அடேங்கப்பா.. ஜம்மு காஷ்மீரில் அப்படியே சரிந்த பயங்கரவாத செயல்கள்! தேர்தலுக்கு பாசிடிவ் சிக்னல்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் சமீபத்தில் பாதுகாப்புப்படை வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், கடந்த 2018 தொடங்கி 2024 வரை ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத செயல்கள் குறைந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கமளித்திருக்கிறது.
கடந்த 2019ம் ஆண்டு ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் ஜம்மு காஷ்மீரிலிருந்து வழக்கத்திற்கு மாறான அரசியல் நடவடிக்கைகள் குறித்த செய்திகள் வெளியாகியிருந்தன. குறிப்பாக அம்மாநிலத்தின் அரசியல் தலைவர்கள், முன்னாள் முதல்வர்கள் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சுற்றுலா பயணிகள் அங்கிருந்து வெளியேறுமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டது. இறுதியாக ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி பாஜக தலைமையிலான மத்திய அரசு அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

ஆகஸ்ட் 5 முதல் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்து ரத்து செய்யப்படுவதாகவும், ஜம்மு, காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. அன்று முதல் ராணுவம் சில அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியது. இப்படியாக ஏறத்தாழ 5 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இங்கு பயங்கரவாத செயல்கள் குறைந்திருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
கடந்த 2018 தொடங்கி 2024 வரை கல்வீச்சு, கடையடைப்பு, பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையேயான என்கவுன்ட்டர் சம்பவங்கள் ஆகியவை வெகுவாக குறைந்திருக்கிறது என்று உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
"2018ல் ஜம்மு காஷ்மீரில் 1,328 கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன. இதே 2023ம் ஆண்டில் இதுபோன்று எந்த சம்பவமும் நடக்கவில்லை. இந்த ஆண்டும் இதுவரை இப்படி எதுவும் நடக்கவில்லை. 2018ல் அரசின் அறிவிப்புகளுக்கு எதிராக 52 கடையடைப்பு சம்பவங்கள் நடந்தன. ஆனால், கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் எதுவும் பதிவாகவில்லை.
பயங்கரவாத சம்பவங்களை பொறுத்த அளவில், 2018ல் 228ஆக பதிவானது. நடப்பாண்டில் ஜூலை 11ம் தேதி வரை 11 சம்பவங்கள் மட்டுமே நடந்திருக்கிறது. என்கவுண்டர்கள் / பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை பொறுத்த அளவில், 2018ல் 189 என்கவுன்டர்கள் நடந்தன. இந்த ஆண்டு வெறும் 21 மட்டுமே நடந்திருக்கிறது.
அதேபோல பாதுகாப்புப்படையினர் தரப்பில் ஏற்பட்ட உயிரிழப்புகளும் கணிசமாக குறைந்திருக்கின்றன. 2018ம் ஆண்டில், 91 உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டன. இந்த ஆண்டில் தற்போது வரை 10 மட்டுமே பதிவாகியுள்ளது. 2018ல் 55 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதே 2023 மற்றும் 2024 ஆகிய இரண்டு ஆண்டிலும் வெறும் 14 பேர் மட்டுமே கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
இப்படி முன்னேற்றங்கள் இருந்தாலும், இந்த ஆண்டு சுற்றுலாத்துறை கொஞ்சம் சரிவு காணும்" என்று உள்துறை தெரிவித்திருக்கிறது. அதாவது
கடந்த 2020ல் ஜம்மு காஷ்மீருக்கு 3,470,834 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இந்த எண்ணிக்கை 2021ல் 1,13,148,884 என மூன்று மடங்காக அதிகரித்தது.
2022ல் 1,88,643,332 வருகைகள் பதிவு செய்யப்பட்டன. 2023ல் இந்த எண்ணிக்கை 2,11,246,674 ஆக உயர்ந்தது. இருப்பினும், 2024 ஜூன் வரை 1,08,410,009 பேர் மட்டுமே வந்திருக்கிறார்கள். கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இது குறைவுதான். சமீபத்திய பயங்கரவாதத் தாக்குதல்களின் தாக்கத்தால் இந்த சரிவு ஏற்பட்டிருக்கிறது என்று உள்துறை தெளிவுபடுத்தியுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படவில்லை. இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இப்படி இருக்கையில் இங்கு பயங்கரவாத நடவடிக்கைகள் குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருப்பது, தேர்தலுக்கான பாசிட்டிவ் விஷயமாக பார்க்கப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications