கணிப்பை மாற்றி கோல்ட்மேன் சாக்ஸ்.. இனி அவ்வளவு தான்.. நிற்காமல் குறைய போகுது தங்கம் விலை!

Subscribe to Oneindia Tamil

வதேச சந்தையில் தங்கத்தின் விலை மேலும் குறையும் என பிரபல கோல்ட்மேன் சாக்ஸ் வங்கி தனது கணிப்பை மாற்றியுள்ளது. 2027ம் ஆண்டு இறுதியில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,800 டாலராக இருக்கும் என்று ஏற்கெனவே கணித்திருந்த நிலையில், தற்போது அதை 4,650 டாலராகக் குறைத்துள்ளது. அதாவது முந்தைய கணிப்பைவிட தங்கம் 150 டாலர் அல்லது 3.1 சதவீதம் குறைவாகவே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கம் விலை இந்தாண்டு தொடக்கம் முதலே சரிந்து வருகிறது. இது வரும் காலங்களில் எப்படி இருக்கும்.. மேலும் குறையுமா அல்லது யூடர்ன் போட்டு அதிகரித்துவிடுமா என்பதே பலரது கேள்வியாக இருக்கிறது. இதற்கிடையே அமெரிக்காவின் பிரபல கோல்ட்மேன் சாக்ஸ் வங்கி தங்கம் தொடர்பாக தனது கணிப்பை மாற்றியுள்ளது.

Gold Price Goldman Sachs Gold Price Forecast december

தங்கம் விலை

அடுத்தாண்டு இறுதியில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,800 டாலராக இருக்கும் என்று கோல்ட்மேன் சாக்ஸ் கணித்திருந்தது. ஆனால், இப்போது அந்த கணிப்பை 4,650 டாலராக, அதாவது முந்தைய கணிப்பைவிட தங்கம் 150 டாலர் அல்லது 3.1 சதவீதம் குறைத்துள்ளது.

அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கி மீண்டும் வட்டி விகிதங்களை உயர்த்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பே இந்த மாற்றத்துக்குக் காரணம். வட்டி விகிதங்கள் அதிகரித்தால், முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வது குறையலாம். பெரும்பாலான முதலீட்டாளர்கள் அரசு பத்திரங்களை நோக்கியே செல்வார்கள். இதனால் தங்கத்தின் விலை சரியும் என கோல்ட்மேன் சாக்ஸ் தெரிவித்துள்ளது.

கோல்ட்மேன் சாக்ஸ்

ஏற்கெனவே 2026 டிசம்பரில் அமெரிக்க பெடரல் ரிசர்வ் 25 அடிப்படைப் புள்ளிகள் அளவுக்கு வட்டி விகிதத்தை உயர்த்தும் என கோல்ட்மேன் சாக்ஸ் கணித்திருந்தது. தற்போது 2027 மார்ச் மாதத்திலும் மேலும் 25 அடிப்படைப் புள்ளிகள் உயர்த்தப்படலாம் என அதன் பொருளாதார நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். இதனால் 2027ம் ஆண்டின் தொடக்கத்தில் முதலீட்டாளர்களின் தங்க முதலீடு பாதிக்கப்படலாம். வட்டி தரும் முதலீடுகளுடன் ஒப்பிடும்போது, வட்டி வருமானம் தராத தங்கத்தின் மீது முதலீடு குறைய வாய்ப்புள்ளது. இதன் காரணமாகவே 2027க்கான தங்க விலை கணிப்பை கோல்ட்மேன் சாக்ஸ் வங்கி குறைத்துள்ளது.

உலக வங்கிகள்

அதேநேரம் நீண்டகால அடிப்படையில் தங்கத்தின் மீதான நம்பிக்கையை கோல்ட்மேன் சாக்ஸ் கைவிடவில்லை. குறிப்பாக, உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தொடர்ந்து தங்கம் வாங்கி வருவது தங்கம் விலை பெரியளவில் சரியாமல் இருக்க உதவும் என கோல்ட்மேன் சாக்ஸ் கருதுகிறது.. சீன மத்திய வங்கி தொடர்ந்து தங்கத்தை வாங்கி குவித்து வரும் நிலையில், அதுவும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

2027 டிசம்பரில் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை குறைக்கத் தொடங்கும் என கோல்ட்மேன் சாக்ஸ் எதிர்பார்க்கிறது. அப்போது முதலீட்டாளர்களின் தங்க முதலீடு மீண்டும் அதிகரிக்கலாம். உலக நாடுகளும் அப்போது தங்கத்தை வாங்கும் என்பதால் 2027 பிற்பகுதியில் தங்கம் விலை மீண்டும் அதிகரித்து, இறுதியில் ஒரு அவுன்ஸ் தங்கம் 4,650 டாலரை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.

என்ன நடக்கும்

சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் தங்கம் விலை இப்போதைய விலையை விட மேலும் குறைந்து, பின்னர் அடுத்தாண்டு பிற்பகுதியில் அதிகரித்து 4650ல் முடியும் என கணித்துள்ளனர். அதாவது இப்போது சர்வதேச சந்தையில் உள்ள விலையுடன் ஒப்பிடும்போது, அடுத்தாண்டு டிசம்பருக்குள் தங்கத்தின் விலை சுமார் 16 சதவீதம் உயரவும் வாய்ப்புள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது.

இந்தியா

அமெரிக்க வட்டி விகித உயர்வு எதிர்பார்ப்பு காரணமாக சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை குறையும்போது, இந்தியாவிலும் தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளது. ஆனால் சர்வதேச சந்தையில் ஏற்படும் அதே அளவிலான சரிவு இந்தியாவில் இருக்க வேண்டிய அவசியமில்லை. காரணம் இந்திய ரூபாய் மதிப்பு.

இந்தியாவில் தங்கத்தின் விலையை நிர்ணயிப்பதில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பும் முக்கியப் பங்கு வகிக்கிறது. ரூபாய் மதிப்பு சரிந்தால், சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்தாலும் அதன் பலன் இந்தியாவில் முழுமையாக கிடைக்காமல் போகலாம். ரூபாய் வலுப்பெற்றால் மட்டுமே அதே அளவுக்கு குறையும். எனவே சர்வதேச தங்க விலையுடன் ரூபாய் - டாலர் மாற்று விகிதத்தையும் பொறுத்தே இந்தியாவில் தங்கத்தின் விலை அமையும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+