• search
முகப்பு
 » 
அரசியல்வாதிகள்
 » 
நர சந்திர பாபு நாயுடு

நர சந்திர பாபு நாயுடு

சுயசரிதை

தெலுங்கு தேசம் கட்சியின் தேசியத் தலைவரான நர சந்திர பாபு நாயுடு ஆந்திராவின் தற்போதைய முதலமைச்சராக பொறுப்பு வகிக்கிறார். சித்தூர் மாவட்டம் திருப்பதி அருகே உள்ள சந்திரகிரி நகரில் இளைஞர் காங்கிரஸ் மாணவர் தலைவராக அரசியலில் நுழைந்தார். அவசர நிலையைத் தொடர்ந்து 1978 ஆம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்தார். 1980 இல் அவர் என்.டி.ஆரின் மகளை மணந்தார். என்.டி.ஆர் ஒரு மிகப்பெரிய நடிகர் மற்றும் தெலுங்கு தேச கட்சியின் நிறுவனர் ஆவார். 1983 சட்டமன்றத் தேர்தலில் தெலுங்கு தேச கட்சி வேட்பாளர்களுக்கு தோல்வி ஏற்பட்ட பிறகு காங்கிரஸை விட்டு வெளியேறிய அவர் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார். 1995 ல் அப்போதைய முதலமைச்சர் மற்றும் அவரது மாமனாரான என்.டி.ராமராவுக்கு எதிராக புரட்சி செய்து ஆந்திராவின் முதலமைச்சராக பதவியேற்றார். 2004 வரை அவர் முதலமைச்சராக பணியாற்றினார். ஆனால் மாநிலத்தில் தனது அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. பாரதிய ஜனதா கட்சி கூட்டணியின் மூலம் 175 இடங்களில் 102 இடங்களை வென்றார். 2014ம் ஆண்டில் மீண்டும் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் ஆந்திராவின் நீண்ட கால முதலமைச்சராக உள்ளார். அவர் நீண்டகாலமாக எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார்.

தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் நர சந்திர பாபு நாயுடு
பிறந்த தேதி 20 Apr 1950 (வயது 69)
பிறந்த இடம் சித்தூர், ஆந்திர பிரதேசம்
கட்சி பெயர் Telugu Desam
கல்வி Post Graduate
தொழில் அரசியல்வாதி மற்றும் சமூக சேவகர்
தந்தை பெயர் என். கார்ஜுர நாயுடு
தாயார் பெயர் அமனம்மா
துணைவர் பெயர் நர புவனேஸ்வரி
துணைவர் தொழில் தொழில்
மகன்கள் 1

தொடர்பு

நிரந்தர முகவரி நம்பர் 1310, சாலை எண் 65, ஜூபிலி ஹில்ஸ், ஹைதராபாத் -500033
தற்காலிக முகவரி தகவல் இல்லை
தொடர்பு எண் 04023608121
மின்னஞ்சல் https://ncbn.in/ask_ncbn
இணையதளம் https://ncbn.in/
சமூக வலைதளங்கள்

சுவாரஸ்ய தகவல்கள்

தனது 28 வயதில் சந்திரபாபு நாயுடு மாநிலத்தின் இளைய சபை உறுப்பினராகவும் மற்றும் அமைச்சராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 199ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் 294 இடங்களில் 185 இடங்களையும், லோக்சபா தேர்தலில் 42இடங்களில் 29 இடங்களையும் கைப்பற்றியது. இதன் மூலம் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தின் இரண்டாவது பெரிய கூட்டணிக் கட்சியாக தெலுங்கு தேசம் உருவெடுத்தது. 2003 ஆம் ஆண்டில் அவர் குண்டுவெடிப்பில் சிக்கி படுகாயமடைந்தார். மாணவப் பருவத்தில் ஒன்பதாம் வகுப்பு வரை ஒவ்வொரு நாளும் 11 கி.மீ. நடந்து பள்ளிக்கு சென்றார். அவர் 1992 ஆம் ஆண்டில் ஹெரிடேஜ் குரூப்பை நிறுவினார். இது தென்னிந்தியாவின் மிகப்பெரிய தனியார் பால் பண்ணை நிறுவனமாக மாறியுள்ளது.

அரசியல் காலவரிசை

  • 2014
    தெலுங்கானா மாநிலம் ஆந்திரப்பிரதேசத்திலிருந்து பிரிக்கப்பட்ட பிறகு நாயுடு மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார் . 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8 ஆம் தேதி முதல் புதிதாக உருவாக்கப்பட்ட ஆந்திர மாநில முதல் முதலமைச்சராக அவர் பதவி ஏற்றார்.
  • 2009
    மீண்டும் குப்பம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரஸ் கட்சியின் எம்.சுப்ரமணியம் ரெட்டியை தோற்கடித்தார்.
  • 2004
    சந்திரபாபு மீண்டும் குப்பம் தொகுதியில் இருந்து வென்றார். இருப்பினும் 2004ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி தோற்கடிக்கப்பட்டது. நாயுடு முதல்வர் பதவியிலிருந்து விலகினார். ஆந்திர சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவராக செயல்பட்டார். நீண்ட காலமாக சேவை செய்த எதிர்க்கட்சி தலைவராக உருவெடுத்தார்.
  • 1999
    குப்பம் தொகுதியில் இருந்து சந்திரபாபு நாயுடு மீண்டும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றார். அவர் 65687 வாக்குகள் வித்தியாசத்தில் எம்.சுப்பிரமணிய ரெட்டியை தோற்கடித்து மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்றார்.
  • 1995
    சந்திரபாபு நாயுடு ஆந்திர மாநிலத்தின் பதின்மூன்றாவது முதலமைச்சராக 1995ம் ஆண்டு செப்டம்பர் 1 இல் பதவியேற்றார்.
  • 1994
    குப்பம் சட்டமன்றத் தேர்தலில் ஆர்.கோபிநாத்திற்கு எதிராக 56588 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
  • 1985
    சந்திரபாபு நாயுடு தெலுங்கு தேசம் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்தார்.ஆனால் சட்டசபை தேர்தலில் போட்டியிடவில்லை.
  • 1984
    தெலுங்கு தேசம் கட்சியின் பொதுச் செயலராக நியமிக்கப்பட்ட பின்னர் அவர் கட்சியில் முக்கியப் பங்கு வகித்தார். முதல்வர் பதவியிலிருந்து என்டி ராமாராவை அகற்ற காங்கிரஸ் முயற்சித்தபோது அதை முறியடித்தார். அதன் பிறகு என்டிஆரின் முழு நம்பிக்கையையும் பெற்றார். இருப்பினும் 1984 முதல் 1989 வரை எந்தப் பொறுப்பையும் அவர் வகிக்கவில்லை.
  • 1983
    சந்திரகிரியில் தெலுங்கு தேச கட்சி வேட்பாளர் வெங்கடராமனா நாயுடு மெடசானியிடம் 19 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நாயுடு தோல்வியடைந்தார். பின்பு நாயுடு தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார்.
  • 1980
    என்.டி.ஆர். என்று அனைவராலும் பிரபலமாக அழைக்கப்பட்ட என்.டி.ராமா ராவுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்ட நாயுடு, புதிய திசையில் பயணிக்கத் தொடங்கினார். என் டி ஆர் 1982 ஆம் ஆண்டில் தெலுங்கு தேசம் கட்சியை (டி.டி.பி.) உருவாக்கினார். ஆனால் நாயுடு காங்கிரஸிலேயே தொடர்ந்து வந்தார்.
  • 1978
    தனது 28ம் வயதில் காங்கிரஸ் கட்சியில் சந்திரகிரி சட்டசபை தொகுதியில் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் ஜே என் பி யின் கொங்கரா பட்டாபி ராமா சௌத்ரியை 2500 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். மேலும் அவர் தொழில்நுட்ப கல்வி மற்றும் ஒளிப்பதிவு அமைச்சராக நியமிக்கப்பட்டார். அமைச்சரவையிலேயே இளம் அமைச்சராக நாயுடு இருந்தார்.
  • 1975
    இளைஞர் காங்கிரஸ் தலைவரான சஞ்சய் காந்தி மற்றும் நாரலா சய்கிரின் நெருங்கிய ஆதரவாளராக ஆனார்.
  • 1973
    என்ஜி ரங்காவின் பொருளாதார சிந்தனைகள் குறித்த பிஎச்டி ஆய்வில் ஈடுபட்டிருந்த சந்திரபாபு நாயுடு, அரசியல் ஆர்வத்தால் அதை கைவிட்டு விட்டு, சித்தூர் மாவட்டம் திருப்பதி அருகே உள்ள சந்திரகிரியில் இளைஞர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
  • 1989
    குப்பம் சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு பி.ஆர்.துரைசாமிக்கு எதிராக 6918 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். 1989-1994 ஆண்டுகளில் தெலுங்கு தேச கட்சியின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டார்.
நிகர மதிப்பு161.14 CRORE
சொத்துக்கள்177.49 CRORE
கடன்கள்16.35 CRORE

Disclaimer: The information relating to the candidate is an archive based on the self-declared affidavit filed at the time of elections. The current status may be different. For the latest on the candidate kindly refer to the affidavit filed by the candidate with the Election Commission of India in the recent election.

சமூக வலைதளம்

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more