
By Rashmi | Thursday, May 30, 2019, 04:03:42 PM [IST]

நிதிஷ் குமார் சுயசரிதை

நிதீஷ் குமார் பீகார் மாநில முதல்வராக 5 முறை பதவி வகித்துள்ளார். அரசியலில் தவிர்க்க முடியாத தலைவர். மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார். பக் தொகுதியிலிருந்து 6 முறை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பீகாரின் தளர்ச்சி அடைந்த பொருளாதாரத்தை சரி செய்ய தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டவர். ஆரம்பத்தில் பீகாரில் அமைச்சராக பதவி வகித்த காலத்தில் 1 லட்சம் பள்ளி ஆசிரியர்களை பதவியில் நியமித்தார். டாக்டர்கள் ஆரம்ப சுகாதார மையங்களில் பணியாற்றுவதை உறுதி செய்தார். பெண் கல்வி அறிவு விகிதத்தை அதிகரித்தார். அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்தினார். சட்டவிரோத செயல்கள் தலைவிரித்தாடியதை கட்டுக்குள் கொண்டு வந்தார். கிரிமினல்களை வேட்டையாடினார். சராசரி பீகாரியின் வருமானத்தை இரட்டிப்பாக்கினார்.

மேலும் படிக்க

நிதிஷ் குமார் தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் நிதிஷ் குமார்
பிறந்த தேதி 01 Mar 1951 (வயது 75)
பிறந்த இடம் பக்தியார்புர், பாட்னா, பீகார்
கட்சி பெயர் Janata Dal (United)
கல்வி Graduate
தொழில் சமூக சேவகர், விவசாயி, பொறியாளர்
தந்தை பெயர் மறைந்த திரு கவிராஜ் ராம் லகான் சிங்
தாயார் பெயர் திருமதி. பரமேஸ்வரி தேவி
துணைவர் பெயர் திருமதி. மஞ்சு குமாரி சின்ஹா
குழந்தைகள் 1 மகன்(கள்)
மதம் இந்து
இணையதளம் NA

நிதிஷ் குமார் நிகர மதிப்பு

நிகர மதிப்பு
₹1.65 CRORE
சொத்துக்கள்
₹1.65 CRORE
கடன்கள்
N/A

நிதிஷ் குமார் சுவாரசிய தகவல்கள்

நிதீஷ் குமாரின் நிர்வாகத்தால் பெண்கள் பள்ளிகளில் தங்கி படிக்க மற்றும் பெண்களுக்கு சைக்கிள்களை வழங்குதல் போன்ற ஊக்கமளிக்கும் திட்டங்களை கொண்டு வந்ததன் மூலம் பெண்களிடையே எழுத்தறிவு விகிதம் அதிகரித்தது.

நிதிஷ் குமார் அரசியலில் கடந்து வந்த பாதை

  • 2014 : 2014 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் தேதி அவர் முதல்வர் பதவியிலிருந்து விலகினார்.
  • 2005 : பீகார் முதலமைச்சராக 2005 நவம்பர் 24 முதல் 2014 மே 17 வரை பணியாற்றினார். இடையில் சில அரசியல் குழப்பங்களைச் சந்தித்தாலும் மீண்டும் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 2004 : நாலந்தாவில் இருந்து ஆறாவது முறையாக பதினான்காவது மக்களவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் நிலக்கரி மற்றும் எஃகு, பொது நோக்கங்கள் குழு மற்றும் சலுகைகள் குழு ஆகியவற்றில் உறுப்பினராக இருந்தார். மக்களவையில் ஜனதா தள பாராளுமன்றக் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 2001 : மத்திய அமைச்சரவையில் வேளாண்மை மற்றும் ரயில்வே துறை அமைச்சராக பொறுப்பேற்றார்
  • 2000 : பீகார் முதலமைச்சராக பதவி ஏற்றார்.அதன்பிறகு மத்திய அமைச்சரவையில் விவசாய துறை அமைச்சராக பதவியேற்றார்.
  • 1999 : மீண்டும் பதிமூன்றாவது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜனதா தள் கட்சி வேட்பாளர் விஜய் கிருஷ்ணாவை 15000வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
  • 1998 : மத்திய ரயில்வே அமைச்சர்,போக்குவரத்து அமைச்சர்
  • 1998 : பக் தொகுதியில் இருந்து விஜய கிருஷ்ணாவைத் தோற்கடித்ததன் மூலம் பனிரெண்டாவது மக்களவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1996 : பாதுகாப்பு கமிட்டி உறுப்பினர்
  • 1996 : 11 வது மக்களவைத் தேர்தலில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். மூன்றாவது முறையாக அவர் ஜனதா தள் கட்சி வேட்பாளர் விஜய கிருஷ்ணாவை 60,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
  • 1993 : வேளாண்மை கமிட்டியின் தலைவர்.
  • 1991 : ரயில்வே மரபுக் குழு உறுப்பினர்.
  • 1991 : ஜனதா தள் பொது செயலாளர்
  • 1991 : பக் தொகுதியில் இருந்து இரண்டாம் முறையாக பத்தாவது மக்களவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி வேட்பாளரான சிதேஷ்வர் பிரசாத்தை தோற்கடித்தார்.
  • 1990 : மாநில, வேளாண் மற்றும் கூட்டுறவு துறை அமைச்சர்.
  • 1989 : பக் தொகுதியில் இருந்து ஒன்பதாவது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.அங்கு ராம்லகன் சிங் யாதவை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
  • 1989 : ஜனதா தள் பொது செயலாளர்.
  • 1987 : பீகார் சட்டமன்ற பொது பணிகளில் குழு உறுப்பினர்.
  • 1986 : பீகார் சட்ட மன்ற குழுவில் உறுப்பினர்.

நிதிஷ் குமார் சாதனைகள்

தகவல் இல்லை

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+