Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின் ஒரு சிறந்த அரசியல் பாரம்பரியத்தைக் கொண்டவர். தமிழக முன்னாள் முதலமைச்சர் மறைந்த எம் கருணாநிதியின் பேரனும், தற்போதைய திமுக தலைவர் மு.
By Rashmi | Saturday, October 7, 2023, 02:49:08 PM [IST]

உதயநிதி ஸ்டாலின் சுயசரிதை

உதயநிதி ஸ்டாலின் ஒரு சிறந்த அரசியல் பாரம்பரியத்தைக் கொண்டவர். தமிழக முன்னாள் முதலமைச்சர் மறைந்த எம் கருணாநிதியின் பேரனும், தற்போதைய திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனும் ஆவார் உதயநிதி ஸ்டாலின். இவர் கோலிவுட்டில் நடிகர் மற்றும் தயாரிப்பாளருமாகவும் இருக்கிறார். இயக்குனர் எம் ராஜேஷ் இயக்கிய ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமான அவர் பின்னர் பல படங்களில் நடித்தார்.

சென்னை டான் பாஸ்கோ பள்ளியின் முன்னாள் மாணவர் இவர் சென்னையின் புகழ்பெற்ற லயோலா கல்லூரியில் உதயநிதி ஸ்டாலின், பி.எஸ்சி. விஷுவல் கம்யூனிகேஷன் படித்துள்ளார். திரைப்படங்களில் தனது வெற்றிகரமான பயணத்திற்கு இடையில் அரசியலில் ஆர்வம் காட்டத் தொடங்கிய அவர், ஜூலை 4, 2019 அன்று திமுகவின் இளைஞரணி பிரிவின் செயலாளராக தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார்.

2019 ஆம் ஆண்டில், நாடாளுமன்றத் தேர்தலில் அவர் திமுக வேட்பாளர்களுக்காக மாநிலம் தழுவிய பிரச்சாரத்தை மேற்கொண்டார். தற்போது, ​​அவர் திமுக கட்சியின் இளைஞர் பிரிவு செயலாளராக பணியாற்றி வருகிறார்.

2021 தமிழக சட்டசபை தேர்தலில் திமுக சார்பாக சேப்பாக்கம் போட்டியிட்டு உதயநிதி வெற்றிபெற்றார்.

மேலும் படிக்க

உதயநிதி ஸ்டாலின் தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் உதயநிதி ஸ்டாலின்
பிறந்த தேதி 27 Nov 1977 (வயது 48)
பிறந்த இடம் சென்னை
கட்சி பெயர் Dravida Munetra Kazhagam
கல்வி B.Sc.
தொழில் நடிகர், அரசியல்வாதி
தந்தை பெயர் மு.க ஸ்டாலின்
தாயார் பெயர் துர்கா ஸ்டாலின்
துணைவர் பெயர் கிருத்திகா உதயநிதி
துணைவர் தொழில் இயக்குனர்
குழந்தைகள் 1 மகன்(கள்) 1 மகள்(கள்)
மதம் Atheist
இணையதளம் NA

உதயநிதி ஸ்டாலின் நிகர மதிப்பு

நிகர மதிப்பு
₹29.06 CRORE
சொத்துக்கள்
₹29.08 CRORE
கடன்கள்
₹1.35 LAKHS

உதயநிதி ஸ்டாலின் சுவாரசிய தகவல்கள்

1.ஒரு கல் ஒரு கண்ணாடியில் அறிமுகமாகும் முன், உதயநிதி ஸ்டாலின் ஆதவன் திரைப்படத்தில் சிறிய ரோலில் கவுரவ வேடத்தில் நடித்தார்.

2. பிரபலமான வம்சம், யுத்தம் செய் ஆகிய திரைப்படங்களில் அறிமுகமாக உதயநிதி ஸ்டாலினுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர் இந்த திரைப்படங்களை நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

3.உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பாளரும் ஆவார். அவர் நடிகர் விஜய்யின் குருவி, நடிகர் சூர்யாவின் ஆதவன், நடிகர் கமல்ஹாசனின் மன்மதன் அம்பு மற்றும் சூர்யாவின் 7ம் அறிவு ஆகிய படங்களை தயாரித்து உள்ளார்.

4. உதயநிதி ஸ்டாலின் விண்ணைதாண்டி வருயாயா, மதராசப்பட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன் மற்றும் மைனா திரைப்படங்களையும் வெளியிட்டு உள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் அரசியலில் கடந்து வந்த பாதை

  • 2021: 2021 தமிழக சட்டசபை தேர்தலில் திமுக சார்பாக சேப்பாக்கம் போட்டியிட்டு உதயநிதி வெற்றிபெற்றார்.
  • 2019 : உதயநிதி ஸ்டாலின் ஜூலை 4, 2019 அன்று திமுகவின் இளைஞரணி பிரிவின் செயலாளராக தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். 2019 ஆம் ஆண்டில், நாடாளுமன்றத் தேர்தலில் அவர் திமுக வேட்பாளர்களுக்காக மாநிலம் தழுவிய பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

முந்தைய வரலாறு

  • 2002: வணக்கம் சென்னை மற்றும் காளி படங்களின் இயக்குனரான கிருத்திகாவை இவர் மணந்தார்.
  • 1977: உதயநிதி ஸ்டாலின் 27 நவம்பர் 1977 அன்று சென்னையில் பிறந்தார். இவர் தமிழ்நாட்டின் முன்னாள் துணை முதல்வர் மு.க ஸ்டாலின் மகன்.

உதயநிதி ஸ்டாலின் சாதனைகள்

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் உதயநிதி ஸ்டாலின் தனது நடிப்பிற்காக சிறந்த ஆண் அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருதை வென்றுள்ளார்.

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+