சென்னை கொடுங்கையூரில் பட்டப்பகலில் பரபரப்பு.. கண்டக்டர் காதை கடித்து துப்பிய இளைஞர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கொடுங்கையூரில் அரசு பேருந்தின் தற்காலிக நடத்துனரை பட்டப்பகலில் இளைஞர்கள் கத்தியால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒன்று சேர்ந்து இளைஞர்கள் தாக்கியதில் அவரது காதையும் கடித்து துப்பியுள்ளனர். படுகாயமடைந்த நடத்துனர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடத்துனரை இளைஞர்கள் சரமாரியாக தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கொடுங்கையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பேருந்து நிலையம் ஒன்றில் வழக்கம்போல் பயணிகள் பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது பஸ் ஒன்று பேருந்து நிலையத்தில் வந்து நின்றதும் திடீரென நாலாபுறமும் இருந்து ஓடி வந்த இளைஞர்கள் சிலர் பேருந்து நடத்துனரை சரமாரியாக தாக்கினர். பஸ்சில் இருந்து வெளியே இழுத்து தாக்கினர்.

Chennai Kodungaiyur Youths bite off a bus conductor ear

இதில் ஒரு இளைஞர் மட்டும் தான் வைத்திருந்த கத்தியால் நடத்துனரை வெட்டினார். ஒருவர் நடத்துனரின் காதை கடித்து துப்பியுள்ளார். இதனால் அங்கிருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து இளைஞர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். பட்டப்பகலில் பயணிகள் கண் முன்னே இளைஞர்கள் நடத்துனரை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சம்பவம் குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

இதில், முன் விரோதம் காரணமாக இந்த சம்பவம் அரங்கேறியது தெரியவந்தது. மணலி அன்னை அவென்யூ நகரை சேர்ந்தவர் நித்யானந்தா (வயது 26). கண்ணதாசன் நகர் முதல் அண்ணா சதுக்கம் வரையிலான அரசு மினி பேருந்தில் தற்காலிக நடத்துனராக பணிபுரிந்து வருகிறார். வழக்கம்போல் பணிக்கு வந்து இருந்த போது தான் 5-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வந்து தாக்கியுள்ளனர்.

கடந்த தேவர் ஜெயந்தியின் போது நித்தியானந்தாவின் நண்பர் ஒருவர் இந்த கும்பலை சேர்ந்தவர்களை தாக்கியுள்ளார். இதற்கு பலி வாங்கவே 5-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நித்தியானந்தாவின் நண்பருக்கு பதில் இவரை தாக்கியுள்ளனர். இதற்காக சென்னையில் ரூம் எடுத்து இவர்கள் தங்கி இருந்ததும் தெரியவந்துள்ளது. அவர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

இதற்கிடையே பேருந்து நிலையத்தில் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து நடத்துனரை இழுத்து போட்டு சரமாரியாக தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பதை பதைக்க வைத்துள்ளது. மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் இடத்தில், தட தடவென ஓடி வரும் இளைஞர்கள் நடத்துனரை சரமாரியாக தாக்கியதோடு, கத்தியாலும் வெட்டியுள்ளனர். இளைஞர்கள் தாக்குதலில் படுகாயமடைந்த நடத்துனர் தற்போது அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+