முகப்பு
 » 
எச்.டி.குமாரசாமி

எச்.டி.குமாரசாமி

எச்.டி.குமாரசாமி

எச். டி.

எச்.டி.குமாரசாமி சுயசரிதை

எச்.டி. குமாரசாமி கர்நாடகத்தைச் சேர்ந்த அரசியல்வாதி, தற்போதைய கர்நாடக முதல்வரும் ஆவார். கர்நாடக மாநில ஜனதாதளம் (மதச்சார்பற்றது) கட்சியின் தலைவராக உள்ளார். இவர் முன்னாள் பிரதமர் எச்.டி. தேவெ கெளடாவின் இளைய மகன் ஆவார். இவரது முழுப் பெயர் ஹரதனஹள்ளி தேவே கெளடா குமாரசாமி. .இவரை அனைவரும் குமார் அண்ணா என்று செல்லமாக அழைப்பர். ஜனதாதளம் (மதச்சார்பற்றது) கட்சியின் சிறந்த தலைவர்களில் இவரும் ஒருவர். அரசியல் தாண்டி திரையுலகிலும் இவர் முத்திரை பதித்தவர். இரு தார பிரச்சினையில் சிக்கி சர்ச்சைக்குள்ளானவர். அதேபோல சுரங்க ஊழலிலும் இவரது பெயர் அடிபட்டது. விஸ்வபாரதி வழக்கிலும் சிக்கினார். இவர் 2006ம் ஆண்டு முதல்வராக இருந்தபோது கர்நாடகத்தின் ஜிடிபி உச்சகட்டத்தை எட்டி சாதனை படைத்தது. மக்களின் முதல்வராக இவர் கொண்டாடப்பட்டார். 2018ம் ஆண்டு மே 23ம் தேதி குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதாதள ஆட்சி பதவியேற்றது. ஓராண்டைத் தாண்டிய நிலையில் ஜூலை 23ம் தேதி கர்நாடக சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வி அடைந்ததால் முதல்வர் பதவியிலிருந்து விலகினார் குமாரசாமி, அவரது ஆட்சியும் கவிழ்ந்தது.

மேலும் படிக்க
By Administrator Updated: Thursday, July 25, 2019, 12:55:27 PM [IST]

எச்.டி.குமாரசாமி தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் எச்.டி.குமாரசாமி
பிறந்த தேதி 16 Dec 1959 (வயது 64)
பிறந்த இடம் ஹரதனாஹள்ளி, ஹாசன் மாவட்டம்
கட்சி பெயர் Janata Dal (Secular)
கல்வி Graduate
தொழில் பொது ஊழியர் & விவசாயி
தந்தை பெயர் எச். டி. தேவே கவுடா
தாயார் பெயர் சென்னம்மா
மதம் இந்து
இணையதளம் http://www.cmkarnataka.gov.in/
சமூக வலைதளங்கள் சமூக வலைதளங்கள்:

எச்.டி.குமாரசாமி நிகர மதிப்பு

நிகர மதிப்பு: ₹112.76 CRORE
சொத்துக்கள்:₹189.28 CRORE
கடன்கள்: ₹76.52 CRORE

எச்.டி.குமாரசாமி சுவாரசிய தகவல்கள்

திரைப்படத் தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் ஈடுபட்டு வந்தவர் குமாரசாமி. பல கன்னடப் படங்களை அவர் தயாரித்துள்ளார். அதில் சந்திர சகோரி பெரும் ஹிட்டாக அமைந்தது. 365 நாட்கள் அது ஓடி சாதனை படைத்தது.

2007 செப்டம்பரில் கஸ்தூரி என்ற டிவி சானலை ஆரம்பித்தார் குமாரசாமி. தற்போது இந்த சானலை அவரது மனைவி அனிதா பார்த்துக் கொள்கிறார். கன்னட நடிகர் ராஜ்குமாரின் மிகப் பெரிய ரசிகர் குமாரசாமி. ராஜ்குமாரைப் போலவே டிரஸ் அணிவதில் ஆர்வம் காட்டுவார். குறிப்பாக ராஜ்குமார் நடித்த படங்களில் வருவதை படங்களில் வருவது போல உடை அணிய ஆர்வம் காட்டுவார். ஆரம்பத்திலிருந்தே அவருக்கு அரசியலை விட சினிமாவில்தான் அதிக ஆர்வம் இருந்ததாக பலமுறை கூறியுள்ளார்.

படிப்பது, பாடல் கேட்பது, படம் பார்ப்பது இவரது பொழுது போக்குகள் ஆகும்.

லம்பார்கினி, போர்ஷே, ஹம்மர், ரேஞ்ச் ரோவர் என விதம் விதமான கார்களை இவர் வைத்துள்ளார்.

எச்.டி. குமாரசாமி தனது ஜனதா தர்ஷன, கிராம வாஸ்தவ்யா திட்டங்கள் மூலம் கர்நாடகத்தின் கிராமப்புற மக்களிடம் நிறைய செல்வாக்கு கொண்டவர் ஆவார்.

எச்.டி.குமாரசாமி அரசியலில் கடந்து வந்த பாதை

2019
  • ஜூலை 23ம் தேதி கர்நாடக சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வி அடைந்ததால் முதல்வர் பதவியிலிருந்து விலகினார் குமாரசாமி, அவரது ஆட்சியும் கவிழ்ந்தது.
2018
  • 2018 கர்நாடக சட்டசபைத் தேர்தலில் மீண்டும் தொங்கு சட்டசபை அமைந்தது. இந்த முறை காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் குமாரசாமி மீண்டும் முதல்வரானார். மே 23ம் தேதி அவர் முதல்வராக பதவியேற்றார்.
2014
  • 2014 நவம்பர் மாதம் கர்நாடகா மதச்சார்பற்ற ஜனதாதள மாநிலத் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்
2013
  • மே 31ம் தேதி கர்நாடக சட்டசபை எதிர்க் கட்சித் தலைவரானார் குமாரசாமி.
2009
  • மீண்டும் பதினைந்தாவது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் (இரண்டாம் முறை)
2006
  • 2006ம் ஆண்டு பாஜகவும், மதச்சார்பற்ற ஜனதாதளமும் இணைந்து ஆட்சியமைக்க முடிவு செய்தன. குமாரசாமியை ஆட்சியமைக்க அழைத்தார் ஆளுநர் டி.என். சதுர்வேதி. மாநில முதல்வராக 2006ம் ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி பதவியேற்றார் குமாரசாமி. 2007 அக்டோபர் 8ம் தேதி வரை அவர் பதவியில் நீடித்தார். ராஜினாமா செய்வதற்கு முன்பு முன்பே செய்து கொண்ட ஒப்பந்தப்படி அடுத்த 20 மாதங்கள் பாஜக ஆட்சியமைக்க அவர் ஒப்புக் கொள்ளவில்லை.
2004
  • 2004 கர்நாடக சட்டசபைத் தேர்தலில் பிளவுபட்ட முடிவைக் கொடுத்தனர் மக்கள். தொங்கு சட்டசபை அமைந்தது. இதையடுத்து காங்கிரஸும், மதச்சார்பற்ற ஜனதாதளமும் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க முடிவு செய்தன. இத்தேர்தலில் ராமநகரா தொகுதியிலிருந்து வெற்றி பெற்றார் குமாரசாமி.
1999
  • 1999ம் ஆண்டு சாத்தனூர் சட்டசபைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார் குமாரசாமி. இருப்பினும் 2004ல் நிலைமை மாறியது. ராமநகரா தொகுதியில் போட்டியிட்டு சட்டசபைக்குச் சென்றார் குமாரசாமி.
1998
  • 1998ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் எம்.வி.சந்திரேசகர மூர்த்தியிடம் தோல்வியைத் தழுவினார் குமாரசாமி. டெபாசிட்டையும் அவர் பறி கொடுத்தார்.
1996
  • 1996ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தல் மூலம் அரசியலில் நுழைந்தார் குமாரசாமி. அப்போது கனகபுரா லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு 11வது லோக்சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முந்தைய வரலாறு

1986
  • 1986ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி குமாரண்ணா என்று அழைக்கப்படும் குமாரசாமி, அனிதாவைத் திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு நிகில் கெளடா என்ற மகன் உள்ளார்.
Early 80s
  • விஜயா கல்லூரியில் பியூசி படிப்பை முடித்தார். பெங்களூர் தேசியக் கல்லூரியில் பிஎஸ்சி பட்டப் படிப்பை படித்தார்.

எச்.டி.குமாரசாமி சாதனைகள்

2004, 2008, 2013 மற்றும் 2018 ஆண்டுகளில் ராமநகர சட்டமன்றத் தொகுதியிலிருந்து கர்நாடகா சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் குமாரசாமி.

கர்நாடக மாநில மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

குமாரசாமி பெண் குழந்தையைப் பாதுகாப்பதற்காகவும், சமுதாயத்தின் மனோபாவத்தை மாற்றுவதற்காகவும் "பாக்யலட்சுமி" என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்த திட்டத்தின் கீழ் 2006 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதிக்கு பின் பிறந்த ஒவ்வொரு பெண் குழந்தையின் பெயரிலும் 10,000 ரூபாய் வங்கியில் செலுத்தப்படுகிறது. குமாரசாமி பல்வேறு பயனுள்ள திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.

கிராமங்களுக்குச் சென்று தங்குவது, விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்வது, லாட்டரி தடை, மாணவிகளுக்கு மிதிவண்டி, மற்றும் ஜனதா தர்ஷனா போன்ற திட்டங்களை அவர் கொண்டு வந்து மக்களிடையே புகழ் பெற்றார்.

Disclaimer: The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X