ராஜ் சத்யனை கட்டம் கட்டிய எடப்பாடி பழனிசாமி.. தவெக உடன் பேச்சு.. நோ சொன்ன நிர்மல்குமார்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: அதிமுக ஐடி விங் செயலாளர் ராஜ் சத்யன் மீது எடப்பாடி பழனிசாமி அதிருப்தியில் இருந்து வருகிறார். மிதுன் பழனிசாமி குறித்து ராஜ் சத்யன் பதிவிட்ட ட்வீட் எடப்பாடி பழனிசாமியை டென்ஷனாக்கியது. இதனை அந்த பதிவை நீக்கிவிட்ட ராஜ் சத்யன், உடனடியாக தவெக உடனும் பேச்சுவார்த்தையை தொடங்கினார். ஆனால் அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் மதுரை அதிமுகவினருக்கு நோ சொல்லி இருக்கிறார். இதனால் தவெக தலைமையும் ராஜ் சத்யனை கண்டுகொள்ளவில்லை என்று தெரிய வந்துள்ளது.

அண்மைக் காலமாக அதிமுகவில் இருந்து தவெகவுக்கு தாவுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒவ்வொரு வாரமும் தவெகவின் தலைமை அலுவலகத்தில் இணைப்பு விழா ஜரூராக நடந்து வருகிறது. ஆனால் மதுரை மாவட்டத்தில் இருந்து அதிமுகவின் சீனியர் நிர்வாகிகள் யாரும் தவெக பக்கம் செல்ல ஆர்வம் காட்டவில்லை. ஆர்பி உதயகுமார் முதல்வர் விஜய்யை கடுமையாக சாடி வருகிறார்.

AIADMK

செல்லூர் ராஜூ மற்றும் ராஜன் செல்லப்பா ஆகியோர் சைலண்ட் மோடுக்கு சென்றுவிட்டனர். ஆனால் ராஜன் செல்லப்பா மகன் ராஜ் சத்யன் மீது எடப்பாடி பழனிசாமி அதிருப்தியில் இருப்பது தெரிய வந்துள்ளது. அதிமுகவுக்குள் மிதுன் பழனிசாமியை கொண்டு வர வேண்டும் என்று அதிமுகவினர் பலரும் பேசத் தொடங்கினர்.

இதற்கு எடப்பாடி பழனிசாமி முற்றுப்புள்ளி வைப்பதற்கு முன் ராஜ் சத்யன், மிதுன் பழனிசாமி குறித்து கடுமையான ஒரு பதிவை வெளியிட்டார். ஆனால் பின் விளைவுகள் நேரிடும் என்று எண்ணிவிட்டு அந்த பதிவை நீக்கினார். இதனால் ராஜ் சத்யனின் செயல்கள் எடப்பாடி பழனிசாமியை டென்ஷனாக்கியதாக தெரிகிறது.

இதன் காரணமாகவே அதிமுக ஐடி விங்கில் இனி ஏஐ தொழில்நுட்பம் தெரிந்தவர்களுக்கு மட்டுமே பொறுப்பு என்று எடப்பாடி பழனிசாமி பேசியதாக சொல்லப்படுகிறது. தாம் கட்டம் கட்டப்படுவோம் என்று முன்கூட்டியே அறிந்திருந்த ராஜ் சத்யன், உடனடியாக தவெக நிர்வாகிகளை அணுகியுள்ளார். அவர்களும் தவெக தலைமையிடம் சொல்லிவிட்டு, பொறுப்பு அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமாரிடம் ஒரு வார்த்தை கூறியுள்ளனர்.

ஆனால் தனது தொகுதியின் முக்கியப் புள்ளியை கட்சியில் சேர்த்தால், பின்னாட்களில் நமக்கு எதிராகவே திரும்பிவிடும் என்று எண்ணிய சிடிஆர் நிர்மல்குமார், ராஜ் சத்யனை மட்டும் சேர்க்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். இதனால் ராஜ் சத்யனை இணைக்க தவெக தயங்கி இருக்கிறது. இதனால் அடுத்தக் கட்டமாக என்ன செய்யலாம் என்று ராஜ் சத்யன் ஆலோசனையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+