நாடு முழுக்க உள்ள.. ஆண்ட்ராய்டு போன்களுக்கு.. சரியாக 1.35 மணிக்கு வந்த அலர்ட் மெசேஜ்.. என்ன காரணம்?
சென்னை: இந்தியா முழுக்க இன்று கிட்டத்தட்ட 90 சதவிகித ஆண்ட்ராய்டு போன் யூசர்களுக்கு எச்சரிக்கை மெசேஜ் ஒன்று அனுப்பப்பட்டது. இந்த மெசேஜ் மக்கள் இடையே விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆண்ட்ராய்டு போன் இப்போது பலராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஸ்மார்ட்போன்கள் அடிப்படையில் சிறிய கணினிகள் என்பதை மக்கள் மறந்துவிடுகிறார்கள். நாசா மூலம் நிலவிற்கு மனிதன் அனுப்பப்பட்ட போது நாசாவிடம் இருந்ததை விட பெரிய தொழில்நுட்பம் நம்முடைய ஆண்ட்ராய்டு போன்களில் உள்ளது

ஆண்ட்ராய்டு போன் பயன்பாடு இந்தியாவில் அதிகம் ஆகி உள்ள நிலையில்தான் தற்போது இந்திய அரசு மூலம் ஆண்ட்ராய்டு யூசர்களுக்கு முக்கியமான ஒரு மெசேஜ் அனுப்பப்பட்டு உள்ளது. இன்று அனுப்பப்பட்ட மெசேஜில் "This is a SAMPLE TESTING MESSAGE sent through Cell Broadcasting System by Department of Telecommunication, Government of India. Please ignore this message as no action is required from your end. This message has been sent to TEST Pan-India Emergency Alert System being implemented by National Disaster Management Authority. It aims to enhance public safety and provide timely alerts during emergencies." என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
அதாவது, இந்திய அரசின் தொலைத்தொடர்புத் துறையின் செல் ப்ராட்காஸ்டிங் சிஸ்டம் மூலம் அனுப்பப்பட்ட மாதிரி சோதனை மெசேஜ் ஆகும் இது. உங்கள் தரப்பில் இந்த மெசேஜ் தொடர்பாக நீங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க தேவையில்லை என்பதால், இந்த செய்தியை புறக்கணிக்கவும். தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் செயல்படுத்தப்பட்டு வரும் அகில இந்திய அவசர எச்சரிக்கை சிஸ்டத்தின் சோதனைக்காக இந்த செய்தி அனுப்பப்பட்டுள்ளது. இது மக்களின் பொது பாதுகாப்பை மேம்படுத்துவதையும் அவசர காலங்களில் சரியான நேரத்தில் எச்சரிக்கைகளை வழங்குவதையும் உறுதி செய்வதற்காக இந்த சோதனை செய்யப்பட்டு உள்ளது என்று விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
என்ன காரணம்?: மக்களுக்கு அனுப்பப்பட்ட இந்த மெசேஜ் இந்திய தேசிய பேரிடர் ஆணையம் மூலம் அனுப்பப்பட்ட மெசேஜ் ஆகும். பேரிடர் காலங்களில் இந்தியா முழுக்க ஒரே நேரத்தில் அவசர மெசேஜ் அனுப்புவதை சோதிக்கும் விதமாக இந்த டெஸ்ட் செய்யப்பட்டது.

உதாரணமாக போர் காலங்களில் மக்களுக்கு வெளியேற்ற உத்தரவு உள்ளிட்ட அவசர மெசேஜ்களை அனுப்ப வேண்டும் என்பதற்காக இந்த வசதி பயன்படுத்தப்படுகிறது. இதுதான் இன்று அரசு மூலம் சோதனை செய்யப்பட்டு உள்ளது.
இந்த அமைப்பின் தரம், வேகம் ஆகியவை குறித்து சோதனை செய்யும் விதமாக அடிக்கடி இந்த சோதனை அரசு மூலம் செய்யப்படுகிறது . அதன்படி ஆண்ட்ராய்டு போன் யூசர்களுக்கு இன்று பிற்பகல் 1.35 மணிக்கு மெசேஜ் அனுப்பப்பட்டு சோதனை செய்யப்பட்டு உள்ளது.
நிலநடுக்கம், சுனாமி, தீவிரவாத தாக்குதல், போர் சமயங்களில் மக்களுக்கு எச்சரிக்கை கொடுக்கும் விதமாக அலர்ட் மெசேஜ் அனுப்பப்படும். அதுதான் இன்று சோதனையும் செய்யப்பட்டு உள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ஏற்கனவே இந்த அமைப்பு உள்ள நிலையில் இந்தியாவிலும் சோதனை செய்யப்படுகிறது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications