கர்நாடக அரசியலில் பாஜகவு்கு தனி முக்கியத்துவம், இடம், அங்கீகாரம் கிடைக்க முக்கியக் காரணம் எதியூரப்பா. 2008ம் ஆண்டுக்கு முன்பு வரை அவர் சட்டசபைத் தேர்தல் என்றால் ஷிகாரிபுர் தொகுதியில்தான் போட்டியிட்டு வந்தார். 7 முறை அவர் வெற்றி பெற்றுள்ளார். எதியூரப்பாவின் எழுச்சி பாஜகவின் எழுச்சியாகவும் அமைந்தது. 2008ம் ஆண்டு மே 30ம் தேதி பாஜகவை வெற்றி பெற வைத்த எதியூரப்பா முதல்வராக பதவியேற்றார். 2007ம்ஆண்டு குமாரசாமி- தரம் சிங் கூட்டணி ஆட்சி கவிழவும் எதியூரப்பாதான் முக்கியக் காரணமாக அமைந்தார். இதையடுத்து குமாரசாமி- எதியூரப்பா கூட்டணி ஆட்சி அமை்ததது. 20 மாதம் பாஜக ஆட்சி, 20 மாதம் ஜனதாதளம் எஸ் ஆட்சி என உடன்பாடு ஏற்பட்டது. ஆனால் குமாரசாமி வாக்கு தவறினார். இதனால் கர்நாடகத்தில் ஆட்சி கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. பின்னர் 2007ம் ஆண்டு நவம்பர் 12ம் தேதி எதியூரப்பா முதல்வராகப் பதவியேற்றார். ஆனால் ஆட்சி நீடிக்கவில்லை. 2007 நவம்பர் 19ம் தேதி அவர் ராஜினாமா செய்ய நேரிட்டது. பின்னர் பெங்களூர், ஷிமோகாவில் சட்டவிரோதமான சுரங்கத் தொழிலில் ஈடுபட்டதாக சர்ச்சை வெடித்தது. அதில் சிக்கி கைதாகி சிறைக்கும் போனார் எதியூரப்பா. 2018 சட்டசபைத் தேர்தலில் எதியூரப்பா தலைமையில் பாஜக 104 இடங்களில் வென்றது. ஆனால் பெரும்பான்மைக்குத் தேவையான பலம் இல்லாததால் முதல்வராக பதவியேற்ற எதியூரப்பா, நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே பதவி விலகினார்.
| முழுப் பெயர் | பிஎஸ் எதியூரப்பா |
| பிறந்த தேதி | 27 Feb 1943 (வயது 83) |
| பிறந்த இடம் | பூகின கரே, மாண்டியா, கர்நாடகா |
| கட்சி பெயர் | Bharatiya Janta Party |
| கல்வி | 12th Pass |
| தொழில் | விவசாயி கல்வியாளர் |
| தந்தை பெயர் | ஸ்ரீ சித்தலிங்கப்பா |
| தாயார் பெயர் | திருமதி புட்டாயம்மா |
| துணைவர் பெயர் | மைத்ரா தேவி |
| துணைவர் தொழில் | காலமானார் |
| குழந்தைகள் | 2 மகன்(கள்) 3 மகள்(கள்) |
| மதம் | இந்து |
Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.