தனிஷ்க் கொள்ளையில் மீனாட்சி.. கைதான 24 மணி நேரத்தில் நடந்த ஷாக்! தமிழ்நாட்டு நிலைமையை பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுரை பைபாஸ் சாலையில் உள்ள தனிஷ்க் நகைக்கடையில் சுமார் 11 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராம் பிரபலம் மீனாட்சி கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஒருபக்கம் தலைமறைவாக உள்ள முக்கியக் குற்றவாளி நிஷாந்தைப் பிடிக்க 9 தனிப்படைகள் தீவிரம் காட்டி வரும் நிலையில், மறுபக்கம் மீனாட்சியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில்கடந்த 24 மணி நேரமாக நடந்து வரும் வினோதமான மாற்றம் சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

நகைக்கடை கொள்ளைக்குத் திட்டம் தீட்டிக் கொடுத்ததார்

நகைக்கடை கொள்ளைக்குத் திட்டம் தீட்டிக் கொடுத்ததாகவும், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மறைத்து வைக்க உடந்தையாக இருந்ததாகவும் மீனாட்சியை மதுரை போலீசார் நேற்று கைது செய்தனர். கைது செய்யப்படுவதற்கு முன்பு வரை மீனாட்சியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை சுமார் 1 லட்சத்து 52 ஆயிரம் (152K) பேர் பின்தொடர்ந்து வந்தனர்.

Madurai Tanishq Heist Arrested Influencer Meenakshi Gains 12 000 New Instagram Followers Overnight

ஆனால், அவர் ஒரு மெகா நகைக்கடை கொள்ளை வழக்கில் கைதாகிச் சிறைக்குச் சென்ற செய்தி வெளியான பிறகு, அவரது பக்கத்தைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை குறையாமல், மாறாக வேகமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஒரே நாளில் சுமார் 12 ஆயிரம் பேர் புதிதாக அவரைப் பின்தொடரத் தொடங்கியதால், தற்போது அவரது ஃபாலோயர்ஸ் எண்ணிக்கை 1 லட்சத்து 64 ஆயிரத்தைத் (164K) தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது.

இந்தச் சம்பவம் இணையவாசிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்துப் பலரும் தங்களது ஆதங்கத்தைச் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

எகிறும் மீனாட்சி பின்தொடர்பாளர்கள்

"நேற்று 152K ஃபாலோயர்களுடன் இருந்த ஒரு இன்ஸ்டாகிராம் பிரபலம், நகைக்கடை கொள்ளை வழக்கில் கைதானார். இன்று பார்த்தால் அவரது ஃபாலோயர்கள் எண்ணிக்கை 164K ஆக உயர்ந்துள்ளது. அவர் ஒரு திருட்டு வழக்கில் சிக்கியவர் என்று தெரிந்த பிறகும், 12 ஆயிரம் பேர் புதிதாக அவரை 'ஃபாலோ' செய்திருக்கிறார்கள். இது என்ன மாதிரியான மனநிலை? எதற்கெடுத்தாலும் விளம்பரத்தையும், பரபரப்பையும் மட்டுமே தேடும் போக்கு எங்கே போய் முடிகிறது?" என்று நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

தமிழ்நாடு எங்கே செல்கிறது

பெரும்பாலானோர் வெறும் ஆர்வக்கோளாறாலும், மீனாட்சியின் பழைய வீடியோக்கள் மற்றும் பதிவுகளைப் பார்ப்பதற்காகவும், இனி அந்தப் பக்கத்தில் என்ன நடக்கிறது என்பதை வேடிக்கை பார்ப்பதற்காகவும் அவரைப் பின்தொடரத் தொடங்கியுள்ளனர். ஆனால், ஒரு குற்றச் செயலில் ஈடுபட்ட நபருக்கு இப்படியொரு கவனம் கிடைப்பதும், அவரது சமூக வலைத்தளப் பக்கம் பிரபலமடைவதும் தவறான முன்னுதாரணமாகிவிடும் எனப் பலரும் எச்சரிக்கின்றனர்.

அதே சமயம், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள யூடியூபர் நிஷாந்தைப் பிடிக்கும் பணியைப் போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். ஏற்கனவே திருப்பூரில் வைத்து முன்பின் தெரியாத ஒருவரின் செல்போனில் இருந்து மீனாட்சிக்கு நிஷாந்த் போன் செய்திருந்தார். தற்போது மீனாட்சி கொடுத்த புதிய தகவலையும், செல்போன் நெட்வொர்க் சிக்னல்களையும் ஒப்பிட்டுப் பார்த்ததில், நிஷாந்த் பதுங்கியுள்ள இடத்தை தனிப்படை போலீசார் கிட்டத்தட்ட நெருங்கிவிட்டனர். 9 தனிப்படைகளும் தீவிரமாகக் களமிறங்கியுள்ளதால், எந்த நேரத்திலும் நிஷாந்த் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே மாடக்குளம் கண்மாய் பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 5 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள நகைகளை மீட்கவும், நிஷாந்தைக் கைது செய்யவும் தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+