காலையிலேயே படையெடுத்த அமலாக்கத்துறை.. திக்குமுக்காடிய பினராயி விஜயன்.. கேரளாவை அதிரவைத்த ரெய்டு
திருவனந்தபுரம்: கேரளா முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறையினர் ரெய்டு நடத்தி வருகிறார்கள். சட்டவிரோத பணபரிமாற்றம் வழக்கில் அமலாக்கத்துத்துறை ரெய்டு நடத்தி வருகிறார்கள். கேரளா சட்டமன்ற தேர்தல் முடிந்த சில வாரங்களிலேயே ரெய்டு நடந்திருப்பது அந்த மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. சிபிஎம் ஆட்சியை இழந்து எதிர்க்கட்சியாகியுள்ளது. முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயன் தர்மடம் தொகுதியில் வெற்றி பெற்றார். 10 வருடங்களாக முதலமைச்சராக இருந்த பினராயி விஜயன் ஆட்சியை இழந்த வருத்தத்தில் உள்ளார். அவருக்கு மேலும் ஒரு அதிர்ச்சியை கொடுத்துள்ளனர்.

சட்டவிரோத பணபரிமாற்றம்
அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் கேரளாவில் 10 இடங்களில் ரெய்டு நடத்தி வருகிறார்கள். அதில் பினராயி விஜயன் வீடு தான் ஹாட் ஸ்பாட். பினராயி விஜயனின் மகள் வீணா எக்ஸாலாஜிக் சொல்யூசன் என்கிற நிறுவனத்தை நடத்தி வருகிறார். அந்த நிறுவனத்திற்கும், கொச்சின் மினரல்ஸ் ருடைல் லிமிட்டெட் நிறுவனத்திற்கும் இடையே சட்ட விரோத பண பரிமாற்றம் நடைபெற்றதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக வீணா உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 2017 - 2020 காலகட்டத்தில் கொச்சின் மினரல்ஸ் நிறுவனத்திடம் இருந்து வீணாவின் நிறுவனத்திற்கு ரூ.1.72 கோடி பரிமாற்றமாகியுள்ளது. இதேபோல 2023 ஆம் ஆண்டில் ரூ.2.70 கோடி பரிமாற்றமாகியுள்ளது. இந்த வழக்கில் வீணா சிக்கியது கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ரெய்டு காரணம்
அமலாக்கத்துறையின் வழக்கை ரத்து செய்ய கோரி, கொச்சின் மினரல்ஸ் நிறுவனம் கேரளா உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுவை கேரளா நீதிமன்றம் தள்ளுபடி செய்தனர். இது நடந்த சில நாட்களிலேயே ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. பினராயி விஜயன், அவர் மகள் வீணா, வீணாவின் கணவர், முன்னாள் அமைச்சர் முகமது ரியாஸ், கொச்சின் மினரல்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறார்கள். இது கேரளா அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications