பாம்புகளுக்காக மூடப்படும் 4 கி.மீ சாலை! அதுவும் வருஷத்துக்கு 2 முறை! எங்கனு பாருங்க!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: பாம்பு என்றால் படையும் நடங்கும் என்று கேட்டுதான் நாம் வளர்ந்திருக்கிறோம். எனவே பாம்பை எங்கு பார்த்தாலும் அடித்து கொன்றுவிடுகிறோம். ஆனால், பாம்புகளுக்காக ஆண்டு 2 முறை சாலை மூடப்படும் விசித்திர சம்பவங்களும் நாம் வாழும் இதே பூமியில்தான் நடக்கிறது.

அமெரிக்காவின் தெற்கு இல்லினாய்ஸ் பகுதியில் உள்ள, 4 கிலோமீட்டர் நீளமுள்ள ஸ்நேக் ரோடு எனப்படும் சாலை, ஆயிரக்கணக்கான பாம்புகள் மற்றும் ஊர்வனவற்றின் பருவகால இடப்பெயர்வுக்காக.. ஆண்டுக்கு இருமுறை மூடப்படுகிறது.

snake

நம்மூரில் ரோட்டில் பாம்புகள் சென்றால், வண்டியை விட்டு ஏற்றிவிட்டு.. நசுக்கி கொன்று விட்டு கண்டு கொள்ளாமல் போய்விடுவோம். ஆனால் அமெரிக்காவில் பாம்புகளை பாதுகாப்பதற்கு கடுமையான சட்டங்கள் இருப்பது சூழலியல் ஆர்வலர்கள் இடையே வரவேற்பு பெற்று இருக்கிறது.

'ஷானி' தேசிய வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த நான்கு கிலோமீட்டர் சாலை, மேற்கே உள்ள லாரூ சதுப்பு நிலத்தையும், கிழக்கே 46 மீட்டர் உயரத்துக்கு அமைந்துள்ள லாரூ-பைன் ஹில்ஸ் சுண்ணாம்பு குன்றுகளையும் இணைக்கிறது.

வெயில் காலம் தொடங்கும் போது, குளிர்கால உறக்கத்திலிருந்து வெளிவரும் பாம்புகள்.. இரை தேடுவதற்காகவும், இனப்பெருக்கம் செய்வதற்காகவும் மற்றும் ஓய்வெடுப்பதற்காகவும் சதுப்பு நடத்தை நோக்கி செல்கின்றன. அதேபோல குளிர்காலம் தொடங்கி.. வெப்பநிலை குறைய ஆரம்பிக்கும் போது, கடுமையான குளிரிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள அவை மீண்டும் சுண்ணாம்பு குன்றுகளின் இடுக்குகளில் தஞ்சம் புக திரும்புகின்றன.

இப்படி போய்க்கொண்டும், வந்து கொண்டும் இருப்பதால்.. குறிப்பிட்ட சில நாட்களில் மட்டும், ஆண்டுக்கு இருமுறை இந்த பகுதியில் வாகன போக்குவரத்தை அமெரிக்க வனத்துறை நிறுத்தி வைத்திருக்கிறது.

மார்ச் மாதம் 15 ஆம் தேதி முதல், மே 15 வரையிலும்.. செப்டம்பர் மாதம் 1ம் தேதி தொடங்கி.. அக்டோபர் 30 வரையிலும் இந்தப் பகுதியில் வாகன போக்குவரத்துக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டிருக்கிறது. 1972 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பாதுகாப்பு நடவடிக்கையில், ஆரம்பத்தில் தலா 3 வாரங்கள் மட்டுமே சாலை மூடப்பட்டிருந்தது. ஆனால், ஊர்வனவியல் நிபுணர் ஸ்காட் பல்லார்ட் நடத்திய ஆய்வில், இடப்பெயர்வு காலம் நீண்டதாக இருப்பது கண்டறியப்பட்டதை தொடர்ந்து.. சாலை மூடப்படும் நாட்களை வனத்துறை அதிகரித்துள்ளது.

பாம்புகள் குளிர் ரத்த பிராணிகள் ஆகும். அதாவது நம்மை போல.. உடல் வெப்பநிலையை பாம்புகளால் சீரான அளவில் மெயின்டைன் செய்ய முடியாது. குளிர் காலத்தில் மிகவும் மெதுவாக நகர்ந்து போகும். வாகனங்கள் அருகில் வரும் போது அவை அசையாமல் நின்று விடும் குணம் கொண்டவை என்பதால், விபத்துகளில் சிக்குகின்றன.

இந்த பகுதியில் உயிரிழந்த பாம்புகளை ஆய்வாளர்கள் சேகரித்து ஆய்வு நடத்திய போது, அதில் இறந்து கிடந்த நான்கில் ஒரு பங்கு பாம்புகள் வாகனங்களால் அடிபட்டு உயிரிழந்தது தெரியவந்தது. எனவேதான் இந்த வாகன போக்குவரத்துக்கு குறிப்பிட்ட நாட்களில் மட்டும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பகுதியில் 23 க்கும் மேற்பட்ட பாம்பு இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் மூன்று வகை பாம்புகள் மிகவும் விஷம் கொண்டவையாக அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. பாம்புகள் மட்டுமின்றி தவளைகள், தேரைகள், சாலமண்டல்கள், ஆமைகள் மற்றும் பல்லி வகைகளும் இந்த சாலையை பயன்படுத்துகின்றன.

இந்த சாலை மூடப்பட்டிருக்கும் நாட்களில்.. வாகனங்களுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது. வனவிலங்கு ஆர்வலர்கள், சாலையில் நடந்து சென்று பாம்புகளை பார்வையிட அனுமதிக்கப்படுகிறார்கள். ஒரு நாளைக்கு 20 பாம்புகளை வரை இந்த சாலையில் அசால்டாக பார்க்க முடியும். அதே போல பார்வையாளர்கள் பாம்புகளை தொடுவதோ, பிடிப்பதோ அல்லது அருகில் சென்று தொந்தரவு செய்வதோ கூடாது என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. மீறினால், அது தண்டனைக்குரிய குற்றமாக பார்க்கப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+