Idhayam Murali: இதயம் முரளி எப்படி இருக்கு? இதுதான் பிளஸ், மைனஸ்.. ப்ளூ சட்டை மாறன் இப்படி சொல்லிட்டாரே!
சென்னை: நடிகர் அதர்வா நடிப்பில் ஜூலை பத்தாம் தேதி ரிலீசான இதயம் முரளி படம் எப்படி இருக்கிறது என்பது பற்றி ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் கொடுத்து இருக்கிறார். இது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. இந்த படத்தில் ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர், டிராவிட், பகத் பாஸில் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். ஆனாலும் இந்த படத்தில் என்ன நிறை குறை இருக்கிறது என்று ப்ளூ சட்டை மாறன் வழக்கம்போல ஓபனாகவே பேசி இருக்கிறார்.
ப்ளூ சட்டை மாறன் ரிவ்யூ
ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய விமர்சனத்தில் பேசும்போது, இதயம் முரளி படத்தின் கதை என்று எடுத்துக்கொண்டால் ரொம்பவும் சுமாரான கதை தான். ஒரு நல்ல திரைக்கதை என்பது கதையை அடுத்த கட்டத்திற்கு கொண்டுட்டு போக வேண்டும். அதுதானே சரியான திரை கதையாக இருக்கும்? ஆனால் இந்த படத்தில் பார்த்தீங்கன்னா அடுத்தடுத்த கட்டத்திற்கு கதை நகரவே இல்லை.

ஓபனாக சொல்லணும்னா கதை நகர்ல.. லொகேஷன் மட்டும்தான் மாறிக்கிட்டே இருக்கிறது. இந்த லொகேஷனில் ஒரு பத்து பேர் ஒன்றாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். பிறகு அவர்களே பேசி அவர்களே காமெடி என்று சிரித்துக் கொள்கிறார்கள். பார்க்கிற நமக்கு காமெடியாக அது தெரியுமா என்பது கேள்விக்குறியாக தான் இருக்கிறது.
இதயம் முரளி படம் ரிவ்யூ
படத்திற்கு இதயம் முரளி என்று பெயர் வைத்திருக்கிறார்கள் ஆனால் இதயம் படத்தில் கதாநாயகன் காதலியிடம் கடைசி வரை காதலை சொல்லவே மாட்டாரு. அதனாலதான் அந்த டைட்டில் அந்த படத்திற்கு வைத்தார்கள். ஆனால் இதயம் படம் வெளியான காலகட்டம் வேற.. இப்ப இருக்குற காலகட்டம் அதுவா? இப்போதெல்லாம் ஒரு பொண்ண பிடித்து இருந்தால் சொல்ல வேண்டியது தானே?
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்
காதலிக்கிற பையனுக்கு சொல்ல பயமா இருந்தா கூட கூடவே நண்பர்களும் இருக்கிறாங்க அவங்க மூலமாவது சொல்லலாம். ஆனால் இவங்க என்னன்னா நாங்க காதலை சொல்லவே மாட்டோம் என்று கங்கணம் கட்டி வைத்திருக்கிறார்கள் போல. சின்ன சின்ன கதாபாத்திரத்திற்கும் நல்ல மக்களுக்கு தெரிந்த நடிகர்களை நடிக்க வைத்து ஒவ்வொரு காட்சிக்கும் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து டயலாக்குகள் பேச வைத்து படத்தின் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் போயிட்டார்கள்.

இங்க கேரக்டருக்கு தான் முக்கியத்துவம் இருக்கிறது. அதுபோல படத்தின் குறிப்பிடும் படி என ஒரு சில காட்சிகள் மட்டும் நல்லா இருக்கு. வழக்கம்போல ஃபகத் ஃபாஸிலை கூட்டிட்டு வந்து அவர வேஸ்ட் பண்ணிட்டாங்க. படத்தின் திரைக்கதை தான் மோசமாய் இருந்ததே தவிர படத்தை உட்கார்ந்து பார்ப்பதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் ஒளிப்பதிவு தான்.
இதயம் முரளி வசூல் நிலவரம்
படத்தை நல்ல செலவு செய்து எடுத்து இருக்கிறார்கள். ஆனால் கேரக்டர்களுடன் தான் கனெக்ட் ஆக முடியல என்று ப்ளூ சட்டை மாறன் ரிவ்யூ செய்து இருக்கிறார். இப்படி இருக்கையில் இதயம் முரளி படம் முதல் நாள் ப்ரீ புக்கிங்கில் மட்டும் சுமார் 52 லட்சத்திற்கு மேல் வசூல் செய்ததாம். மொத்தமாக முதல் நாளில் சுமார் 2.19 கோடிகள் இந்திய அளவில் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும் வார இறுதி நாளான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வசூல் நிலவரம் கூடுமா? என்பது பொறுத்திருந்து பார்க்கலாம்.













Click it and Unblock the Notifications