Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இதுதான் எதிர்காலமே! திரும்பி பார்க்க வைக்கும் கோவை.. டாடா செய்த தரமான சம்பவம்! லிஸ்ட்லயே இல்லையே

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் டாப் நிறுவனங்களில் ஒன்றான டாடா டெக்னாலஜிஸ் நிறுவனம், கோவையில் மிக முக்கியமான முதலீடு ஒன்றைச் செய்துள்ளது.

தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்து முக்கிய நகரங்களில் ஒன்றாகக் கோவை இருக்கிறது. இதன் காரணமாகவே வந்தே பாரத் தொடங்கிப் பல முக்கிய திட்டங்களிலும் கோவை முக்கியத்துவம் பெறுகிறது.

 Tata Technologies opens vehicle-software focused Innovation Centre in Coimbatore

மேலும், குறிப்பிட்ட துறை என்று இல்லாமல் விவசாயம், ஐடி துறை என்று பல்வேறு பன்முகம் கொண்ட வளர்ச்சியைக் கோவை பெற்றுள்ளது. இதனால் பல்வேறு நிறுவனங்களும் கோவையில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன,

டாடா டெக்னாலஜிஸ்: அப்படித்தான் இப்போது டாடா டெக்னாலஜிஸ் நிறுவனமும் முக்கிய முதலீட்டைச் செய்துள்ளது. டாடா டெக்னாலஜிஸ் நிறுவனம் சமீபத்தில் தான் ஐபிஓ வெளியிட்டிருந்தது. இது லிஸ்ட் ஆகும் போதே முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தைக் கொடுத்திருந்தது. டாடா டெக்னாலஜிஸ் ஐபிஓ குறித்த தகவல்களைச் செய்திகளில் கூட இடம்பிடித்தது. அந்தளவுக்கு முக்கியமானதாக இது இருந்தது.

இதற்கிடையே டாடா டெக்னாலஜிஸ் நிறுவனம் கோவையில் தனது முதல் இன்னவேஷன் சென்டரை (innovation centre) தொடங்கியுள்ளது. இந்த இன்னவேஷன் சென்டர் வாகனங்கள் குறித்த ஆய்வுகளில் கவனம் செலுத்த உள்ளது. குறிப்பாக வாகன சாப்ட்வேர் மேம்பாடு, டெஸ்டிங் ஆகியவற்றில் சோதனை செய்யவுள்ளனர். சர்வதேச அளவிலான பல ஆய்வுகளை அங்கே நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

பல நன்மைகள்: இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஒரு சிறந்த உலகத்தை உருவாக்க வேண்டும் என்பதே எங்கள் இலக்கு. வாகனங்களுக்குத் தேவைப்படும் ஆய்வுகளை இங்கே நடத்தத் திட்டமிட்டுள்ளோம். வாகனங்களை டிசைன் செய்வது முதல் விற்பனைக்குப் பின் சேவை வரை அனைத்தையும் இங்கிருந்து செய்யத் திட்டமிட்டுள்ளோம்.

இதன் உலகளவில் மேற்கொள்ளப்படும் திட்டங்களில் கோவையைச் சேர்ந்த உள்ளூர் இளைஞர்களால் வேலை செய்ய முடியும். வாகன மென்பொருள் துறையில் தேவைப்படும் தீர்வுகளை இது நமக்கு வழங்கும்" என்று அவர் தெரிவித்தார்.

டாடா டெக்னாலஜிஸ்: இது குறித்து டாடா டெக்னாலஜிஸ் சிஇஓ வாரன் ஹாரிஸ் கூறுகையில், "எதிர்காலத்தில் வாகனங்கள் இயங்குவது தொடர்பான மென்பொருட்களை உருவாக்கவே இந்த முன்னோடி திட்டத்தைத் தொடங்கியுள்ளோம். தற்போது முதற்கட்டமாக உள்ளூர்ப் பகுதியைச் சேர்ந்த 100 வாகன மென்பொருள் வல்லுநர்களுக்கு வேலை கொடுக்கிறோம். விரைவில் இந்த மையத்தை விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளோம்" என்று அவர் தெரிவித்தார்.

கோவையில் தொடர்ச்சியாக பல்வேறு நிறுவனங்கள் முதலீடு செய்துள்ள நிலையில், இது முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. மேலும், ஆட்டோமொபைல் துறையில் மின்சார வாகனங்கள் தான் எதிர்காலமாகப் பார்க்கப்படுகிறது. அப்படி இருக்கும் போது கோவையில் இந்த ஆய்வகத்தை டாடா டெக்னாலஜிஸ் அமைப்பது ரொம்பவே முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+