• search
முகப்பு
 » 
அரசியல்வாதிகள்
 » 
தொல்.திருமாவளவன்

தொல்.திருமாவளவன்

சுயசரிதை

தமிழகத்தைச் சேர்ந்த பிரபல அரசியல்வாதியும், தலித் ஆர்வலருமான தொல்.திருமாவளவன், 15வது மக்களவையின் உறுப்பினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தற்போதையை தலைவர். 1990களில் தலித் தலைவராக உருவாக துவங்கிய இவர், 1999 தேர்தலில் போட்டியிட்டதன் மூலம் அரசியலில் நுழைந்தார். தொடக்கத்தில் வேதியியல் படித்த திருமாவளவன், மெட்ராஸ் சட்டக் கல்லூரியில் சட்டம் படிப்பதற்கு முன்பாக குற்றவியல் பாடத்தில் முதுகலை பட்டம் படிக்க சென்றார்.பின்னர் அரசு தடவியல் துறையில் அறிவியல் உதவியாளராக பணியாற்ற துவங்கினார். 1999 மற்றும் 2004 தேர்தலில் போட்டியிட்ட திருமாவளவன், இரண்டிலும் தோல்வியை சந்தித்தார். 2009தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினரானார். மற்ற அரசியல் தலைவர்களை போலவே இவரும், தமிழ்நாட்டில் சாதிக்கலவரம் மற்றும் வகுப்புவாத ஏற்றத்தாழ்வு போன்றவற்றை ஏற்படுத்துவதாக சர்ச்சைகளில் சிக்கினார்.

தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் தொல்.திருமாவளவன்
பிறந்த தேதி 17 Aug 1962 (வயது 56)
பிறந்த இடம் அங்கனூர், அரியலூர்
கட்சி பெயர் Viduthalai Chiruthaigal Katchi
கல்வி Post Graduate
தொழில் அரசியல்வாதி மற்றும் தலித்ஆர்வலர்
தந்தை பெயர் தொல்காப்பியன்
தாயார் பெயர் பெரியம்மாள்
துணைவர் பெயர் இல்லை
துணைவர் தொழில் இல்லை

தொடர்பு

நிரந்தர முகவரி கீழத்தெரு, அங்கனூர், சன்னாசிநல்லூர் நகரம்
தற்காலிக முகவரி கீழத்தெரு, அங்கனூர், சன்னாசிநல்லூர் நகரம்
தொடர்பு எண் 9841098439
மின்னஞ்சல் thirumaa@hotmail.com
இணையதளம் https://www.thirumaa.com/
சமூக வலைதளங்கள்

சுவாரஸ்ய தகவல்கள்

1)இவர் தமிழகத்தைச் சேர்ந்த பிரபல அரசியல்வாதி மற்றும் தலித் ஆர்வலர்
2)பிரபல எழுத்தாளரான இவர், ஈழம் என்றால் புலிகள்,புலிகள் என்றால் ஈழம், அத்துமீறு, தமிழர்கள் இந்துக்களா? உள்ளிட்ட பல்வேறு ஊக்கமூட்டும் புத்தகங்களை தமிழில் எழுதியுள்ளார்.
3)அரசு தடவியல் துறையில் அறிவியல் உதவியாளராக பணியாற்றிய நிலையில், 1999 தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது பதவியை இராஜினாமா செய்தார்.
4)கலகம், அன்புதோழி உள்ளிட்ட சில தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அரசியல் காலவரிசை

  • 2016
    2016 தமிழக சட்டமன்ற தேர்தலில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிட்ட திருமாவளவன், அதிமுகவின் முருகுமாறனிடம் தோல்வியடைந்தார்.
  • 2009
    2009 பொதுத்தேர்தலில் மூன்றாவது முறையாக சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டார். இம்முறை திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றிபெற்று முதல்முறையாக நாடாளுமன்ற உறுப்பினரானார்.
  • 2006
    2006 தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து 11 தொகுதியில் போட்டியிட்ட விசிக 2 தொகுதிகளில் வெற்றிபெற்றது. மேலும் அதே ஆண்டில் 2 மார்ச் 2006அன்று இந்திய தேர்தல் ஆணையத்தால் அக்கட்சி பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சியாக அங்கீகாரம் பெற்றது.
  • 2004
    2004 தேர்தலில் ஐக்கிய ஜனதாதளத்துடன் கூட்டணி வைத்து மீண்டும் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட திருமாவளவன், 2.57லட்சம் வாக்குகள் பெற்று குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
  • 2001
    விடுதலை சிறுத்தைகள் கட்சி திராவிட முன்னேற்ற கழகத்துடன் கூட்டணி அமைத்து 8 தொகுதிகளில் போட்டியிட்டது. திருமாவளவன் மங்களூர் தொகுதியில் இருந்து முதன்முறையாக சட்டமன்றத்திற்கு தேர்வானார்.
  • 1999
    1999 பொதுத்தேர்தல் வரை தேர்தலை புறக்கணித்துவந்த டிபிஐ, 1999ல் தேர்தலில் போட்டியிட முடிவெடுத்தது அக்கட்சிக்குள்ளேயே சலசலப்பை உருவாக்கியது. அப்போது ஜி.கே. மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸ் உடன் கூட்டணி அமைந்த திருமாவளவன் மூன்றாவது அணியாக அடையாளப்படுத்திக்கொண்டார். இறுதியில் 2009 தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் வெற்றிபெற்று தனது முக்கியத்துவத்தை உயர்த்திக்கொண்டார்.
  • 1990
    டிபிஐயின் தலைவராக தேர்வானார். பின்னர் அந்த இயக்கத்திற்கு புதிய கொடியை வடிவமைத்தார்.
  • 1988
    தமிழகத்தின் தென்மாவட்ட நகரமான மதுரையில் அரசு தடவியல் துறையில் பணியாற்றினார்.
  • 1982
    இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இராணுவம் செய்யும் அட்டூழியங்களை இலங்கை அகதிகள் தெரிவித்ததை கண்டு, மாணவராக இருக்கும்போதே 1982ல் அரசியலில் ஆர்வத்தை வளர்த்துக்கொண்டார்.

முந்தைய வரலாறு

  • 1999
    1999 தேர்தலில் போட்டியிடுவதற்காக, ஆகஸ்ட் 1999ல் தனது பணியை இராஜினாமா செய்தார்.
  • 1997
    அதிகரித்த அரசியல் செயல்பாடுகளால் அரசு பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
  • 1990
    தலித் பாந்தர்ஸ் ஆப் இந்தியா கட்சியின் தமிழக தலைவர் மலைச்சாமியின் மறைவிற்கு பிறகு, அதே ஆண்டில் தலைவராக திருமாவளவன் தேர்வானார்.
  • 1988
    தமிழகத்தின் தென்மாவட்ட நகரமான மதுரையில் அரசு தடவியல் துறையில் பணியாற்றினார்.
நிகர மதிப்பு66.88 LAKHS
சொத்துக்கள்73.52 LAKHS
கடன்கள்6.63 LAKHS

Disclaimer: The information relating to the candidate is an archive based on the self-declared affidavit filed at the time of elections. The current status may be different. For the latest on the candidate kindly refer to the affidavit filed by the candidate with the Election Commission of India in the recent election.

சமூக வலைதளம்

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more