Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இரவோடு இரவாக சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி.. பரபரக்கும் காங்கிரஸ்.. என்ன காரணம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி டெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நேற்றிரவு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் நுரையீரல் மருத்துவர் ஒருவரின் கண்காணிப்பில் அவர் இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறியுள்ளன.

காங்கிரஸின் மூத்த தலைவர் சோனியா காந்தி. 1998 - 2017 மற்றும் 2019- 2022 வரையிலான காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவராகச் சோனியா இருந்துள்ளார். குறிப்பாக 1998 - 2017 காலகட்டத்தில் காங்கிரஸ் சிக்கலான நிலையில் இருந்த நிலையில், வெற்றிகரமாகக் காங்கிரஸை வழிநடத்தி 2004 தேர்தலில் வெற்றி பெற வைத்தவர் சோனியா காந்தி.

Congress senior leader Sonia Gandhi Admitted to Delhi s Sir Ganga Ram Hospital Due to Chronic Cough

79 வயதான சோனியா காந்தி, கடந்த சில ஆண்டுகளாகவே வயது மூப்பு காரணமாகத் தீவிர அரசியலில் இருந்து சற்று விலகியே இருந்தார். நாடாளுமன்றக் கூட்டத்தொடர்களில் பங்கேற்றாலும் முன்பு போல அதிகளவில் கட்சி செயல்பாடுகளில் பங்கேற்காமலேயே இருந்தார்.

இதற்கிடையே சோனியா காந்தி, டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் திங்கள்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டார். அவர் நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இது வழக்கமான மருத்துவப் பரிசோதனைதான் என்றாலும், அவருக்கு நீண்ட நாட்களாக இருமல் இருந்ததாகவும் இதன் காரணமாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது..

மேலும், டெல்லியில் காற்று மாசு மிக மோசமாக இருக்கும் சூழலில், வயது மூப்பு காரணமாக சோனியா காந்தி அடிக்கடி மருத்துவப் பரிசோதனைக்குச் செல்வதும் வழக்கம் என்று மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.

அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் நுரையீரல் மருத்துவர் ஒருவரின் கண்காணிப்பில் அவர் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+