'டெக்’ துறையில் ஜாக்பாட்.. டெல், ஹெச்பி.. 32 லேப்டாப் நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்திக்கு ரெடி
டெல்லி: மத்திய அரசின் பிஎல்ஐ திட்டத்தின் கீழ் லேப்டாப் மற்றும் டேப்லெட் உற்பத்தியை இந்தியாவில் மேற்கொள்ள 32 நிறுவனங்கள் விண்ணப்பம் செய்துள்ளதாகவும், இதன் மூலம் 75 ஆயிரம் பேருக்கு நேரடியாக வேலை கிடைக்க உள்ளதாகவும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ‛மேக் இன் இந்தியா' திட்டத்தை செயல்படுத்துவதில் ஆர்வமாக உள்ளது. இந்த திட்டம் என்பது அனைத்து துறைகளிலும் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பது, புதிய தொழில் தொடங்குவதை ஊக்குவித்து வேலைவாய்ப்பை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.

இதன் ஒருபகுதியாக தான் மத்திய அரசு சார்பில் பிஎல்ஐ எனும் (production linked incentive) திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டம் என்பது ரூ.17,000 கோடி மதிப்பில் வகுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் மடிக்கணினி, டேப்லெட் உள்ளிட்டவற்றை இந்தியாவில் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை என்பது வழங்கப்படும்.
மேலும் இந்த திட்டத்தின் கீழ் 6 ஆண்டுகளில் 3.5 லட்சம் கோடிக்கு உற்பத்தியை அதிகரிக்கவும், ரூ.2,430 கோடி முதலீட்டை ஈர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு 75,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்துக்கு விண்ணப்பம் செய்ய இன்று கடைசி நாளாகும்.
இந்நிலையில் தான் பிஎல்ஐ திட்டத்தில் செயல்பட மொத்தம் எத்தனை நிறுவனங்கள் விண்ணப்பம் செய்துள்ள என்பது பற்றி மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கி கூறினார். இதுபற்றி அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:
‛‛ஐடி ஹார்ட்வேர் உற்பத்திக்கான பிஎல்ஐ(production linked incentive) திட்டத்தின் கீழ் மடிக்கணினி, டேப்லெட் உள்ளிட்டவற்றை தயாரிக்க டெல், ஹெச்பி, ஃபாக்ஸ்கான், ஃப்ளெக்ஸ்ட்ரானிக்ஸ் மற்றும் ஆப்டிமஸ் உள்பட 32 நிறுவனங்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் பல உலகளாவிய நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களுடன் சேர்ந்து உற்பத்தி செய்ய உள்ளனர்'' என்றார்.
இருப்பினும் இன்று மாலை வரை ஆப்பிள், சாம்சங் உள்ளிட்ட நிறுவனங்கள் விண்ணப்பம் செய்ய வில்லை. இன்று கடைசி நாள் என்ற நிலையில் அந்த நிறுவனங்கள் விண்ணப்பம் செய்யவில்லை. இருப்பினும் விண்ணப்பித்துள்ள நிறுவனங்கள் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் உற்பத்தியை தொடங்கும் என எதிர்பார்ப்படுகிறது.
-
IT Jobs: அனுபவம் வேண்டாம்.. நாளை ஆன்லைனில் இண்டர்வியூ! எச்சிஎல் தரும் சூப்பர் வேலை -
AIIMS Jobs: எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை! 2,668 காலியிடங்கள்! 10 டூ டிகிரி போதும்.. தேர்வர்கள் மிஸ் பண்ணிடாதீங்க -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்!












Click it and Unblock the Notifications