இனி நீங்க செல்போனை யூஸ் செய்யும் முறையே மாற போகுது! ஆப்பிள் செய்யும் தரமான சம்பவம்! சூப்பர்ல

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ஆப்பிள் சாதனங்களுக்கு இங்கே எப்போதும் தனி ரசிகர்கள் இருப்பார்கள். அவர்களை குஷிப்படுத்தும் செய்தி ஒன்று இப்போது வெளியாகியுள்ளது. அதாவது ஆப்பிள் நிறுவனம் அடுத்தாண்டு வெளியிட உள்ள ஐஓஎஸ் 18 வெர்ஷனில் மிகப் பெரிய அப்டேட் வரவிருக்கிறதாம். இது நாம் மொபைல் போனை பயன்படுத்தும் விதத்தையே மொத்தமாக மாற்றி அமைக்கும் என்று சொல்லப்படுகிறது.

இந்த காலத்தில் தொழில்நுட்பம் இதுவரை இல்லாத அளவுக்கு மிக வேகமாக வளர்ந்து வருகிறது. அதிலும் குறிப்பாக ஏஐ தொழில்நுட்பம் தான் இப்போது அசுர வேகத்தில் பாய்ந்து வருகிறது.

apple iphone

ஏஐ: ஏஐ டூல்களை பொறுத்தவரை மிக எளிதாக சாட்ஜிபிடி-க்கு முன்பு, சாட்ஜிபிடி-க்கு பிறகு என்று நாம் பிரிக்கலாம். சாட்ஜிபிடி ஏஐ டூலின் வெற்றி அடுத்தடுத்து இதுபோல பல்வேறு சாப்ட்வேர்கள் வர காரணமாக அமைகிறது. பல்வேறு நிறுவனங்களும் கூட இதுபோல தங்கள் செல்போனில் ஏஐ வசதிகளைக் கொண்டு வர வேண்டும் என்பதில் முனைப்புக் காட்டி வருகிறது. அந்த லிஸ்டில் இப்போது ஆப்பிள் நிறுவனமும் இணைந்துள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தைப் பொறுத்தவரை அவர்கள் மற்ற நிறுவனங்களைப் போல ஓராண்டில் ஏகப்பட்ட மொபைல் மாடல்களை வெளியிட மாட்டார்கள். அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஒரே ஒரு மாடலை மட்டுமே வெளியிடுவார்கள். அதன்படி இந்தாண்டு ஐபோன் 16 மாடலை வெளியிட்டார்கள். செல்போன் மாடலுக்கு எவ்வளவு முக்கியத்துவம் தரப்படுகிறதோ.. அதே அளவு முக்கியத்துவத்தை சாப்ட்வேருக்கும் ஆப்பிள் நிறுவனம் கொடுக்கும். தங்களின் புதிய ஐஓஎஸ் வெர்ஷனை அறிமுகப்படுத்தத் தனி நிகழ்ச்சியையும் ஆப்பிள் நடத்தும்.

ஆப்பிள் ஐஓஎஸ்: அதன்படி கடந்த செப். மாதம் வெளியான ஐஓஎஸ் 18ல் பல முக்கிய அப்பேட்கள் இடம்பெற்று இருந்தது. குறிப்பாக ஆன்டிராய்டு மொபைல்களில் கூகுள் அசிஸ்டன்ட் போல ஆப்பிளில் இருக்கும் சிரி மொத்தமாக மாற்றி அமைத்தது. இதற்கிடையே ஆப்பிள் நிறுவனம் அடுத்தாண்டு வெளியிட உள்ள ஐஓஎஸ் 18 வெர்ஷனில் மிகப் பெரிய திட்டத்தை வைத்து இருக்கிறதாம்.

அதாவது இப்போது சாட்ஜிபிடி மற்றும் கூகுளின் ஜெமினி போன்ற ஏஐ அசிஸ்டன்ட்களை பயன்படுத்த நாம் எதையும் டைப் செய்யத் தேவையில்லை.. குரல் மூலமாகவே உரையாடல் போலப் பேசும் வசதி இருக்கிறது. சிரி குரல் மூலம் இயங்கும் அசிஸ்டன்ட் தான் என்றாலும் அதனால் சாட்ஜிபிடி மற்றும் ஜெமினி போல மிக இயல்பான உரையாடல்களை மேற்கொள்ள முடியாது.

புதிய வசதி: அந்த சிக்கலை நீக்கி, சிரியை பக்காவான ஒரு வாய்ஸ் அசிஸ்டன்ட்டாக உருவாக்க ஆப்பிள் திட்டமிட்டு வருவதாக ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.. இதன் மூலம் மனிதர்களுடன் உரையாடும் போது எப்படி முன்பு சொன்னதைக் குறிப்பிட்டுப் பேசி கேட்க முடியுமா.. அதேபோல சிரி அசிஸ்டன்டிலும் முன்பு சொன்னதைக் குறிப்பிட்டுக் கேட்க முடியும். சிரி அதை நினைவுபடுத்தி அதற்கேற்ப பதிலைச் சொல்லுமாம்,

ஏன் முக்கியம்: இந்த புதிய வசதிகளைக் கொண்ட சிரியை LLM சிரி என்று கூறுகிறார்கள். ஐஓபிஎஸ் 19 மற்றும் மேக்ஓஎஸ் 16 அப்டேட்டின் மிக முக்கிய வசதியாக இது இருக்கும். ஏற்கனவே சாட்ஜிபிடி, ஜெமினியில் இந்த வசதிகள் இருக்கும் நிலையில், இது மட்டும் என்ன ஸ்பெஷல் என்ற கேள்வி உங்களுக்கு வரும். ஆப்பிள் என்பது பிரைவசிக்கு அதிக முக்கியத்துவம் தரும். எனவே, அதையும் மனதில் வைத்தே இந்த புதிய வாய்ஸ் அசிஸ்டன்ட் உருவாக்கப்படுமாம். இதுவே முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+