“மகா பெரியவா புத்தகங்களை பெரியார் அறிவுலகத்தில் வைக்கணும்!” நீதிபதி கருத்துக்கு கிளம்பும் எதிர்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோயம்புத்தூர் பெரியார் அறிவுலக நூலகத்தில், AI போலி நூல்கள் வைக்கப்பட்டிருந்தது. இது பாவம் என்றும், இந்த பாவம் கழிய வேண்டும் எனில், மகா பெரியவருடைய புத்தகங்களை அதில் அடுக்கி வைக்க வேண்டும் என்றும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கூறியிருக்கிறார். அவரது கருத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன.

கோயம்புத்தூரில் உள்ள பெரியார் அறிவுலக நூலகத்தில், அகல் விளக்கு பதிப்பகம் என்கிற பெயரில்.. நூற்றுக்கணக்கான போலி புத்தகங்கள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால்.. தவறான தகவல்களை கொண்டு எழுதிய புத்தகங்கள் இடம் பெற்று இருந்தன. இது எழுத்தாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த விவகாரம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்திருந்த நிலையில் தான், தற்போது நீதிபதி சுவாமிநாதனின் கருத்து கவனம் பெற்றிருக்கிறது.

Justice Swaminathan

புத்தக வெளியீட்டு நிகழ்வு ஒன்றில் பேசிய அவர், "கங்கையில் குளித்தால் பாவம் எல்லாம் போய்விடும் என்று சொல்வார்கள். ஆனால், இந்த விஷயத்தில் அரசாணை பிறப்பித்தால் இந்த பாவங்கள் எல்லாம் கழிந்து விடாது. மகா பெரியவா புக் இருக்கு இல்லையா.. அதை எடுத்து, அத்தனை வால்யூம்களையும் பெரியார் அறிவுலக நூலக ராக்குகளில் அடுக்கினால் தான் அந்த பாவம் போகும் என நான் மனதார நம்புகிறேன்.

தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் என்கிற பதிப்பகத்தால் இந்த புத்தகம் பப்ளிக் செய்யப்பட்டிருக்கிறது. அகல்விளக்கு பதிப்பகத்தால் இந்த புத்தகம் பப்ளிஷ் செய்யப்படவில்லை. எழுதியவர் பி சுவாமிநாதன். திரிஷா விஜய் மாதிரியான எழுத்தாளர் கிடையாது. செயற்கை நுண்ணறிவால் எழுதப்பட்ட புத்தகம் கிடையாது. அனுபவத்தை உள்வாங்கி எழுதப்பட்ட புத்தகம் இது" என்று பேசியிருந்தார். அவரது பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கியிருக்கின்றனர்.

குறிப்பாக மதுரை சிபிஎம் எம்பி சு.வெங்கடேசன், "பெரியார் அறிவுலகத்தில் அகல்விளக்கு புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ரேக்குகளில் பாவங்கள் கழிய வேண்டுமென்றால், மகா பெரியவருடைய புத்தகங்களை அதில் அடுக்கி வைக்க வேண்டும்" என்று நீதியரசர் ஜி. ஆர். சுவாமிநாதன் கூறியுள்ளார்.

நூலகக் கொள்முதலில் நடந்திருப்பது ஊழல், அது சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். அதுதான் நீதியரசர்களின் வேலை. நடந்திருப்பது பாவம், அதற்குப் புண்ணியம் செய்ய வேண்டும் என்று சொல்லுவது ஜோதிடர்களின் வேலை. சட்டத்தின் ஞானத்திற்காக அம்பேத்கரும், பகுத்தறிவின் ஞானத்திற்காக பெரியாரும் நாள்தோறும் நினைக்கப்படும் 'மகா பெரியவர்கள்'" என பதிவிட்டிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+