மவுனம் காப்பது நடுநிலை இல்லை.. ஈரான் விவகாரம்: உங்க நிலைப்பாடு என்ன? மோடிக்கு சோனியா காந்தி கேள்வி
டெல்லி: ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பிரதமர் மோடி மவுனம் காத்து வருவதை சோனியா காந்தி சாடியுள்ளார். மவுனமாக இருப்பது நடுநிலை என்று கருத முடியாது என்றும், மோடி அரசின் மவுனம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறார்.
ஈரான் மீது கடந்த மாதம் 28 ஆம் தேதி திடீரென இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா கூட்டாக இணைந்து தாக்குதல் நடத்தியது. இதில், அந்நாட்டின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டார். கமேனி கொலையில் ஐ.நா. சாசன விதிகளை மீறப்பட்டுள்ளதால், இந்தியாவின் மவுனம் நடுநிலையானதல்ல என்று சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

சோனியா காந்தி பேச்சு
இது தொடர்பாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் சோனியாக காந்தி எழுதிய கட்டுரை வெளியாகி இருக்கிறது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:- கடந்த 28 ஆம் தேதி ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் சேர்ந்து கூட்டு தாக்குதல் நடத்தி அந்நாட்டின் உச்ச தலைவர் கமேனியை கொலை செய்து இருக்கிறார்கள்.
இதனை அடுத்த நாள் ஈரான் அரசு உறுதிப்படுத்தியது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்த நிலையில் திடீரென பதவியில் இருக்கும் ஒரு நாட்டின் தலைவரை இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து கொலை செய்துள்ளது. ஐநா விதியை மீறி நடந்த இந்த தாக்குதல் சர்வதேச அளவில் மற்ற நாடுகளின் உறவுகளில் சிக்கலை ஏற்படுத்தும்.
இந்தியா மவுனமாக இருப்பது
இந்த விவகாரத்தில் இந்தியா மவுனமாக இருப்பது நடுலையை குறிக்காது. மோடி அரசின் "மௌனம்" குறித்து நாடாளுமன்ற விவாதம் நடத்தப்பட வேண்டும். ஒரு வெளிநாட்டுத் தலைவரைக் குறிவைத்து கொல்லப்பட்ட சம்பவம் குறித்து இந்தியா தெளிவான கருத்து வெளியிடாதது, "நமது வெளியுறவுக் கொள்கையின் திசை மற்றும் நம்பகத்தன்மை குறித்து சந்தேகங்களை எழுப்புகிறது.
அடிப்படை கொள்கையை மீறுவதாகும்
ஐக்கிய நாடுகள் சாசனத்தின் பிரிவு 2(4)- "எந்தவொரு நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு அல்லது அரசியல் சுதந்திரத்திற்கு எதிராக சக்தியை அச்சுறுத்துவதையோ அல்லது பயன்படுத்துவதையோ தடை செய்கிறது". ஒரு நாட்டின் (அமர்வில் உள்ள) தலைவரைக் கொல்வது இக்கொள்கைகளின் அடிப்படையையே மீறுவதாகும்.
"இத்தகைய செயல்கள் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவால், கொள்கை ரீதியான ஆட்சேபனை இல்லாமல் கடந்து செல்லப்பட்டால், சர்வதேச விதிமுறைகளின் சிதைவு சாதாரணமாக்கப்படுவது எளிதாகிவிடும்" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் 2001 ஏப்ரலில் தெஹ்ரான் சென்றார். "நாகரீக மற்றும் சமகால ரீதியிலான இந்தியாவின் ஆழமான உறவுகளை ஈரானுடன் நேசத்துடன் மீண்டும் உறுதிப்படுத்திய அவர் தற்போது, "அத்தகைய நீண்டகால உறவுகள் நமது தற்போதைய அரசுக்குப் பொருத்தமில்லாததாகத் தெரிகிறது" என்று சோனியா காந்தி வருத்தம் தெரிவித்தார்.
மேலும் அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலுக்கு முன்பாக 48 மணி நேரத்திற்கு முன்பு இஸ்ரேல் சென்று பிரதமர் மோடி பெஞ்சமின் நெதன்யாகு அரசுக்குத் தமது ஒருமித்த ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியதாகவும் குறிப்பிட்டார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications