‘புதுச்சட்டையை வெட்டக்கூடாது'னு சொன்னவரை பனியனுடன் அரசு தேர்வெழுத வைத்த அதிகாரிகள்! என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரில் இன்று அரசு பணிக்கான தேர்வு நடந்தது. இந்த தேர்விற்கு முழுக்கை சட்டை அணிந்து வந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அவர்களின் சட்டையை வெட்டி அதிகாரிகள் அனுமதித்தனர். அப்போது ஒருவர் புதுச்சட்டை அணிந்து வந்ததால் வெட்ட மறுப்பு தெரிவித்து வெறும் பனியனுடன் அரசு பணிக்கான தேர்வு எழுதிய சம்பவம் கவனம் பெற்றது.

in-bengaluru-man-writes-kpsc-exam-with-vest

கர்நாடகா அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் இன்று மாநிலம் முழுவதும் gazetted Probationers குரூப் - ஏ, குரூப் - பி பணிகளுக்கான தேர்வு நடந்தது. இந்த தேர்வில் முறைகேடுகள் நடப்பதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கர்நாடகா அரசு பணியாளர் தேர்வாணையத்தில் சமீபத்தில் முறைகேடு புகார்கள் பூதாகரமானது. இதனால் இந்த தேர்வை சர்ச்சையின்றி நடத்தி முடிக்க அரசு திட்டமிட்டது.

இதனால் மாநிலம் முழுவதும் தேர்வு மையங்கள் மற்றும் தேர்வறைகளை சுற்றி சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தது. முகத்தை அடைாளம் காணும் கருவி, தேர்வறையை சுற்றி ஜாமர்கள் பொருத்தப்பட்டன.
தேர்வு எழுதி வந்தவர்கள் அனைவரும் தீவிர சோதனைக்கு பிறகு தான் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

தேர்வர்கள் தங்கம் உள்பட எந்த அணிகலன்களையும் அணிய தடை விதிக்கப்பட்டு இருந்தது. மீறி அணிந்து வந்தவர்கள் அதனை கழற்றி வைத்துவிட்டு தேர்வெழுதினர். முழுக்கை சட்டை அணியவும் தடை விதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் நிறையபேர் முழுக்கை சட்டை அணிந்து வந்தனர்.

இதையடுத்து தேர்வு மையத்தில் பணியில் இருந்த அதிகாரிகள் அவர்களின் கைகளை கத்தரிக்கோல் வைத்து வெட்டி அனுமதித்தனர். பெங்களூர் மல்லேஸ்வரம் அரசு கல்லூரியில் தேர்வு எழுத வந்த ஒருவர் தனது சட்டையை வெட்ட எதிர்ப்பு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர், ''இது புது சட்டை. இதனால் அதனை வெட்ட வேண்டாம். நான் வேண்டுமானால் சட்டையை கழற்றி வைத்துவிட்டு தேர்வு எழுதுகிறேன்'' என்று கூறினார். இதற்கு தேர்வு மைய அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அந்த நபர் முழுக்கை சட்டையை கழற்றி வெளியே வைத்துவிட்டு பனியனுடன் சென்று தேர்வெழுதினார்.இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+