Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கல்வகுண்டல சந்திரசேகர் ராவ்

கல்வகுண்டல சந்திரசேகர் ராவ்
கல்வகுண்டல சந்திரசேகர் ராவ் தெலுங்கானாவின் முதல் முதலமைச்சர் ஆவார். தெலுங்கானா மாநிலம் ஆந்திராவில் இருந்து பிரிக்கப்பட்ட பிறகு அவர் பதவிக்கு வந்தார்.
By Rashmi | Tuesday, February 19, 2019, 01:40:30 PM [IST]

கல்வகுண்டல சந்திரசேகர் ராவ் சுயசரிதை

கல்வகுண்டல சந்திரசேகர் ராவ் தெலுங்கானாவின் முதல் முதலமைச்சர் ஆவார். தெலுங்கானா மாநிலம் ஆந்திராவில் இருந்து பிரிக்கப்பட்ட பிறகு அவர் பதவிக்கு வந்தார். அவர் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவர் ஆவார். சித்திபெட் மாட்டம் கஜ்வெல் தொகுதியிலிருந்து சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னதாக, அவர் ஆந்திராவின் சித்திபெட் தொகுதியிலிருந்து சட்டசபை உறுப்பினராகவும் மஹபூப்நகர், கரீம்நகர் மற்றும் மேடக் ஆகிய தொகுதியில் இருந்து லோக்சபாவுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஹைதராபாத்தின் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் முதுகலை இலக்கியத்தை முடித்து பட்டம் பெற்ற பிறகு அவர் இளைஞர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து அரசியலில் நுழைந்தார். அந்த காலகட்டத்தில் காங்கிரஸ் மோசமான நிலையில் இருந்தது. ஆனால் அவர் சஞ்சய் காந்தியுடன் நின்று தனது பதவியை தக்கவைத்துக் கொண்டார். 1983 ஆம் ஆண்டில் அவர் தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்தார். பின்னர் 2001 ல் அவர் தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து ராஜினாமா செய்தார். தனி தெலுங்கானா மட்டுமே ஒரே தீர்வு என்று அவர் நம்பினார். 2001ம் ஆண்டில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி (டி.ஆர்.எஸ்) கட்சி அவரால் உருவாக்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அவர் தெலுங்கானா தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி, மத்திய அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்தார். புது தில்லி ஜந்தர் மந்தரில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். இதன் விளைவாக தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்ததைத் தொடர்ந்து டிசம்பர் 9, 2009ம் ஆண்டு தனது போராட்டத்தை அவர் விலக்கிக் கொண்டார்.

மேலும் படிக்க

கல்வகுண்டல சந்திரசேகர் ராவ் தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் கல்வகுண்டல சந்திரசேகர் ராவ்
பிறந்த தேதி 17 Feb 1954 (வயது 72)
பிறந்த இடம் சித்திபெட், தெலங்கானா
கட்சி பெயர் Bharat Rashtra Samithi
கல்வி Graduate
தொழில் அரசியல்வாதி
தந்தை பெயர் ராகவர் ராவ்
தாயார் பெயர் வேங்கடம்மா
துணைவர் பெயர் ஷோபா
குழந்தைகள் 1 மகன்(கள்) 1 மகள்(கள்)
மதம் இந்து

கல்வகுண்டல சந்திரசேகர் ராவ் நிகர மதிப்பு

நிகர மதிப்பு
₹7.28 CRORE
சொத்துக்கள்
₹15.16 CRORE
கடன்கள்
₹7.88 CRORE

கல்வகுண்டல சந்திரசேகர் ராவ் சுவாரசிய தகவல்கள்

கே.சி.ஆர் சமூக பணிகளில் ஈடுபட்டதுடன் ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டார். அவரால் மேற்கொள்ளப்பட்ட சில பணிகள் பின்வருமாறு: (i) 2004 ஆம் ஆண்டில் கரீம்நகரில் மேற்கொள்ளப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள மகத்தான மரம் நடும் திட்டம்; (ii) முஸ்லிம் சிறுபான்மையினருக்கு வீடுகள் கட்டிக் கொடுத்தல்; (iii) சித்திபெட் தொகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 145 குடிமக்களுக்கு குடிநீர் வழங்கல். தனது ஓய்வு நேரத்தில் அவர் பேட்மின்டன் விளையாடுவதை விரும்புவார். ஜோதிடம், எண் கணிதம் மற்றும் வாஸ்து ஆகியவற்றில் ராவ் ஒரு உறுதியான நம்பிக்கை கொண்டு இருக்கிறார். முக்கியமான திறப்பு விழாக்களுக்கான நேரத்தை நிர்ணயிப்பதற்கு முன்பு அவர் எப்போதும் நிபுணர்களை ஆலோசிக்கிறார். எண் 'ஆறு' அவரது அதிர்ஷ்ட எண்ணாக நம்பப்படுகிறது.

கல்வகுண்டல சந்திரசேகர் ராவ் அரசியலில் கடந்து வந்த பாதை

  • 2018: 2008ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதி அன்று அவர் ஆட்சியைக் கலைத்தார், பதவியையும் ராஜினாமா செய்தார். பின்னர் தெலுங்கானால் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
  • 2014: ஆந்திரப் பிரதேசத்திலிருந்து தெலுங்கானா தனி மாநிலமாக பிரிந்த பிறகு கஜ்வெல் மற்றும் மேடக் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 16வது லோக்சபா தேர்தலிலும் வெற்றி பெற்றார். பின்னர் அதை ராஜினாமா செய்து விட்டு தெலுங்கானா முதல்வரானார்.
  • 2009: மஹபூப் நகர் தொகுதியில் தேவரகொண்டா விட்டல் ராவை 20,184 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து லோக்சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். லோக்சபா டிஆர்எஸ் தலைவராக செயல்பட்டார். பின்னர் மின்சாரத்துறை நிலைக்குழு உறுப்பினராகவும் செயல்பட்டார்.
  • 2008: 2008ம் ஆண்டு மார்ச் 3 ஆம் தேதி மக்களவையில் இருந்து ராஜினாமா செய்தார். பின்னர் இடைத் தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் பாராளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்றார்.
  • 2006: 2006ம் ஆண்டு செப்டம்பர் 23ம் அவர் அவர் மக்களவையிலிருந்து ராஜினாமா செய்தார். அதே தொகுதியில் 2006 ஆம் ஆண்டு டிசம்பர் 7 ஆம் தேதி நடைபெற்ற இடைத் தேர்தலில் வெற்றி பெற்று 14வது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 2004: கரீம்நகரிலிருந்து பதினான்காவது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த சென்னமனேனி வித்யாசாகர ராவை தோற்கடித்தார். பின்னர் மத்திய அமைச்சரவையில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.
  • 2003: புதிய மாநிலங்களுக்கான தேசிய முன்னணியின் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றினார்,
  • 2001: தெலுங்கு தேசம் கட்சியின் உறுப்பினர் பதவி, துணை சபாநாயகர் பதவி, சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார். 2001ம் ஆண்டு தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை தொடங்கினார். புதிய கட்சியின் சார்பில் தேர்தலை சந்தித்து வெற்றி பெற்றார்.
  • 1999: சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1999ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை ஆந்திர சட்டசபை துணை சபாநாயகராக செயல்பட்டார்.
  • 1997: 1997 முதல் 2000 வரை ஆந்திரா மாநில அரசில் போக்குவரத்துத் துறை அமைச்சராக செயல்பட்டார்.
  • 1995: 1995 - 96 ம் ஆண்டில் பொதுத்துறை நிறுவனங்களுக்கான குழுவில் உறுப்பினராக இருந்துள்ளார்.
  • 1994: சித்திபெட் தொகுதியில் இருந்து மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1993: 1994ம் ஆண்டு வரை தெலுங்கு தேச கட்சியின் மாநில செயலாளராக செயல்பட்டார்.
  • 1992: பொதுத்துறை நிறுவனங்களுக்கான கமிட்டி தலைவராக திகழ்ந்தார்.
  • 1989: சித்திபெட் தொகுதியில் இருந்து அனந்துல மதன் மோகனை தோற்கடித்ததன் மூலம் மீண்டும் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1989 ஆம் ஆண்டு முதல் 1993 ஆம் ஆண்டு வரை தெலுங்கு தேசம் கட்சியின் மாவட்ட தலைவராக இருந்தார்.
  • 1988: 1988 ஆம் ஆண்டில் ஆந்திரப் பிரதேச அரசின் வறட்சித் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
  • 1987: 1987-1988 ம் ஆண்டு ஆந்திரப் பிரதேச அரசில் அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1985: சித்திபெட் தொகுதியில் இருந்து ஆந்திர சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த டி. மகேந்திர ரெட்டியை தோற்கடித்தார்.
  • 1983: தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்தார்.
  • 1982: சித்திபெட்டில் உள்ள ராகவபூர் முதன்மை வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் (பி.ஏ.சி.எஸ்)தலைவராக பணியாற்றினார். அதே சமயத்தில் இளைஞர் காங்கிரஸ் கட்சியில் துணை தலைவர் ஆனார்.
  • 1980: சஞ்சய் காந்தியின் வழிகாட்டுதலின் கீழ் ஆந்திரா இளைஞர் காங்கிரஸில் சேர்ந்தார்.

கல்வகுண்டல சந்திரசேகர் ராவ் சாதனைகள்

சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சியின் 2014ம் ஆண்டுக்கான சிறந்த இந்தியர் விருதைப் பெற்றார்.

2017ம் ஆண்டு விவசாய தலைமைத்துவ விருது பெற்றார்.

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+