TVK Vijay Karur Visit LIVE: கரூர் நிகழ்ச்சிகள் நிறைவு- சென்னை புறப்பட்டார் விஜய்
Subscribe to Oneindia Tamil
திருச்சி: கரூரில் அரசு நிகழ்ச்சி மற்றும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு சென்னை புறப்படுவதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு சாலை மார்க்கமாக புறப்பட்டார் முதல்வர் விஜய்.

விருந்தினர் மாளிகை செல்லும் விஜய்
மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியைத் தொடர்ந்து, கரூர் - சேலம் புறவழிச்சாலை, கோவை சாலை, பழைய பேருந்து நிலைய ரவுண்டானா, உழவர் சந்தை, திருமாநிலையூர், சுங்ககேட், தான்தோன்றிமலை வழித்தடங்களில் சாலை வழியாக பயணித்து, மாவட்ட ஆட்சியர் திட்ட வளாகத்தில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு முதல்வர் விஜய் செல்கிறார்.
இன்னும் சில நாட்களில் விஜய் அரசின் விஸ்வரூபத்தை பார்ப்பீர்கள்.. வாய தொறங்க சிஎம் என்கிறார்கள்.. ஆனால் வாயை திறந்தால் ஓடிவிடுகிறார்கள்.. 5 நிமிடம் பேசினாலே கொளத்தூரில் கொத்து பரோட்டா போடப்பட்டுள்ளது.. திமுக, அதிமுக இரண்டும் கூட்டுக் களவாணிகள்.. எனது மனதை விட்டு கரூர் நீங்கவே நீங்காது.. தவெகவுக்கு எதிராக நடந்த சூழ்ச்சியை வரும் தலைமுறைக்கும் தெரியப்படுத்த வேண்டும். அதனால் கரூரில் தவெக சார்பாக ஒரு நினைவுச் சின்னம் அமைக்கப்படும்: முதல்வர் விஜய்
ஒவ்வொரு முகமூடியாக கிழிகிறது.. திரும்பிய பக்கம் எல்லாம் கதறல்.. கதறல்.. கதறல்.. கட்சி நிதி என்றதுமே எடுத்தார்கள் பாருங்க ஓட்டம்.. குற்றமுள்ள நெஞ்சு தான் குறுகுறுக்கும்.. எந்தக் கட்சி என்று கூட நான் சொல்லவில்லை. எங்க அப்பா பீரோவுக்குள் இல்லை என்பது போல் அவர்களின் செயல்பாடு உள்ளது: முதல்வர் விஜய்
கரூர் சம்பவத்தின் மூளை யார்? கரூரில் என் அக்கா, தங்கைகளை இழந்தேன்.. குழந்தைகளை இழந்தோம்.. அந்த பழியை எங்கள் மீது தூக்கி போட்டீர்கள்.. வாய் இருந்தால் என்ன வேண்டுமானாலும் பேசுவீர்களா? நமக்காக வந்துள்ள மக்களை காக்க வைத்து ஆதாயம் தேடுபவன் நான் அல்ல.. பணமா, ஜனமா என்றால் எனக்கு ஜனம் தான் முக்கியம் - முதல்வர் விஜய்
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் எனக்கு அதிக வலியை தந்தது. எவ்வளவு பெரிய இடத்திற்கு போனாலும் அந்த வலி மாறாது. வாழ்வின் மிகப்பெரிய வலி.. காவல்துறை நினைத்திருந்தால் கரூர் கூட்டத்தை ரத்து செய்திருக்கலாம்.. கரூர் நெடுஞ்சாலையில் இருந்து கூட்டத்திற்கு அழைத்து வந்து காவல்துறை நாடகம் ஆடியது: விஜய்
முதல்வர் விஜய்க்கு வெள்ளி வாளினை பரிசாக வழங்கியுள்ளார் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். தொடர்ந்து, எம்ஜிஆரின் அன்பும், ஜெயலலிதாவின் வீரமும் கொண்டவர் விஜய். தற்போதைய இளைஞர்கள் மட்டுமல்லாமல், அடுத்த தலைமுறை இளைஞர்களும் விஜய்யை கொண்டாடுகிறார்கள். இனி தமிழ்நாட்டில் விஜய்யின் ஆட்சி மட்டும்தான். நிரந்தர முதல்வர் விஜய்.. தமிழகம் தளபதி கையில் தான் உள்ளது என்று எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியுள்ளார்.
கரூர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கரூர் தவெக மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் மேடை ஏற்றப்பட்டுள்ளார். அண்மையில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தவெகவில் இணைந்த நிலையில், மதியழகனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்திருந்தது. ஆனால் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் மதியழகனை மேடையேற்றி தவெக மறைமுகமாக பதில் அளித்துள்ளது
கரூர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர். அப்போது செய்தியாளர்களை வெளியேற்றிய காவல்துறையினரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. ஆனால் எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை. அதுமட்டுமல்லாமல் செய்தியாளர் வரும் பாதையையும் தகரம் வைத்து தவெக அடைத்துள்ளது. இதனால் செய்தியாளர்கள் மற்றும் தவெக நிர்வாகிகளிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து முதலமைச்சர் விஜய் கரூர் புறப்பட்டார். சென்னை விமான நிலையம் செல்லும் அவர், அங்கிருந்து திருச்சி விமான நிலையம் செல்கிறார். பின்னர் திருச்சியில் இருந்து கார் மூலமாக கரூர் செல்ல உள்ளார். அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் காவல்துறையினரால் செய்யப்பட்டுள்ளது.
முதல்வர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி அரங்கிற்குள் செல்ல காலை முதலே நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருக்கின்றனர். பகல் 12 மணியளவில் தான் நிகழ்ச்சி தொடங்கும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், காலை 8.30 மணி முதலே ஏராளமானோர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி அரங்கிற்குள் செல்ல வரிசையில் நிற்கின்றனர்.

கரூர் மாவட்டம் முழுவதும் தவெக கொடிகள், பேனர்கள், போஸ்டர்கள் அடிக்கப்பட்டுள்ளன. அதேபோல் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கும் நுழைவு வாயிலும் வாழை, இளநீர், கரும்பு உள்ளிட்டவை மூலம் அமைக்கப்பட்டுள்ளன. தவெக நிகழ்ச்சியில் இதுவரை இப்படியான வரவேற்பு இருக்காது. வழக்கமாக திமுக மற்றும் அதிமுக நிகழ்ச்சிகளில் தான் இப்படியான வரவேற்புகள் அளிக்கப்படும். இதனால் தவெக கொஞ்சம் கொஞ்சமாக திமுக மற்றும் அதிமுக ஸ்டைலுக்கு மாறி வருவதாக பார்க்கப்படுகிறது.
READ MORE



Click it and Unblock the Notifications
