Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமித்ஷா

அமித்ஷா
2014 நாடாளுமன்ற தேர்தலில் உத்திரபிரதேசம், உத்திரகாண்ட், குஜராத் போன்ற மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி இமாலய வெற்றி பெறுவதற்காக சிறப்பாக செயல்பட்டதாக வெகுவாக பாராட்டப்பட்டவர் பா. ஜ.
By Rashmi | Thursday, May 30, 2019, 03:56:19 PM [IST]

அமித்ஷா சுயசரிதை

2014 நாடாளுமன்ற தேர்தலில் உத்திரபிரதேசம், உத்திரகாண்ட், குஜராத் போன்ற மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி இமாலய வெற்றி பெறுவதற்காக சிறப்பாக செயல்பட்டதாக வெகுவாக பாராட்டப்பட்டவர் பா.ஜ.க தலைவர் அமித் ஷா. மோடியின் மிகவும் நம்பகமான நண்பராகவும், 4 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ள இவர், குஜராத்தின் முதலமைச்சராக மோடி பதவியேற்ற காலத்தில் அம்மாநிலத்தில் பல்வேறு துறைகளின் அமைச்சராகவும் இருந்தார். வளமான வர்த்தக பேரரசை சொந்தமான வைத்துள்ள அமித்ஷா, அகமதாபாத்தில் உள்ள கல்லூரியில் படிக்கும் போது ஆர்.எஸ்.எஸ். தன்னார்வலர் ஆனார். ஆர்.எஸ்.எஸ்ஸில் இருந்ததால் 1982 ல் மோடியை சந்தித்த அமித் ஷா, தனது அரசியல் வாழ்க்கையை ஆர்.எஸ்.எஸ் மாணவர் அமைப்பு தலைவராக துவக்கி 1986 ல் பா.ஜ.க வில் சேர்ந்தார். அக்கட்சியின் உயர்பதவியை அடையும் வகையில் சிறப்பாக பணியாற்றிய அமித்ஷா, அரசியல் அரங்கில் பிரதமருக்கு அடுத்த இடத்தை பிடித்துள்ளார்.

மேலும் படிக்க

அமித்ஷா தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் அமித்ஷா
பிறந்த தேதி 22 Oct 1964 (வயது 61)
பிறந்த இடம் மும்பை( மகாராஷ்டிரா)
கட்சி பெயர் Bharatiya Janta Party
கல்வி NULL
தொழில் விவசாயம், அரசியல், சமூக சேவகர்
தந்தை பெயர் அமித் அனில் சந்திர ஷா
தாயார் பெயர் திருமதி. குஸூம்பென் ஷா
துணைவர் பெயர் சோனல்பென் ஷா
துணைவர் தொழில் சமூகசேவகர்
குழந்தைகள் 1 மகன்(கள்)
மதம் இந்து
இணையதளம் http://amitshah.co.in

அமித்ஷா நிகர மதிப்பு

நிகர மதிப்பு
₹65.25 CRORE
சொத்துக்கள்
₹65.67 CRORE
கடன்கள்
₹42.1 LAKHS

அமித்ஷா சுவாரசிய தகவல்கள்

விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர், 2006ல் குஜராத் செஸ் சங்கத்தின் தலைவராகவும், 2009 ஆம் ஆண்டு கிரிக்கெட் சங்கத்தின் மத்திய குழு தலைவராகவும், 2014 ஆம் ஆண்டில் குஜராத் மாநில கிரிக்கெட் சங்கத்தின் தலைவராவும் பணியாற்றியுள்ளார். மேலும் 2009 ல் குஜராத் மாநில கிரிக்கெட் சங்கத்தின் துணைத் தலைவராகவும் பணியாற்றினார். இவர் குஜராத் மாநில செஸ் சங்கத்தின் தலைவராக இருந்தபோது, அகமதாபாத் அரசாங்க பள்ளிகளில் ஒரு சோதனை திட்டத்தின் மூலம் செஸ்-ஐ அறிமுகப்படுத்தினார். அவரது மாணவ பருவத்தில் பல்வேறு மேடை நிகழ்ச்சிகளில் பக்கேற்றுள்ளார்.

அமித்ஷா அரசியலில் கடந்து வந்த பாதை

  • 2019 : 17 வது மக்களவைத் தேர்தலில் காந்திநகர் தொகுதியில் எல்.கே. அத்வானிக்கு பதிலாக போட்டியிடுகிறார்.
  • 2017 : இராஜ்யசபா உறுப்பினரானார்
  • 2014 : அமித் ஷா பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவராக ஆனார்.
  • 2013 : பி.ஜே.பி.யின் தேசிய பொதுச் செயலராகவும், குஜராத் மாநில அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.
  • 2012 : 2012 சட்டமன்றத் தேர்தல்களில் நரன்பூரா தொகுதியில் போட்டியிட்டு காங்கிரஸ் கட்சியின் டாக்டர் ஜிதுபாய் பி படேலை தோற்கடித்தார். இந்த முறை அவர் 60,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
  • 2007 : மீண்டும் சர்கேஜ் தொகுதியில் அமித் ஷாவின் 2,32,832 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த முறை அவர் காங்கிரஸ் கட்சியின் ஷசிகந்த் வி. படேல் (பூராபாய்)-ஐ தோற்கடித்தார். மீண்டும் மாநில அமைச்சரவையில் சேர்க்கப்பட்ட அவருக்கு உள்துறை, போக்குவரத்து, பாராளுமன்ற விவகாரம், சட்டம் மற்றும் மசோதா போன்ற முக்கிய அமைச்சரவை பொறுப்புகள் வழங்கப்பட்டது.
  • 2002 : அமித் ஷா மீண்டும் சர்கேஜ் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வென்றார். அவர் 1,58,036 வாக்குகள் வித்தியாசத்தில் ஐ.என்.சி. வேட்பாளர் ஹிமான்சு விட்டல்பாய் படேலை தோற்கடித்தார். மேலும் அவர் வீட்டுவசதி, போக்குவரத்து போன்ற பிரதான துறைகளுக்கு அமைச்சரானார்.
  • 2001 : பாஜகவின் ஷாகரிதா ப்ரகோஸ்தா தேசிய ஒருங்கிணைப்பாளரான அமித்ஷா, கவ்ரவ் யாத்ராவின் இணை ஒருங்கிணைப்பாளரானார்.
  • 2000 : அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியின் தலைவராக தேர்வானார் அமித்ஷா.
  • 1999 : குஜராத் பாஜக மாநில துணைத்தலைவரானார்.
  • 1998 : குஜராத் சட்டமன்றத்திற்கு அதே தொகுதியில் இருந்து எம்.எல்.ஏவாக அமித் ஷா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பிரமுக்பாய் கனுபாய் படேலை அவர் தோற்கடித்தார். அதே ஆண்டு பி.ஜே.பி., கட்சியின் மாநில செயலாளராக நியமிக்கப்பட்டார்.
  • 1997 : சர்க்காஜ் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் கிட்டத்தட்ட 25,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனார்.
  • 1997 : பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா அமைப்பின் பொருளாளராக நியமிக்கப்பட்டார்.
  • 1995 : குஜராத் மாநில நிதி நிறுவனத்தின் தலைவரானார்.
  • 1989 : அகமதாபாத் நகர பா.ஜ.க செயலாளராக நியமிக்கப்பட்டார்.
  • 1987 : பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா அமைப்பின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
  • 1982 : குஜராத் அகில பாரதிய வித்யார்தி பரிசித் அமைப்பின் இணை செயலாளர் ஆனார்.
  • 1980 : ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் சேர்ந்த அமித் ஷா, ஆர்.எஸ்.எஸ் மாணவர்கள் அமைப்பு மற்றும் அகில பாரதிய வித்யார்தி பரிசித் அமைப்பில் நான்கு ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்தார்.

அமித்ஷா சாதனைகள்

முன்னதாக பயிற்சி முகாம்களில் சுமார் 3,500 தொழிலாளர்கள் மட்டுமே சராசரியாக பங்குபெற்றனர். அமித் ஷாவின் வழிகாட்டலுக்குப் பின்னர், 2015 ல் 7,25,000 தொழிலாளர்கள் முகாம்களில் சேர்ந்துள்ளனர். அமித் ஷாவின் தலைமையின் கீழ், பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 3 கோடியில் இருந்து 11 கோடிக்கும் அதிகமாகியுள்ளது.

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+