Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

யோகி ஆதித்யநாத்

யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத் உத்திரபிரதேசத்தின் கோரக்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பிரபல வலதுசாரி இந்துத்துவா அரசியல்வாதி ஆவார். தற்போது இவர் உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சராக உள்ளார்.
By Rashmi | Thursday, May 30, 2019, 03:56:19 PM [IST]

யோகி ஆதித்யநாத் சுயசரிதை

யோகி ஆதித்யநாத் உத்திரபிரதேசத்தின் கோரக்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பிரபல வலதுசாரி இந்துத்துவா அரசியல்வாதி ஆவார். தற்போது இவர் உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சராக உள்ளார். தற்போது உத்தரகண்டில் உள்ள பவுரி கர்வால் மாவட்டத்தில் அஜய் மோகன் பிஷ்ட் என்ற பெயரில் பிறந்த இவர், அறிவியல் துறையில் பட்டம் பெற்றவர். அவரது மாணவ பருவத்தில் பல சமூக நடவடிக்கைகள் மற்றும் இயக்கங்களில் தீவிரமாக பங்கேற்றார். 22 வயதில் அவர் குடும்ப வாழ்க்கையை கைவிட்டு துறவி ஆனார். ஒரு இடத்தில் கடவுளை வணங்குவதற்குப் பதிலாக, அவர் அப்பகுதி முழுவதும் பயணம்செய்து விழிப்புணர்வை பரப்பினார். அவர் கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் ஜஞ்சர்ஜன் அபியானைத் தொடங்கி, தீண்டாமைக்கு எதிராக தனது கோபத்தை வெளிப்படுத்த அனைத்து சாதி, மதங்களை சேர்ந்த மக்களோடு சேர்ந்து உணவு உண்டார். யோகி ஆதித்யநாத் முதல்முறையாக 1998ல் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினர் ஆனார். முதலமைச்சராக பதவியேற்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.

மேலும் படிக்க

யோகி ஆதித்யநாத் தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் யோகி ஆதித்யநாத்
பிறந்த இடம் பஞ்சூர்,பவுரி கார்வல்
கட்சி பெயர் Bharatiya Janta Party
கல்வி Graduate
தொழில் சாமியார் மற்றுய் அரசியல்வாதி
தந்தை பெயர் அனந்த் சிங் பிஸ்ட்
தாயார் பெயர் சாவித்திரி தேவி
துணைவர் பெயர் திருமணமாகவில்லை
மதம் இந்து

யோகி ஆதித்யநாத் நிகர மதிப்பு

நிகர மதிப்பு
N/A
சொத்துக்கள்
N/A
கடன்கள்
N/A

யோகி ஆதித்யநாத் சுவாரசிய தகவல்கள்

யோகி ஆதித்யநாத் 'இந்து வாராந்திர' பத்திரிகை மற்றும் மாதாந்திர பத்திரிகையான 'யோகவாணி'-ன் முதன்மை ஆசிரியர் ஆவார்.
வகுப்புவாத வன்முறைகளில் ஈடுபட்டுள்ள இந்து யுவ வாஹிணி என்ற இளைஞர் அமைப்பின் நிறுவனர் இவர் ஆவார்.

யோகி ஆதித்யநாத் அரசியலில் கடந்து வந்த பாதை

  • 2017 : நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த யோகி ஆதித்யநாத், உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்
  • 2015 : 29 ஜனவரி 2015 முதல் 21 செப்டம்பர் 2017 வரை பொது நோக்கங்களுக்காக குழு உறுப்பினராக பணியாற்றினார். .
  • 2014 : ஐந்தாவது முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக 16வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இம்முறை அவர் சமாஜ்வாடி கட்சியின் ராஜ்மாடி நிஷாத்-ஐ தோற்கடித்தார்.
  • 2009 : நான்காவது முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக 15வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2009 ஆகஸ்ட் 2009 அன்று போக்குவரத்து, சுற்றுலா மற்றும் கலாச்சார நிலைக்குழு உறுப்பினர் மற்றும் உள்துறை அமைச்சக ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் இருந்தார் .
  • 2004 : மூன்றாவது முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக 14வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.மேலும் அவர் அரசாங்க உத்தரவாதங்கள் குழு உறுப்பினர், வெளி விவகார குழு உறுப்பினர், உள்துறை அமைச்சக ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் இருந்தார் .
  • 1999 : இரண்டாவது முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக 13 வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1999 முதல் 2000 வரை, அவர் உணவு, சிவில் சப்ளைஸ் மற்றும் பொது விநியோக பாராளுமன்ற நிலைக்குழுவில் உறுப்பினராக பணியாற்றினார்.மேலும் அவர் உள்துறை அமைச்சக ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் இருந்தார் .
  • 1998 : 1998 முதல் 1999 வரை அவர், உணவு, சிவில் பொருட்கள் மற்றும் பொது விநியோக மற்றும் அதன் சர்க்கரை மற்றும் சமையல் எண்ணெய்களின் விநியோக துணை குழு-பி ஆகியவற்றிற்கான பாராளுமன்ற நிலைக்குழுவில் உறுப்பினராக பணியாற்றினார்.மேலும் அவர் உள்துறை அமைச்சக ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் இருந்தார் .
  • 1998 : கோரக்பூர் தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆதித்யநாத், அத்தேர்தலில் சமாஜ்வாதி கட்சியின் ஜமுனா பிரசாத் நிஷாத்-ஐ தோற்கடித்தார்.

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+