கடைசி 6 இன்னிங்ஸில் வெறும் 79 ரன்கள்.. வேலையை காட்டிய இஷான் கிஷன்.. கொஞ்சமும் பொறுப்பு இல்லை!

Subscribe to Oneindia Tamil

பிரிஸ்டோல்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டி20 போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் இஷான் கிஷன் 6 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறார். கடைசியாக ஆடிய 6 இன்னிங்ஸில் இஷான் கிஷன் வெறும் 79 ரன்களை மட்டுமே சேர்த்திருப்பது ரசிகர்களிடையே கடுமையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டி20 போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்தார். வழக்கம் போல் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படவில்லை. இந்திய அணி மொத்தமாக 8 இடதுகை பேட்ஸ்மேன்களுடன் களமிறங்கியது.

Ishan Kishan

இந்திய அணிக்காக வைபவ் சூர்யவன்ஷி - அபிஷேக் சர்மா கூட்டணி தொடக்கம் கொடுத்தது. டங்க் வீசிய 2வது ஓவரிலேயே வைபவ் சூர்யவன்ஷி ஒரு பவுண்டரி, சிக்ஸ் விளாசி அசத்தினார். ஆனால் ஆர்ச்சர் வீசிய அடுத்த ஓவரிலேயே 15 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். தொடர்ந்து வந்த அனுபவ வீரரான இஷான் கிஷன் 6 பந்துகளில் 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இஷான் கிஷன் மீண்டும் ஒருமுறை ஷார்ட் பாலுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்துள்ளார். இஷான் கிஷன் பேட்டிங் செய்ய களமிறங்கினாலே கொஞ்சம் நெஞ்சை நோக்கி ஷார்ட் பாலை வேகமாக வீசினால் போதும். அவராகவே தூக்கி அடித்து விக்கெட்டை கொடுத்துவிடுவார் என்று பேசும் வகையில் அவரது ஆட்டம் அமைந்திருக்கிறது.

கடைசியாக ஆடிய 6 இன்னிங்ஸில் இஷான் கிஷன் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. அயர்லாந்து டி20 தொடர் மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 4 இன்னிங்ஸ் சேர்த்து மொத்தமாக 6 இன்னிங்ஸில் 79 ரன்களை மட்டுமே சேர்த்திருக்கிறார். ஒரேயொரு இன்னிங்ஸில் மட்டும் 40 பந்துகளில் 49 ரன்கள் எடுத்தார். மற்ற போட்டிகளில் மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி இருக்கிறார்.

இதன் மூலமாக இஷான் கிஷன் இந்திய மைதானங்களில் மட்டுமே சிறப்பாக பேட்டிங் செய்வார் என்ற விமர்சனங்கள் அதிகரித்துள்ளது. கொஞ்சம் கூட பிட்ச் மற்றும் சூழலுக்கு ஏற்றவாறு விளையாட வேண்டும் என்ற எண்ணமே இஷான் கிஷனிடம் இல்லை. தேவையே இல்லாமல் ஷார்ட் பாலை அட்டாக் முயன்று விக்கெட்டை கொடுப்பது தொடர் கதையாகி வருகிறது. இதனால் இஷான் கிஷனை பெஞ்ச் செய்ய வேண்டும் என்ற பேச்சுகளும் எழுந்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+