முகப்பு
 » 
சோனியா காந்தி

சோனியா காந்தி

சோனியா காந்தி

இந்திய தேசிய காங்கிரசின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஆவார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக உள்ளார்.

சோனியா காந்தி சுயசரிதை

இந்திய தேசிய காங்கிரசின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஆவார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக உள்ளார். திருமதி காந்தி 1946ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதி அன்று இத்தாலியில் பிறந்தார். ஆரம்ப கல்விக்குப் பின், அவர் வெளிநாட்டு மொழி பள்ளியில் பயின்றார். அங்கு அவர் ஆங்கிலம், பிரஞ்சு மற்றும் ரஷ்ய மொழிகளைப் படித்தார். அவர் கேம்பிரிட்ஜ்ஜில் ஆங்கில மொழி பாடத் திட்டத்தை மேற்கொண்டிருந்த போது ராஜீவ் காந்தியை சந்தித்தார். அவர்கள் 1968 ல் புது தில்லியில் திருமணம் செய்து கொண்டார்கள். அவருக்கு ராகுல் என்ற மகனும் பிரியங்கா என்ற மகளும் மற்றும் இரண்டு பேரக்குழந்தைகளும் உள்ளனர். அவருடைய மாமியார், இந்திரா காந்தி, அவருடைய உத்தியோகபூர்வ கடமைகளின் போதும் விருந்தினராக வெளியில் செல்லும் போதும் அவருக்கு உறுதுணையாக இருந்தார். 1984ம் ஆண்டு முதல் 1991ம் ஆண்டு வரை அவரது கணவர் பிரதமராக இருந்தார். பின்னர் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக செயல்பட்டார். பெரும்பாலும் அவர் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் தனது சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு வந்தார். அதேசமயம் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அவரது சட்டமன்ற தொகுதியான அமேதியில் சுகாதார முகாம்களில் மற்றும் பிற நலத் திட்ட நடவடிக்கைகளில் கவனம் செலுத்தினார்.

1991ஆம் ஆண்டு மே மாதம் அவரது கணவர் படுகொலை செய்யப்பட்ட பின்னர், அவர் ராஜீவ் காந்தி அறக்கட்டளை என்ற அரசு சார்பற்ற அமைப்பினைத் தொடங்கி அதன் சிந்தனையாளராகவும் செயல்பட்டு ராஜீவ் காந்தி இன்ஸ்டிட்யூட் ஆஃப் தற்கால நேர் கல்வி அறக்கட்டளையையும் நிறுவினார். இவற்றின் தலைவராக இருந்து தனது கணவரின் வாழ்க்கையை நினைவுகூரும் வகையான நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். பல அரசு சாரா நிறுவனங்களையும் அவர் தலைமை தாங்கினார்.

1998ம் ஆண்டில் நடந்த மக்களவை தேர்தலுக்கு முன்பு, காங்கிரஸ் தலைவர்களின் தொடர் கோரிக்கை காரணமாக பொது வாழ்வில் நுழைந்தார். கட்சியின் சார்பில் தீவிரமாக பிரச்சாரம் செய்தார். மேலும் ஏப்ரல் 1998ம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1999 ஆம் ஆண்டில் அமேதி பாராளுமன்ற தொகுதியிலிருந்து பாராளுமன்ற உறுப்பினராக திருமதி காந்தி முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டார், அதன் பின் அவர் மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக செயல்பட்டார். 2004ம் ஆண்டு பொதுத் தேர்தலில், அவர் தனது கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தை வழிநடத்தியதன் மூலம் மிக அதிகமான இடங்களில் வெற்றி பெறச் செய்தார். இது காங்கிரஸ் கட்சி கூட்டணி அரசாங்கத்தை அமைக்க உதவியது. இந்தத் தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலத்தின் ரேபரேலி தொகுதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2006ம் ஆண்டு மே மாதம் வரை தேசிய ஆலோசனைக் கவுன்சில் தலைவராக இருந்தார். சமூக-பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் அரசாங்கத்திற்கு குறிப்பிட்ட கால அவகாசங்களை ஏற்படுத்தி கொடுத்தார். அதன் மூலம் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம், தகவல் உரிமை சட்டம், தேசிய கிராம சுகாதாரத் திட்டம், மத்திய உணவுத் திட்டம், ஜவஹர்லால் நேரு நகர்ப்புற புதுப்பித்தல் திட்டம் மற்றும் தேசிய புனர்வாழ்வு கொள்கை ஆகியவற்றை செயல்படுத்தினார்.

மேலும் படிக்க
By Zainab Ashraf Updated: Tuesday, February 19, 2019, 01:40:30 PM [IST]

சோனியா காந்தி தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் சோனியா காந்தி
பிறந்த தேதி 09 Dec 1946 (வயது 77)
பிறந்த இடம் விஸேன்சா, இத்தாலி
கட்சி பெயர் Indian National Congress
கல்வி Others
தொழில் அரசியல்வாதி
தந்தை பெயர் ஸ்டெபனோ மைனோ
தாயார் பெயர் பாலோ மைனோ
மதம் இந்து
சமூக வலைதளங்கள் சமூக வலைதளங்கள்:

சோனியா காந்தி நிகர மதிப்பு

நிகர மதிப்பு: ₹11.83 CRORE
சொத்துக்கள்:₹11.83 CRORE
கடன்கள்: N/A

சோனியா காந்தி சுவாரசிய தகவல்கள்

1) தனது குழந்தை பருவத்தில் கால்பந்து விளையாட்டின் மீது மிகவும் ஆர்வம் கொண்டிருந்தார். அருகில் வசிக்கும் குழந்தைகளுடன் கால்பந்து விளையாடி வந்தார். திருமணத்திற்கு முன்னர், அவர் வெலிங்டன் கிரேசன்ட் ஹவுஸில் பச்சன் குடும்பத்தினருடன் தங்கியிருந்தார்.

2) 1968 ஆம் ஆண்டு ஜனவரி 26 ம் தேதி அன்று (இந்திய குடியரசு தினம்) ராஜீவுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு 1968ம் ஆண்டு பிப்ரவரி 25ம் தேதி அன்று வசந்த் பஞ்சமி தினத்தன்று திருமணம் செய்து கொண்டனர். பல வருடங்களுக்கு முன்பு இதே தினத்தில்தான் இந்திரா காந்தி, பெரோஸ் காந்தி திருமணமும் நடந்தது.

3) அவரது மெஹந்தி விழா (திருமணத்திற்கு ஒரு நாள் முன்பு) பச்சன் குடும்பத்தினர் வீட்டில் நடைபெற்றது.

4) திருமணத்திற்கு முன்னர் அவர் பிரெஞ்சு மொழியை நன்கு அறிந்திருந்தார். திருமணத்திற்குப் பிறகு அவர் ஹிந்தி மொழியை ஒரு ஆசிரியரிடமும் பின்னர் ஒரு நிறுவனத்தின் மூலமாகவும் கற்று தேர்ந்தார்.

5) ராஜீவ் மற்றும் ராஜீவின் உலகம் என்ற இரு புத்தகங்களை எழுதியுள்ளார். 1922ம் ஆண்டு முதல் 1964 ஆம் ஆண்டு வரை பண்டிட் ஜவஹர்லால் நேரு மற்றும் இந்திரா காந்தி இடையே நடந்த கடித உரையாடல்களை "சுதந்திர மகள்" மற்றும் "இருவரும் தனியாக, இருவரும் ஒன்றாக" என்ற பெயரில் இரு பகுதிகளாக வெளியிட்டார்.

6) சுற்றுச்சூழலுடன் தொடர்புடைய பிரச்சினைகள், பிற்பட்டோருக்கான அதிகாரம், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலன் ஆகியவற்றில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக உள்ளார்.

7) இந்திய சமகால, பாரம்பரிய மற்றும் பழங்குடி கலை மீதும் இந்திய கைத்தறி மற்றும் கைவினைப்பொருட்களின் மீதும் நாட்டுப்புற மற்றும் கர்நாடக இசையின் மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். புது தில்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் இருந்து எண்ணெய் ஓவியங்களைப் பாதுகாப்பதில் டிப்ளமோ பட்டம் பெற்றார்.

சோனியா காந்தி அரசியலில் கடந்து வந்த பாதை

2014
  • 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ரேபரேலி தொகுதியில் இருந்து நான்காவது முறையாக வெற்றி பெற்றார்.
2009
  • 2009 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மூன்றாவது முறையாக ரேபரேலி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2006
  • உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியிலிருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2004
  • 2004 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் உத்தரபிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2004ம் ஆண்டு மே 14ம் தேதி அன்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என்ற பெயரில் பதினைந்து கட்சியுடன் கூட்டணி வைத்து கூட்டணியின் தலைவராக சோனியா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1999
  • பதின்மூன்றாவது மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1999
  • மக்களவை தேர்தலில் உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி தொகுதி மற்றும் கர்நாடக மாநிலம் பெல்லாரி தொகுதியிலும் போட்டியிட்டு, இரு இடங்களிலும் வெற்றி பெற்றார்.
1998
  • இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1997
  • சோனியா காந்தி இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக சேர்ந்தார்.

சோனியா காந்தி சாதனைகள்

1. 2004ம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை பத்திரிகைகளில் இந்தியாவின் மிகச் சிறந்த அரசியல்வாதியாகவும் மிகவும் சக்திவாய்ந்த மக்கள் மற்றும் பெண்கள் பட்டியலில் இடம் பிடித்தார்.

2. 2013 ஆம் ஆண்டில், ஃபோர்ப்ஸ் இதழ் நடத்திய கருத்து கணிப்பின் மூலம் சோனியா காந்தி உலகின் மிக சக்தி வாய்ந்தவர்களில் 21வது இடத்தையும் மற்றும் மிக சக்தி வாய்ந்த பெண்கள் மத்தியில் ஒன்பதாவது இடத்தையும் பெற்றார்.

3. 2007 ஆம் ஆண்டில், அதே பத்திரிகையால் உலகின் மூன்றாவது சக்திவாய்ந்த பெண்மணி என்ற பெயரிடப்பட்டு பிரத்யேக பட்டியலில் ஆறாவது இடத்தைப் பிடித்தார்.

4. 2010 ஆம் ஆண்டில், ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையின் மூலம் ஒன்பதாவது மிக சக்தி வாய்ந்த நபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2012 இல் ஃபோர்ப்ஸ் இதழின் 'சக்திவாய்ந்த மக்கள் பட்டியலில் 12 வது இடத்தைப் பிடித்தார்.

5. 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் உலகில் மிக அதிகமான செல்வாக்கு உள்ள நூறு பேர் பட்டியலில் சோனியா காந்தி பெயரும் இடம் பிடித்தது. 2010 ஆம் ஆண்டில் நியூ ஸ்டேட்ஸ்மேன் இதழ் நடத்திய 29வது ஆண்டு கருத்துக் கணிப்பில், சோனியா "உலகின் ஐம்பது செல்வாக்கு மிக்க நபர்களில்" ஒருவராக இடம் பெற்றார்.

6. 2008 இல் அவருக்கு மெட்ராஸ் பல்கலைக் கழகத்திலிருந்து கெளரவ டாக்டர் (இலக்கியம்) பட்டம் வழங்கப்பட்டது.

7. 2006 ஆம் ஆண்டில் அவர் பிரஸ்ஸல்ஸ் பல்கலைக்கழகத்திலிருந்து கௌரவ டாக்டர் பட்டம் பெற்றார்.
8. 2006 ஆம் ஆண்டில் பெல்ஜிய அரசாங்கத்திடமிருந்து கிங் லியோபோல்ட் ஆர்டர் பட்டம் பெற்றார்.

Disclaimer: The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X