Breaking: திமுகவுடன் தான் கூட்டணி! அடம்பிடிக்கும் சோனியா காந்தி! அசராத ராகுல்! காங்கிரஸ் ஹெட் ஆஃபீஸில் சூடான விவாதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆட்சி அதிகாரத்தில் பங்கு, கூடுதல் சீட் என எதற்கும் இறங்கி வர திமுக மறுப்பதால் கூட்டணியை விட்டு வெளியேறலாமா? என ராகுல் காந்தி ஆலோசிப்பதாகவும் ஆனால், திமுக கூட்டணியை விட்டு வெளியேறவே கூடாது என்று சோனியா காந்தியும் கூறி வருவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த விவகாரத்தில் டெல்லி காங்கிரஸ் தலைமையகத்தில் சூடான விவாதங்கள் நடைபெற்று இருக்கின்றன.

தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி 20 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த நட்புக் கூட்டணியில் இதுவரை இல்லாத அளவிற்கு சலசலப்புகள் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பதை திமுக ரசிக்கவில்லை. அதேபோல, கூடுதல் சீட்கள் கேட்டதையும் திமுக ஏற்றுக்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

Alliance Only With DMK Sonia Stands Firm Rahul Unfazed Heated Debate at Congress Headquarters

திமுக கூட்டணியில் இருப்பதா? வேண்டாமா?

கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அதைவிட ஒன்று இரண்டு கூட வழங்கலாம் என அதற்கு மேல் வாய்ப்பு இல்லை என திமுக கையை விரித்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனால், காங்கிரஸ் கட்சியும் கூட்டணியில் இருந்து வெளியேறிவிடலாமா என்று யோசிப்பதாகவும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

திமுக கூட்டணியில் இருப்பதா? விலகுவதா? என்கிற ஆலோசனை காங்கிரஸ் மேலிடத்தில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான ஆலோசனை கூட்டம் நேற்று இரவும் இன்று காலையும் சோனியாவின் வீட்டில் நடந்துள்ளது. இதில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால், கிரிஸ் சோடங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திமுகவுடன் தான் கூட்டணி உறுதி செய்யப்பட வேண்டும் என்கிற தனது பேச்சை ராகுல் காந்தி புறக்கணித்து வருவதால், பிரியங்கா மூலம் ராகுலிடம் வலியுறுத்தியிருந்தார் சோனியா காந்தி. பிரியங்காவும் தனது பாணியில் ராகுலிடம் பேசினார். ஆனாலும், ராகுலின் மனம் மாறாத நிலையில் தான் இந்த ஆலோசனைக் கூட்டம் சோனியா காந்தி இல்லத்தில் சீரியசாக நடந்திருக்கிறது.

திமுக நம்மை மதிக்கவில்லை

அந்த ஆலோசனைக் கூட்டம் குறித்து விசாரித்தபோது, ''திமுக நம்மை மதிக்கவில்லை. நமது கோரிக்கையை விவாதிக்கக்கூட மறுக்கிறார்கள். நமது பக்கத்தில் இருக்கிற நியாத்தைக்கூட அவர்கள் கவனிக்க விரும்பவில்லை. இப்படிப்பட்ட நிலையில் கூட்டணியில் நீடிப்பதால் நம்மை தோற்கடிப்பார்கள்.

திமுகவில் போட்டியிட்டு தோற்றுப் போவதைக் காட்டிலும் மாற்று யோசனையை நாம் விவாதித்தால் என்ன? இந்த தேர்தலில் நாம் எதையும் இழக்கப்போவதில்லையே? அதிகாரத்தில் பங்கு இல்லாத போது நமக்கு எத்தனை எம்.எல்.ஏ.க்கள் இருந்தும் என்ன பலன்? என்று திமுக கூட்டணிக்கு எதிராக ராகுல்காந்தி பேசியிருக்கிறார்.

விடாப்பிடியாக நிற்கும் ராகுல்

அப்போது, சோனியாவின் குரலாகப் பேச்சை ஆரம்பித்த பிரியங்கா, பாஜக எனும் அசகாய சூரரை நாடாளுமன்றத்தில் எதிர்க்க வேண்டுமானால் நம்பிக்கையான, வலிமையான கூட்டணி கட்சியின் ஆதரவு நமக்கு வேண்டாமா? அந்த நம்பிக்கையான கட்சியாக திமுகதான் நமக்கு இருக்கிறது. தேர்தல் அரசியலில் விட்டுக் கொடுத்து காரியம் சாதிப்பதுதான் புத்திசாலித்தனம்.

திமுக கூட்டணியிலிருந்து வெளியேற நினைப்பது ஆரோக்கியமானதில்லை என வாதிட்டுள்ளார். இத்தகைய கருத்தினையே சோனியா ஆமோதித்தார். அப்போது பேசிய கே.சி.வேணுகோபால், சென்னையில் ஸ்டாலினை நான் சந்தித்த போது என்னிடம் முகம் கொடுத்துக்கூட அவர் பேசவில்லை.

வேண்டாத விருந்தாளி போலத்தான் அந்த சந்திப்பில் நான் இருந்தேன். காங்கிரசின் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவர் கிரிஸ் சோடங்கர். ஸ்டாலினோடு நான் விவாதிக்கும் போது அவரை ஸ்டாலின் அனுமதிக்கவில்லை. இதுவே எனக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது.

திமுக கூட்டணி வேண்டாம்

ஆட்சியில் பங்கு கொடுத்தால் குறைந்த எண்ணிக்கையில் சீட் ஒதுக்குவதை ஏற்கி றோம்; ஆட்சியில் பங்கில்லை எனில் 41 சீட்டுகள் ஒதுக்க வேண்டும் என ஸ்டாலினிடம் சொன்ன போது, இரண்டையுமே அவர் ஒப்புக்கொள்ளவில்லை. ஆட்சியில் பங்கும் தர மாட்டார்கள், அதிக சீட்டும் கொடுக்க மாட்டார்கள். இப்படி பிடிவாதமாக, முரண்பட்டு இருந்தால் எப்படி? என கேள்வி எழுப்பியிருக்கிறார் வேணுகோபால்.

அவர் பேசி முடித்ததும், திமுகபேச்சுவார்த்தை குழுவினருடன் தான் நடத்திய பேச்சு வார்த்தையில் நடந்தது என்னவென்பதை விவரித்தார் கிரிஸ் சோடங்கர். மேலும், தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் எல்லோரும் திமுக கூட்டணி வேண்டாம் என்று தான் சொல்கின்றனர். வேண்டுமானால், எம்.எல்.ஏ.க்களிடம் இப்பவே பேசுவோம் என கிரிஸ் சோடங்கர் சொல்ல, ஃபோன் போடுங்கள் என சோனியா சொல்லியிருக்கிறார்.

சோனியா காந்தி வீட்டில் அவசர மீட்டிங்

உடனே காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 17 பேரிடமும் ஃபோனில் கருத்து கேட்டிருக்கிறார் கிரிஸ் சோடங்கர். கூட்டத்தில் அனைவருக்கும் கேட்கும்படி ஸ்பீக்கர் ஆன் செய்யப் பட்டது. ஒவ்வொரு எம்.எல்.ஏ.க்களிடமும் கருத்துக் கேட்கப்பட, 3 எம்.எல்.ஏ.க்கள் தவிர, 14 எம்.எல்.ஏ.க்கள், ஆட்சியில் பங்கும் அதிக சீட்டும் கொடுத்தால் திமுக கூட்டணியை தொடரலாம்.. இல்லையெனில் விலகிடலாம். மற்றபடி தலைமை எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுப்படுகிறோம் என சொல்லியிருக்கிறார்கள்.

இந்த கருத்துக்கள் சோனியாவையும் பிரியங்காவையும் யோசிக்க வைத்திருக்கிறது. திமுக தலைமையிடம் நீங்கள் பேசுங்கள் என சோனியாவை கேட்டுக் கொண்டார் பிரியங்கா. இதே ரீதியிலான ஆலோசனை, இன்று காலையிலும் சோனியா வீட்டில் நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில், திமுக தலைமையிடம் தொடர்பு கொண்டு வருகிறார் சோனியா காந்தி'' என்று விரிவாக விவரிக்கிறார்கள் அகில இந்திய தலைமையோடு நெருக்கமாக இருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள்.

ராகுலை ஏற்க வைக்க சோனியா விருப்பம்

திமுக கூட்டணியில் எப்படியாவது காங்கிரஸ் கட்சியை தொடர வைக்க வேண்டும் என பகீரத முயற்சி எடுத்து வருகிறார் சோனியா காந்தி. 41 சீட் கேட்டு அடம் பிடித்த காங்கிரஸ் தற்போது 35-க்கு இறங்கி வந்துள்ளது. ஆனால், 25 சீட்டுகளுக்கு மேலே கொடுக்க இயலாது என மல்லுக்கட்டும் திமுக, தற்போது, 26 சீட்டுக்கு வந்துள்ளது. சோனியாவின் வற்புறுத்தல் அதிகமானால், 28 சீட்டுகள் வரை திமுக ஏறி வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இந்த டீலிங்கிற்கு ராகுல் காந்தியை ஏற்க வைப்பது சோனியாவின் வலியுறுத்தலில் இருக்கிறது.

இதற்கிடையே, கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் அல்லது தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகிய இருவரில் ஒருவரை சென்னைக்கு அனுப்பி திமுக தலைமையிடம் பேசி சம்மதிக்க வைக்கும் திட்டத்தில் சோனியா இருப்பதாகச் சொல்லப்படுகிறது. - சிறப்பு நிருபர் எழில்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+