Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராஜ் நாத் சிங்

ராஜ் நாத் சிங்
உத்திரப்பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் மற்றும் தற்போதைய மத்திய உள்துறை அமைச்சருமான ராஜ் நாத் சிங் இயற்பியல் விரிவுரையாளராக பணியாற்றி வந்தார். பின்னர் அவர் ஆர்.
By Moumi Majumdar | Thursday, May 30, 2019, 04:03:42 PM [IST]

ராஜ் நாத் சிங் சுயசரிதை

உத்திரப்பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் மற்றும் தற்போதைய மத்திய உள்துறை அமைச்சருமான ராஜ் நாத் சிங் இயற்பியல் விரிவுரையாளராக பணியாற்றி வந்தார். பின்னர் அவர் ஆர்.எஸ்.எஸ் மீது ஆர்வம் கொண்டு ஜனதா கட்சியில் இணைந்தார். அவர் மிர்சாபூர் தொகுதியில் இருந்து ஜனதா கட்சி வேட்பாளராக 1977ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்டார். அவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி வேட்பாளரான ஆஜஹர் இமாமை தோற்கடித்தார். 1980 மற்றும் 1985 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக போட்டியிட்ட அவர் தோல்வி அடைந்தார். 1988 ஆம் ஆண்டு உத்தரபிரதேச சட்டசபைக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.1991ம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலத்தில் முதல் பாரதிய ஜனதா கட்சி அரசின் கல்வி துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஏப்ரல் 1994 இல் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1997 ஆம் ஆண்டில் உத்தரபிரதேச மாநிலத்தின் பாரதிய ஜனதா கட்சியின் தலைவராகவும் 1999 ல் மத்திய அமைச்சரவையில் போக்குவரத்து மேற்பார்வை துறை அமைச்சராகவும் ஆனார். அவரது புகழ்பெற்ற போக்கு 2000 ஆம் ஆண்டில் உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சராக அவரை வழிநடத்தியது. 2005 இல் பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவராக நியமிக்கப்பட்டார். 2009 இல் அவர் காஜியாபாத் தொகுதியில் இருந்து பதினைந்தாவது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2014 ல் லக்னோ தொகுதியில் பதினாறாவது மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது அவர் நரேந்திர மோடி அமைச்சரவையில் மத்திய அமைச்சராக பணியாற்றுகிறார்.

மேலும் படிக்க

ராஜ் நாத் சிங் தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் ராஜ் நாத் சிங்
பிறந்த தேதி 10 Jul 1951 (வயது 74)
பிறந்த இடம் பாபோரா கிராமம், சந்தாளி மாவட்டம், உத்திர பிரதேசம்
கட்சி பெயர் Bharatiya Janta Party
கல்வி Post Graduate
தொழில் ஆசிரியர்
தந்தை பெயர் ராம் பதன் சிங்
தாயார் பெயர் திருமதி. குஜராத்தி தேவி
துணைவர் பெயர் திருமதி. சாவித்ரி சிங்
துணைவர் தொழில் தகவல் இல்லை
குழந்தைகள் 2 மகன்(கள்) 1 மகள்(கள்)
மதம் இந்து

ராஜ் நாத் சிங் நிகர மதிப்பு

நிகர மதிப்பு
₹2.92 CRORE
சொத்துக்கள்
₹2.92 CRORE
கடன்கள்
N/A

ராஜ் நாத் சிங் சுவாரசிய தகவல்கள்

பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருடன் பாரத் கே வீர் இணையதளத்தை தொடங்கி, நடத்தினார். இது தியாகிகளின் குடும்ப நலனுக்காக ஏற்படுத்தப்பட்ட வலைதளமாகும்.

2013 ம் ஆண்டு ஊழல் குற்றச்சாட்டுகளின் காரணமாக நிதின் கட்காரி பதவி விலகிய பின்னர் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ராஜ் நாத் சிங் அரசியலில் கடந்து வந்த பாதை

  • 2014 : லக்னோ தொகுதியில் இருந்து பதினாறாவது மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ரீட்டா பஹுகுனா ஜோஷியை 2,72,749 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். மோடியின் அமைச்சரவையில் மத்திய உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்
  • 2009 : காஜியாபாத் தொகுதியிலிருந்து பதினைந்தாவது மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் சுரேந்திர பிரகாஷ் கோயலை 90,681 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
  • 2003 : மத்திய அமைச்சரவையில் வேளாண்மை துறை அமைச்சர்.
  • 2002 : ஹைதர்கர் தொகுதியில் போட்டியிட்டு சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அர்விந்த் சிங்கை 24,536 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
  • 2000 : உத்திரபிரதேச மாநிலத்தின் முதலமைச்சர்.
  • 1999 : மத்திய அமைச்சரவையில் தரை வழிப் போக்குவரத்து அமைச்சராக செயல்பட்டார்.
  • 1994 : மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1991 : உத்திர பிரதேச மாநிலத்தில் அமைந்த முதல் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் கல்வி துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
  • 1985 : 4189 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி வேட்பாளரான ரஃபிமானுக்கு எதிராக தோல்வி அடைந்தார்.
  • 1980 : 1980 சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக போட்டியிட்டார். 11,660 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னாள் போட்டியாளரான ஆஜஹர் இமாம் அவரை தோற்கடித்தார்.
  • 1977 : மிர்சாபூர் தொகுதியிலிருந்து ஜனதா கட்சி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் 12,755 வாக்குகள் வித்தியாசத்தில் ஆஜஹர் இமாமை தோற்கடித்தார்.

ராஜ் நாத் சிங் சாதனைகள்

2003ஆம் ஆண்டில் விவசாய அமைச்சராக இருந்தபோது கிசான் கால் சென்டர் மற்றும் ஃபார்ம் வருமான காப்பீட்டு திட்டத்தை ஆரம்பித்தார். வேளாண் கடன்களுக்கான வட்டி விகிதங்களை அவர் குறைத்தார். மேலும் விவசாயிகளுக்கான ஆணையம் மற்றும் பண்ணை காப்பீட்டு திட்டத்தை தொடங்கினார்.

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+